எவ்வளவு செலவு செய்தும் முகத்தில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லையா? ஹைபர் பிக்மென்டேஷனை 7 நாட்களில் குறைக்கும் குங்கிலியம்.

face5
- Advertisement -

முகத்தில் இருக்கும் ஹைப்பர் பிங்க் பிக்மென்டேஷனை குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. எத்தனை பியூட்டி பார்லருக்கு சென்றாலும் எவ்வளவு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டாலும், நம்முடைய முகத்தில் இருக்கும் இந்த கருத்திட்டு அவ்வளவு சீக்கிரத்தில் போகாது. சொல்லப்போனால் என்ன செய்தாலும் பிக்மெடேஷன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். முகத்தில் இந்த கருமை நிறம் நமக்கு ரொம்ப ரொம்ப பிரச்சனையாக இருக்கும். இதை சரி செய்ய இயற்கையான முறையில் ஒரு குறிப்பு உள்ளது. அதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். 7 நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

இந்த குறிப்புக்கு நமக்கு குங்கிலியம் 20 கிராம், நல்லெண்ணெய் 100 ml தேவைப்படும். குங்கிலியம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளை குங்கிலியம் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் செக்கில் ஆட்டிய எண்ணெயாக இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100ml நல்லெண்ணெயை ஊற்றி, இந்த 20 கிராம் குங்கல்யத்தை பொடித்து போட்டு நன்றாக கரைத்து விடுங்கள். அந்த எண்ணெயில் குங்கிலியம் சூடாகும் போது கரைந்து விடும். குங்கிலியம் எண்ணெயில் நன்றாக கரைந்து உடன், அடுப்பை அணைத்துவிட்டு, இந்த எண்ணெயை நன்றாக ஆற வைத்து விட வேண்டும். (காய்ச்சிய இந்த எண்ணெயை வடிகட்டி தண்ணீரோடு கலக்கப்போகின்றோம்.)

ஒரு பாத்திரத்தில் 100 எம்எல் அளவு நல்ல தண்ணீரை ஊற்றி, காய்ச்சி வைத்திருக்கும் எண்ணெயை வடிகட்டி, இந்த தண்ணீரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீருடன் குங்கிலியம் சேர்த்த நல்லெண்ணையை நன்றாக அடித்து கலக்க வேண்டும். 20 நிமிடங்கள் நன்றாக பீட் செய்யும்போது இது நமக்கு வெள்ளை நிறத்தில் ஒரு கிரீம் போல கிடைத்துவிடும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்தால் ஃப்ரிட்ஜ் இல்லாமலேயே 6 மாதத்திற்கு கெட்டுப் போகாது.

- Advertisement -

இரவு தூங்க செல்லும் போது முகத்தை நன்றாக கழுவி விட்டு, இந்த கிரீமை பிக்மென்டேஷன் உள்ள இடத்தில் லேசாக தடவி விடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து அது காய்ந்து விடும். அப்படியே தூங்கச் செல்லலாம் மறுநாள் எப்போதும் போல முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

ஏழு நாட்கள் இந்த கிரீமை பயன்படுத்தி வரும்போது உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். அதன் பின்பு உங்களுக்கு இந்த கிரீம் பிடித்திருந்தால் தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். முகத்தில் இருக்கும் இந்த பிக்மென்ட்டேஷன் கண்ணுக்கே தெரியாமல் கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: பெண்களின் வாழ்க்கையில் பெரிய பெரிய துன்பங்கள் வருவதற்கு காரணம், அவர்கள் செய்யும் இந்த ஒரு சிறு தவறு தான்.

பின்குறிப்பு: உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் என்றால் இந்த கிரீமை ஒரு பேட்ச் டெஸ்ட் எடுத்துக்கோங்க. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

- Advertisement -