என்னதான் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடுகிறதா? செவ்வாய் கிழமை இப்படி தீபம் ஏற்றுங்கள் கையில் காசு புழங்கும்.

kungumam-vilakku

ஒரு சிலருக்கு எல்லாம் பணம் பல வழிகளில் வரும். ஆனால் எப்படி? எந்த வழியில் வந்தாலும் அதே போல வந்த வழியே சென்றும் விடும். அவர்களுக்கு முந்தய சில காலம் வரை வருமானம் என்பதே கஷ்டமாக இருந்திருக்கும். நல்ல நேரம் அமைந்து அதன் பிறகு எவ்வளவு பணம் வந்தாலும் அந்த பணம் நிலைப்பதில் பிரச்சனைகள் நீடிக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இதற்கான பரிகாரம் தான் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

money

பணம் சம்பாதிப்பதில் தான் பிரச்சனை என்றால் அதற்கான தீர்வு நம்முடைய உழைப்பிலும், திறமையும் இருக்கிறது. நாம் சற்று கடினமாக உழைத்தால் நமக்கு தேவையான பணத்தை ஈட்டி விட முடியும். ஆனால் அப்படி உழைத்து கிடைக்கும் பணம் உண்மையில் நம்முடைய ஆசைகளை நிறைவேற்றுகிறதா? என்பதில் தான் சூட்சமம் அடங்கியுள்ளது.

நீங்கள் ஏதாவது ஒன்றை மனதில் ஆசையாக நினைத்து வைத்திருக்கலாம். அடுத்த மாதம் நம்மிடம் இருக்கும் பணத்தில் இதை வாங்க வேண்டும், அதை வாங்க வேண்டும் என்கிற கனவுகள் இருக்கும். ஆனால் அதை நிறைவேற்றும் முன்னரே கையில் இருக்கும் பணம் மொத்தமும் வேறு ஒரு விஷயத்திற்காக செலவு ஆகிவிடும். கடைசி வரை நீங்கள் நினைத்ததை வாங்க முடியாமலேயே போய்விடும்.

money

இதில் பொருள் மட்டுமல்ல, நினைத்த காரியங்களும் இப்படித் தான் நடக்கும். இந்த நாளில் அங்கு செல்ல வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று ஏதாவது நினைத்து வைத்திருந்தால் அதை செய்ய முடியாமலேயே தடை ஏற்பட்டு விடும். இதற்கு முழு முதற் காரணம் தெய்வ குறை தான்.

- Advertisement -

வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றாமல் இருந்தால் இப்படி எல்லாம் நடக்கும். அது போல் உங்களுடைய நியாயமான கனவுகள் தடைபடுவதற்கு நீங்கள் அறியாமல் செய்த ஏதாவது ஒரு பாவமும் காரணமாக அமைந்து விடுகிறது. ஒருமுறை, இருமுறை நடந்தால் பரவாயில்லை தொடர்ந்து இதே போல் நடந்து கொண்டிருந்தால் நீங்கள் நிச்சயம் பரிகாரம் செய்தால் உங்களுடைய பிரச்சனை தீர்ந்து விடும்.

kula dheivam

நீங்கள் பெரிதாக செலவு செய்து ஒன்றும் செய்ய தேவையில்லை. உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை அன்று இந்த பரிகாரத்தை தொடங்குங்கள். தொடர்ந்து ஆறு செவ்வாய்க் கிழமைகளில் இது போல் தீபமேற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுடைய கனவுகள் நிறைவேறும், லட்சியங்கள் சாத்தியப்படும்.

agal vilakku

எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதனை தகர்க்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு. எப்போதும் போல் பூஜையறையை சுத்தம் செய்து, அலங்காரங்கள் முடிந்த பின் குலதெய்வ படம் இருந்தால் அதனை வைத்து அதற்கு முன்பாக ஒரு தட்டில் குங்குமத்தை கொட்டி அதன் மீது அகல் தீபம் புதியதாக ஒன்றை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு திரிகளை திரித்து ஒன்றாக செய்து தீபம் ஏற்றுங்கள்.

kungumam

இது போல் ஆறு வாரங்கள் தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் குலதெய்வத்தை நினைத்து குங்குமத்தில் தீபம் ஏற்றி வந்தால் உங்களுக்கு இருக்கும் தடைகள் அத்தனையும் நீங்கும். நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வருமானம் பெருகும். காரியம் வெற்றியாகும். நினைத்தது நடக்கும். ஒரு பொருளை வாங்க நினைத்தால் அதனை நல்லபடியாக வாங்க முடியும். தொடர் தடைகள் விலகி ஜெயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டங்களுக்கு, நாம் சாப்பிடும் சாப்பாடும் ஒரு காரணம்! சாப்பாட்டில் தோஷம் எப்படி வரும்! அந்த தோஷம் நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.