வீட்டில் இருக்கும் இந்த 1 பொருளை இப்படி மட்டும் பயன்படுத்தக் கூடாது! தெரியாமல் உபயோகித்தால் கடன் தொல்லையும் அதிகமாகும் தெரியுமா?

kunguma-chimizh-cash

வீட்டில் நாம் வாங்கி வைக்கும் முக்கியமான சில பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. முக்கியமாக உணவு தானியங்கள், கல் உப்பு, ஊறுகாய், அரிசி, மஞ்சள் போன்ற பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கும் பொழுது எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் வீட்டில் தெய்வ கடாட்சத்தை நிலைத்து நிற்க செய்ய முடியும் என்பது சாஸ்திரம் கூறும் நம்பிக்கை. அவ்வரிசையில் இந்த ஒரு பொருளும் வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது என்ன பொருள்? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

salt1

சில வீடுகளில் இந்த பொருட்கள் இல்லாமல் கூட இருக்கலாம். இது வீட்டில் கடன் தொல்லையை அதிகரிக்கச் செய்யும். வீட்டில் அரிசியும், கல்லுப்பும் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை சுத்தமாக துடைத்து எடுத்தால் நிச்சயமாக அந்த வீட்டில் தரித்திரம் குடிகொள்ளும். தொடர்ந்து பிரச்சனைகளும், தேவையில்லாத உடல் நல கோளாறுகளும், வீண் விரயங்களும் ஏற்படும். எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் ஒரு ரூபாயைக் கூட உங்களால் சேர்த்து வைக்க முடியாமல் போகும்.

அதே போல வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களில் மஞ்சளும், குங்குமமும் அடங்கும். வீட்டின் மங்களகரமான பொருட்களாக இருக்கும் இந்த மஞ்சள் மற்றும் குங்குமம் வீட்டில் எப்பொழுதும் குறையவே கூடாது. இவற்றை முழுமையாக தீர்ந்த பிறகு வாங்குவது என்பது தவறான செயலாகும். தீர்ந்து போகும் முன்பே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குங்குமத்தை குறையாமல் பார்த்துக் கொண்டால் அந்த வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

kungumam

குங்குமத்தை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கக் கூடாது. அந்த காலத்திலெல்லாம் குங்குமத்தை குங்கும சிமிழில் தான் வைப்பார்கள். குங்குமச்சிமிழ் வெள்ளி அல்லது எவர் சில்வர் உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கலாம். கல்யாண தம்பதியினருக்கு குங்குமச்சிமிழ் வாங்கிக் கொடுத்தால்! வாங்கிய அவர்களுக்கும், கொடுத்த உங்களுக்கும் சுமூகமான உறவு ஏற்படும். இதை இன்று பெரும்பாலும் செய்து வரும் ஒரு விஷயம் தான் என்றாலும் இதனை தெரிந்து வைத்திருப்பதும் நல்லது தான்.

- Advertisement -

குங்குமச்சிமிழ் வெள்ளியில் இருப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும். ஒரு சுப காரியத்திற்கு குங்குமம் கொடுக்க வேண்டுமென்றால் அதை வெள்ளியில் ஆன குங்குமச்சிமிழ் ஆக இருப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக இன்று பல்வேறு உலகங்களிலும், பிளாஸ்டிக் டப்பாகளிலும் அடைத்து விற்கப்படுகிறது.

kumkum-rice

மரத்தாலான குங்குமச்சிமிழை பயன்படுத்துவதும் நல்லது தான். பிளாஸ்டிக் டப்பாக்களில் குங்குமத்தை வைப்பது நல்லதல்ல. தினந்தோறும் நெற்றியில் குங்குமச் சிமிழில் இருந்து எடுத்து வைக்கப்படும் குங்குமத்தை சுமங்கலிப் பெண்கள் கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய மாங்கல்ய பலம் கூடும்.

இதையும் படிக்கலாமே
தவறியும் இந்த பொருட்களை, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தானமாக வாங்க கூடாது. அது உங்களுக்கு தரித்திரத்தை ஏற்படுத்தும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.