தெய்வங்களில் பெண் தெய்வங்களுக்கு மிகவும் உகந்த ஒரு பொருளாக திகழ்வதுதான் குங்குமம். அனைத்து விதமான ஆன்மீக காரியங்களுக்கும் குங்குமம் இல்லாமல் நடைபெறாது. மங்களகரமான பொருட்களுள் குங்குமமும் ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட குங்குமத்தை வைத்து எப்படி சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குங்குமத்திற்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. யார் ஒருவர் தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை வைத்திருக்கிறார்களோ அவர்களை யாராலும் வசியம் செய்ய முடியாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்ததாகவே குங்குமம் திகழ்கிறது. மேலும் குங்குமத்தை வைத்து பெண் தெய்வங்களை நாம் அர்ச்சனை செய்யும் பொழுது அந்த குங்குமத்திற்கு சக்தி என்பது பல மடங்கு அதிகரிக்கும் என்றுதான் கூற வேண்டும்.
அப்படிப்பட்ட குங்குமத்தை வைக்கக்கூடிய பொருளாக தான் குங்குமச்சிமிழ் திகழ்கிறது. இந்த குங்குமச்சிமிழ் ஆனது வெள்ளியில் இருப்பது மிகவும் உத்தமம். மகாலட்சுமி தாயாருக்கு உரிய உலோகமாக கருதப்படக் கூடிய வெள்ளியில் குங்குமச்சிமிழை வாங்கி வைத்துக் கொள்வது என்பது மகாலட்சுமியின் அருளை பெறக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படி வெள்ளியில் குங்குமச்சிமிழ் இல்லை என்பவர்கள் பித்தளையில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் மற்ற உலோகங்களில் வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மற்ற உலோகங்கள் எதிர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. இந்த குங்குமச்சிமிழ் அடியில் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் இந்த இரண்டு நாணயத்தில் ஏதாவது ஒரு நாணயத்தை போட்டு அதற்குமே தாழம்பூ குங்குமத்தை போட வேண்டும். இந்த குங்குமத்திற்கு மேல் ஒரே ஒரு துளசி இலையை வைத்து குங்குமச்சிமிழை மூடி பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.
தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிடும் பொழுது இந்த குங்குமச்சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி தினமும் யார் ஒருவர் தன்னுடைய நெற்றியில் இந்த குங்குமத்தை வைத்து கொள்கிறார்களோ அவர்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். நினைத்தது நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இவை இரண்டும் நடந்து விட்டாலே அவர்களுடைய வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும் என்று தான் அர்த்தம்.
இந்த குங்குமச்சிமிழில் இருக்கக்கூடிய துளசியை தினமும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதத்திற்கு ஒருமுறை மட்டும் மாற்றினால் போதும். துளசி இலை காய்ந்திருந்தாலும் அந்த குங்குமத்திலேயே இருக்கட்டும். அதனால் தவறு ஒன்றும் கிடையாது. மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த குங்குமச்சிமிழில் இருக்கக்கூடிய துளசி இலையை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு அதில் இருக்கக்கூடிய குங்குமத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு அடியில் இருக்கக்கூடிய நாணயத்தை எடுத்து கோவில் உண்டியலில் சேர்த்து விட்டு மறுபடியும் புதிதாக ஒரு நாணயத்தை வைத்து குங்குமத்தை வைத்து அதற்கு மேல் துளசி இலையை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வீடு சுபிட்சம் பெற பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு
மிகவும் எளிமையான இந்த குங்குமச்சிமிழ் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும், வெற்றிகள் உண்டாகும்.