வீட்டில் இருக்கும் குப்பையை பற்றி சாஸ்திரம் என்ன கூறுகிறது தெரியுமா? இது தெரிஞ்சா இனி இதெல்லாம் செய்யவே மாட்டீங்க!

lakshmi-broom-thudaippam
- Advertisement -

வீட்டில் இருக்கும் குப்பை குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பது சாஸ்திர உண்மையாகும். வீடு குப்பையாக இருந்தால் குடும்பம் விளங்காமல் போய்விடும் என்று அனைவரும் அறிந்தது தான். இதனால் ரெண்டு வேளையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். துடைப்பம், குப்பை சம்பந்தப்பட்ட விஷயத்தில் சாஸ்திர ரீதியான பிரச்சனைகள் என்ன இருக்கிறது? தரித்திரம் ஏற்படாமல் இருக்க நாம் அதை எப்படி கையாள வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சாஸ்திர ரீதியான விஷயங்களில் இருக்கும் கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளா விட்டால் அது மூடநம்பிக்கை என்று ஆகிவிடும். நம் முன்னோர்கள் கூறி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணமும் ஒளிந்து கொண்டு இருக்கும். அந்த வகையில் குப்பை சார்ந்த விஷயங்களிலும் பலரும் மூடநம்பிக்கை என்று நினைப்பது தவறாகும். இதில் அறிவியல் சார்ந்த உண்மைகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

இரவில் குப்பையை கொட்டினால் மகாலட்சுமி வீட்டை விட்டு சென்று விடுவாள் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இரவு நேரத்தில் வீட்டை கூட்டுவதால் தரித்திரம் ஏற்படும் என்று சொல்லுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் வீட்டை கூட்டி குப்பையில் கொட்டி விட்டால், ஏதாவது முக்கியமான பொருள் அதில் இருந்தாலும் நமக்கு தெரியாமல் போய்விடும். இந்த காரணத்தினால் நம் முன்னோர்கள் இரவில் வீட்டை கூட்டாதே, குப்பையை வெளியில் கொட்டாதே என்று கூறி வைத்தார்கள்.

குப்பை தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் தரித்திரம் ஏற்படும் என்று கூறுவார்கள். மட்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வைக்க அரசாங்கம் கூறுகிறது. இது நம் வருங்கால சந்ததியினருக்கும், நமக்கும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய விஷயமாகும். ஆனால் இதையே நாம் சரியாகப் பின்பற்றுவது கிடையாது. அப்படி இருக்க குப்பை தொட்டியை எப்படி சுத்தமாக வைத்திருப்பது? குப்பையால் ஏற்படக்கூடிய நோய்கள் ஏராளம் உண்டு எனவே குப்பை தொட்டி தானே என்று அலட்சியமாக விட்டு விடாமல் குப்பையில் குப்பையை கொட்டியவுடன் கொண்டு வந்து பைப் தண்ணீரை நன்கு திறந்து விட்டு கழுவி விடுங்கள். பிறகு வெயிலில் காய வைத்து மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இதற்காக நீங்கள் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. உங்களுக்கு நேரம் இருக்கும் போது தேய்த்துக் கொள்ளலாம் ஆனால் தினமும் தண்ணீர் ஊற்றி கழுவுவதில் என்ன வந்து விடப் போகிறது? இதனால் தரித்திரம் ஏற்படாமல் இருக்கும், நம் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். வாசலில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு எனவே குப்பைத் தொட்டி, துடைப்பம், செருப்பு போன்றவற்றை வாசலுக்கு நேரே விட்டு வைக்காமல் சற்று ஓரமாக தள்ளி வைக்க வேண்டும். இதனால் வீட்டிற்குள் வரும் மகாலட்சுமி மகிழ்ச்சியுடன் உள்ளே வருவாள். இதனால் குடும்பத்தில் செல்வமும் பெருகும். வீட்டை துடைப்பதால் கூட்டிய கையால் வேறு வேலையை செய்யக்கூடாது. முதலில் கையை நன்கு சோப்பு போட்டு கழுவி விட்டு தான் அடுத்த வேலை செய்ய வேண்டும் இதுவும் தரித்திரத்தை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.

குப்பை கூட்டிய கையை ஏன் கழுவ வேண்டும்? குப்பையை நாம் துடைப்பதால் மட்டுமே சுத்தம் செய்வது கிடையாது. கைகளை சில சமயம் நம்மை அறியாமல் பயன்படுத்தி விடுவது உண்டு. இதனால் கைகளில் இருக்கும் அழுக்குகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கைகளை கழுவி விட்டு தான் மற்ற வேலையை செய்ய வேண்டும். துடைப்பம் ஒருவரின் மீது படுவது மரியாதை அற்ற செயல் என்று கூறுவார்கள். மேலும் ஆண் பிள்ளையின் மீது துடைப்பம் பட்டால் நல்லதல்ல என்றும் கூறுவார்கள். இதெல்லாம் நம்முடைய ஒழுக்கத்தை நெறிமுறை படுத்தவே கூறி சென்றுள்ளனர். இப்படி குப்பையை பற்றிய சாஸ்திரங்கள் ஏராளம் உண்டு எனவே வீட்டை எப்பொழுதும் குப்பைகள் இல்லாமல் வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -