நாம் ஒருவரை பார்க்கும் பொழுது முதலில் அவருடைய முகம் தான் நமக்கு தெரியும். அதற்குப் பிறகுதான் அவர்களுடைய ஆடைகளோ, ஆபரணங்களோ எதுவாக இருந்தாலும் தெரியும். ஒருவரை பார்த்ததும் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்றால் அதற்கு அவர்களுடைய முகமே காரணமாக திகழ்கிறது. ஒருவருடைய முகம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களும் உற்சாகமாக இருப்பார்கள், அவர்களிடம் உரையாடக்கூடிய ஒவ்வொருவரும் உற்சாகமாக இருப்பார்கள். அப்படி பிரகாசமான முகத்தை பெறுவதற்கு தக்காளியை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
பிரகாசமான முகத்தை பெற
இயற்கையிலேயே நம்முடைய முகத்தை பிரகாசமாகவும் அழகாகவும் மாற்றுவதற்கு பல பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை நாம் உபயோகப்படுத்தினோம் என்றால் நம் முகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அழகாகவும் இளமையாகவும் இருக்க முடியும். அந்த வகையில் நம்முடைய இளமையையும் முகப்பொலிவையும் தக்க வைத்துக் கொள்வதற்கும், இழந்த முகப்பொலிவை திரும்பப் பெறுவதற்கும், முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்குவதற்கும் உதவக் கூடியதாக திகழ்வதுதான் தக்காளி.
தக்காளியில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். நம் உடலுக்கு இந்த சத்துக்களை அனைத்தும் எந்த அளவிற்கு உபயோகப்படுகிறதோ அதே போல் தான் நம்முடைய தோலுக்கும் இந்த சத்துக்கள் உதவுகிறது. இதற்கு இந்த பேஸ் பேக்கை நாம் மாதத்தில் இரண்டு முறை போட்டாலே போதும். நம்முடைய முகம் எப்பொழுதுமே பிரகாசமாக இருக்கும். ஒரு முறை போட்டாலே நல்ல பலன் தெரியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு பேஸ் பேக்காக தான் இது திகழ்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் அரை ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவையும் சேர்க்க வேண்டும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். அவ்வாறு தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ் பேக்கை எடுத்து முகத்தில் தடவி அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு குளிந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இதில் நாம் சேர்த்து இருக்கக் கூடிய ஒவ்வொரு பொருட்களும் நம் முகத்திற்கு அதீத பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. உடனடி பொலிவையும் இது ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே:அழகுக்கு அழகு சேர்க்கும் வேப்பிலை
எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் பியூட்டி பார்லர் செல்லாமல் இந்த முறையில் வீட்டிலே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் அவர்களுடைய அழகு மேம்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.