தினமும் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் என்று சொன்னதற்கு காரணம், உடம்பில் இருக்கும் அழுக்குகள் மட்டும் நீக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, உடம்பு அதனுடைய சூட்டை குறைத்துக் கொள்ளவும், உடம்பை குளிர வைக்கவும் தான் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள்.
ஆனால் இன்று காலையில் குளிக்க கூடிய பழக்கமே நிறைய பேருக்கு இல்லை. மாலை நேரத்தில் குளிக்க கூடிய பழக்கத்தை கொண்டு வந்து விட்டோம். காலை மாலை இருவேளை குளிக்கலாம் தவறு கிடையாது. ஆனால் காலையில் குளிக்காமல் இருக்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் குளிக்கும் போது இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க. அப்படி செய்தால் உங்களுக்கு சரும பிரச்சனைகள், முகப்பரு, தோல் சுருக்கம், இப்படி தேவையற்ற பிரச்சினைகள் வருவதற்கு நீங்கள் குளிக்கும் முறையும் ஒரு காரணம் தான்.
குளிக்கும்போது செய்யக்கூடாத மூன்று தவறுகள்.
உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக உள்ளது. ரொம்பவும் டிரை ஸ்கின் ஆக உள்ளது என்றால், நீங்கள் அதிக நேரம் குளிக்க கூடாது. சில பேர் 20 நிமிடம் 30 நிமிடம் எல்லாம் சோப்பு போட்டு குளிப்பாங்க. இப்படி நீண்ட நேரம் குளிப்பதன் மூலம் உங்களுக்கு சருமம் அதிகமாக வறட்சியாக வாய்ப்புகள் உள்ளது. ரொம்பவும் டிரை ஸ்கின் உள்ளவர்கள் வெறும் 5 நிமிடம் மட்டுமே குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண மான சருமணத்தை கொண்டவர்கள், 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை குளிக்கலாம் அவ்வளவுதான்.
அடுத்தது பெரும்பாலானவர்களுடைய சருமத்தின் PH லெவல் நார்மலாக 4 லிருந்து 6 க்குள் இருக்கும். உங்களுடைய சருமத்தின் PH லெவல் என்ன என்று தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தது போல சோப்பை பயன்படுத்த வேண்டுமே தவிர, உங்கள் சருமத்தின் PH லெவலை விட, சோப்பின் PH லெவல் ரொம்பவும் அதிகமாக இருக்கக் கூடாது.
அப்படிப்பட்ட சோப்புகளை போட்டு குளிக்கும் போது, நம்முடைய சருமத்தில் முகப்பரு அலர்ஜி கொப்பளங்கள் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. ரொம்பவும் அதிகமான PH லெவல் உள்ள சோப்பை பயன்படுத்தும் போதும் நம்முடைய சரும பிரச்சனைகள் அதிகரிக்கும். இதை முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல சில பேர் குளிக்கும்போது ரொம்பவும் சூடாக இருக்கும் தண்ணீரில் குளிப்பார்கள். அதிகப்படியான சூடு இருக்கும் தண்ணீரில் குளிக்கும் போது நம்முடைய தோல் சீக்கிரம் சுருங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சருமம் ரொம்பவும் வறட்சி அடைவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்கலாமே: பளிச்சென்று பிரகாசமான முகத்தை பெற
வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது தான் நம்முடைய சருமத்திற்கு நன்மையை தரும். குறைந்தபட்சம் மேலே சொன்ன இந்த மூன்று விஷயங்களை சரியாக கடைபிடித்து சருமத்தை பராமரித்து வந்தாலே நீண்ட நாள் இளமையாக இருக்கலாம், சரும பிரச்சனைகள் வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம் தேவைப்படுபவர்கள் இதை இந்த அழகு குறிப்பு ட்ரை பண்ணி பாருங்க.