இந்த நேரத்தில் குளிப்பவர்களுக்கு கட்டாயம் கடன் பிரச்சனையில் இருந்து விமோசனமே கிடைக்காது. நீங்கள் குளிக்கும் நேரம் என்ன?

kadan

இன்று கோடீஸ்வரராக இருக்கும் பல பேர் என்ன செய்து கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்று தெரிந்து கொண்டு, அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும் என்று நினைப்போம். அதாவது, அவர்கள் எப்படி இவ்வளவு விரைவாக பணக்காரர்கள் ஆனார்கள்? என்பதை மட்டும் தான் நம்முடைய கண்கள் பார்க்குமே தவிர, அந்த முன்னேற்றத்திற்கு பின்பு எத்தனை கடின உழைப்பு இருக்கிறது என்பதை நம்முடைய மூளை பார்ப்பதே கிடையாது. பல கோடீஸ்வரர்கள் கடைப்பிடிக்கும் பல விஷயங்களில், இந்த பிரம்ம முகூர்த்த குளியல் நேரமும் ஒன்று. இன்று பணக்கார வரிசையில் இருக்கும் பல மனிதர்கள் பிரம்மமுகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

bathing

பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிப்பதுயும் தாண்டி, அவர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்கள். கடன் இல்லாத சுகபோக வாழ்க்கையை நாம் அடைய வேண்டும் என்றால் நம் குளிக்கின்ற நேரத்தை மாற்றிக் கொண்டாலே போதுமே! குளியல் என்றாலே அது காலையில் தான். இன்று நவநாகரிகம் என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருப்பவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி மாலை 5 மணிக்குத்தான் குளிக்கவே செல்கிறார்கள். நிறைய பேர் வீடுகளில் இது இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. சாத்திரத்தை மாற்றினால் சங்கடங்கள் உண்டாகும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம். சரி, எந்த நேரத்தில் குளித்தால், என்ன பலனை அடைய முடியும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா.

காலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிக்கு தங்களுடைய காலை கடமைகளை முடித்துவிட்டு, குளித்து சுத்தமாவர்கள் நிச்சயம் ஒரு நாள் இல்லை என்றாலும், ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகிய தீருவார்கள். 4 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு, மறுபடியும் போய் படுத்து தூங்குரவங்கள சொல்ல வரல. எழுந்து குளித்து அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணிகளை, இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிளான் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட பழக்கத்தை தொடர்ச்சியாக செய்து வருபவர்கள் என்றும் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது.

bathing

5.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள், சூரிய உதயத்திற்கு முன்பாகவே குளித்து முடித்து 6 லிருந்து 6.30க்குள் சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பெறும். தங்களுடைய தேவைக்கு ஏற்ப பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். வறுமை இருக்காது. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இப்படியாக பல நல்ல மாறுதல்கள் அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் வந்து கொண்டே இருக்கும். அவங்க வாழ்க்கைக்கு தேவையான நலன்கள் எளிதில் அவர்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

இவ்வளவு அதிகாலை வேளையில் குடிக்க முடியாதவர்கள் கூட காலை 8 மணிக்கு முன்பாக குளித்து முடித்து இருக்க வேண்டும். 8 மணிக்கு மேல் குளிப்பதில் அர்த்தமே கிடையாது. எட்டு மணிக்கு மேல் குளிப்பவர்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ வில்லையா? பணக்காரர்களாக இருப்பது இல்லையா? என்ற கேள்விகள் சில பேரது மனதில் எழலாம்.

bathing in river

நிச்சயம் 8 மணிக்கு மேலாக குளிப்பவர்கள் அல்லது காலையில் சுத்தமாக குளிக்காமல் இருந்து மாலை நேரத்தில் குளிப்பவர்கள், இப்படியாக நேரம் தவறி குளிக்கும் பழக்கத்தை வைத்திருப்பவர்களது வீட்டில் நிச்சயம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. நேரம் தவரி குளிப்பவர்கள் வீட்டிலும் மகிழ்ச்சி இருக்கும். அவர்களுடைய வீட்டிலும் பண வரவு இருக்கும். ஆனால் எதுவும் நிலைத்திருக்காது. சண்டை சச்சரவுகள் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய மகிழ்ச்சி அடிக்கடி கெடும். வரக்கூடிய வருமானம் கையில் நிரந்தரமாகத் தங்காமல் வீண் விரயமாகி கொண்டே செல்லும். பின் தேவைக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறாக தொடர் பிரச்சனைகளை அவர்கள் சந்தித்து வரத்தான் செய்கிறார்கள்.

kadan

சில பேர் எத்தனை மணிக்கு எழுந்து குளித்தாலும் அவர்களுடைய வாழ்க்கை சுகமாக இருக்கலாம். அவர்களுடைய கர்ம வினை, பாவ புண்ணிய கணக்குகள் படி, அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் எனும் விதி. அவர்களது ஜாதக கட்டம் உச்சத்தில் இருக்கும். அவர்கள் எப்படி இருந்தாலும் நன்றாக தான் இருப்பார்கள். அவர்களை எந்த சாஸ்திர சம்பிரதாயங்களும் எதுவுமே செய்யாது. நேரம் சரியில்லாதவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகளின் மூலம் கூட, பெரிய பெரிய கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதற்கு வம்பு? காலையில் எழுந்து குளித்து விட்டால் பிரச்சனையில் இருந்து பாதி தப்பித்துக் கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
புதிய வீட்டிற்கு குடியேறுபவர்கள் இந்த 1 பொருளை கொண்டு சென்றால் கோடீஸ்வரர் ஆவது உறுதி தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.