வெளியில் செல்லும் பொழுது உங்கள் நெற்றி இப்படி இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? கருப்பு பொட்டு வைக்கும் பெண்களே உஷார்!

bindi-vibuthi
- Advertisement -

நெற்றியில் மங்கள அறிகுறியாக பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வதால் தீய பார்வைகள் அவர்கள் மேல் விழாது என்பார்கள். நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். திருமணம் ஆகாத பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது அந்த கால வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த காலத்தில் எந்த ஒரு பெண்ணும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்வது இல்லை.

kungumam

அதை நாம் எவ்வளவு சொன்னாலும் அவர்கள் கேட்கப் போவதுமில்லை. திருமணம் ஆகியிருந்தாலும், திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தாலும் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்வது, விபூதி வைத்துக் கொள்வது முகத்திற்கு பொலிவை உண்டாக்கும். ஆண்களாக இருந்தாலும் வெறும் வெற்றியோடு எங்கும் செல்லக்கூடாது என்று அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் ஆண்களும் அதை யாரும் சரியாக பின்பற்றுவது இல்லை.

- Advertisement -

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வெறும் நெற்றியோடு எப்பொழுதும் இருக்க கூடாது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு செல்ல வேண்டும் என்றால், நீங்கள் தலைவாசலை தாண்டும் பொழுது நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் கட்டாயம் இருப்பது நல்லது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

viboothi

வெறும் நெற்றியுடன் செல்லும் காரியம் வெற்றியாக முடியும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. ஆனால் நீங்கள் நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் இட்டுக் கொண்டு செனறு பாருங்கள். அதன் சக்தி மறைமுகமாக உங்களுக்கு வெற்றியை தேடி தரும். இதெல்லாம் சிறுசிறு சூட்சம ஆன்மீக பரிகாரங்கள் தான்.

- Advertisement -

திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் நீங்கள் எந்த கலர் அல்லது எந்த டிசைன் பொட்டு நெற்றியில் வைத்துக் கொண்டாலும், அது சிவப்பு நிறமாக இருந்தால் மிகவும் நல்லது. சிவப்பு நிறம் சக்தியின் அம்சத்தை குறிக்கிறது. விபூதி சிவனின் அம்சத்தை குறிக்கிறது. சிவப்பு நிற பொட்டு வைத்துக் கொண்டு அதன் மேல் லேசாக விபூதி வைத்துக் கொண்டு வெளியில் சென்றால், செல்லும் காரியம் ஜெயம் தான்.

bindi

சில பெண்கள் கலர் கலராக பொட்டு வைத்துக் கொள்வார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கலர் பொட்டை விட சிவப்புப் பொட்டு அதிக சக்தியை உங்களுக்கு கொடுக்கும். உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க சிவப்பு நிறம் உதவும். பெண்கள் வைக்கக்கூடாத நிறம் கருப்பு பொட்டு என்பார்கள். ஆனால் இன்று நவநாகரீக பெண்கள் கருப்பு பொட்டை தான் அதிகம் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்கிறார்கள். கருப்பு பொட்டு என்பது எப்போது வைத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா? பெண்ணானவள் மாதவிடாய் சமயத்தில் கருப்பு பொட்டு வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

bindi1

இதனால் துஷ்ட சக்திகள் உங்களை அணுகாமல் பாதுகாக்கும். ஆனால் மற்ற நேரங்களில் கருப்பு பொட்டு வைத்துக் கொள்வதை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது. கருப்பு பொட்டு வைத்துக் கொள்வதால் மனதில் தேவையில்லாத எண்ணங்களும், சஞ்சலங்களும் உருவாகக்கூடும். ஒரே விஷயத்தில் நாட்டம் கொள்ளாமல், பல விஷயங்களில் ஈடுபட்டு, இறுதியில் ஒன்றையுமே சரியாக செய்ய முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகும். அது போல் இரவு தூங்கும் பொழுது நெற்றியில் விபூதி வைத்து கொண்டு தூங்கி பாருங்கள் அருமையான தூக்கம் வரும். இப்படி நெற்றியை மட்டும் வெறுமனே வைத்துக் கொள்ளாமல் விபூதி, குங்குமம் வைக்க பழகிக் கொள்வது நமக்கு நன்மைகள் தரும்.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரு கயிறை உங்கள் கையில் கட்டிக் கொண்டால், இத்தனை சக்தியும் உடம்புக்குள் வந்துவிடுமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -