பாசிப்பருப்பை வைத்து செய்யக்கூடிய இந்த சுவையான குழம்பை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்

kumbakonam-kadapa4
- Advertisement -

தினமும் இட்லி, தோசை செய்வதென்பது அனைவரின் வீட்டிலும் வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதற்காக தொட்டுக்கொள்ள தினமும் ஏதாவது ஒரு சைடிஷ் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் சட்னி, சாம்பார் இவற்றை மட்டும் தான் பெருமளவில் செய்கின்றோம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிப்பட்ட உணவுகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கும். அவ்வாறு கும்பகோணத்தில் இந்த பாசிப்பருப்பு வைத்து செய்யப்படும் கடப்பா மிகவும் விசேஷமானதாகும். கும்பகோணத்தில் இருக்கும் அனைவரது வீட்டிலும் இந்த கடப்பாவை செய்து இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள் இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

idli-sambar

தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 7, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், பெரிய உருளைக்கிழங்கு – 1, பச்சைப் பட்டாணி – 50 கிராம், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பிரியாணி இலை – 1, பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 1, தேங்காய் துருவல் – ஒரு கப், சோம்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் குக்கரில் பாசிப் பருப்பை கழுவி சேர்த்து, அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டு.ம் பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

pasi-paruppu.

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு அரை ஸ்பூன், சீரககம் அரை ஸ்பூன் ,பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்தக் கலவையில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, மற்றும் 7 பச்சைமிளகாய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

kumbakonam-kadapa3

இந்தத் தேங்காய் பேஸ்ட்டை குழம்பில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். இதனை அனைத்து விதமான டிஃபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

- Advertisement -