குப்பையில் வளரும் குப்பைமேனிக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரும் அற்புத சக்தி உள்ளதா? இது தெரியாம போச்சே!

kuppaimeni-cash

குப்பை மேனி சர்வ சாதாரணமாக கிடைக்கக் கூடிய ஒரு அற்புத மூலிகை. இந்த மூலிகை மன்னாதி மன்னர்களையும் மயக்கும் சக்தி பெற்றது என்று சித்த நூல்களில் குறிப்புகள் உள்ளது. சித்தர்கள் கூறும் பலவற்றிற்கு பொருளே புரியாமல் மறைபொருளாக இருக்கும். குப்பையில் கூட சட்டென துளிர்விட்டு வளர்வதால் குப்பை என்றும், மேனி சார்ந்த அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதால் மேனி என்றும், ‘குப்பை மேனியாக’ பெயர் பெற்றது. இதற்கு ‘பூனை வணங்கி’ என்றும் பெயர் உள்ளது. இந்த அற்புத மூலிகை செடியை ஆன்மீக ரீதியாக செல்வம் சேர எப்படி பயன்படுத்தலாம் என்றும், மருத்துவ ரீதியாக ரத்தத்தை எப்படி சுத்தமாக மாற்றுவது என்றும் இப்பதிவில் காணலாம்.

குப்பைமேனி செடியை தெய்வீக மூலிகை என்றும் அழைப்பார்கள். இதை எந்த நேரத்தில், என்ன மந்திரங்கள் உச்சாடணம் செய்து, எப்படி பிடுங்க வேண்டும் என்பதைப் பற்றியும் இதன் மருத்துவப் பலன்களைப் பற்றியும் சித்தர்களின் குறிப்புகளில் உள்ளது. இதற்கு ‘மூலிகை சாபநிவர்த்தி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தொன்மை வாய்ந்த நாட்டில் வைத்தியர்கள் குப்பைமேனியை வைத்து தீராத நிறைய நோய்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய அரிய மூலிகையை நம் கண்முன்னே சாதாரணமாக கிடைத்தும் அதன் பயன்களையும், பலன்களையும் நாம் உணர முடியாமல் இருப்பதே வேதனைக்குரிய விஷயமாகும்.

குப்பைமேனியை வீடுகளில் வளர்ப்பது சரியா? தவறா? என்ற வாதமும் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் நல்லதே ஆகும். குப்பைமேனியை தாராளமாக வீடுகளில் வளர்க்கலாம். நல்ல நாளில் காலை வேளையில், இந்த மூலிகையை சுக்கிர ஹோரையில் வேருடன் பிடுங்கி எடுக்க வேண்டும். இவ்வாறு பிடுங்கும் பொழுது அடிவேர் வரை அறுபடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

kuppaimeni 2

நவீன காலங்களில் நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலும் நச்சுத்தன்மை இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற தீய பழக்க வழக்கங்களாலும் உடலில் உள்ள ரத்தம் கெட்டு அதன் சுத்தத் தன்மையை இழந்து நிற்கிறது. ரத்தம் சுத்தமாக இருக்கும் பொழுது தான் நம்முடைய உடல் சுறுசுறுப்புடன் இயங்கும். ரத்தம் மாசடைவதால் உடல்நிலை மிகவும் பலமிழந்து காணப்படும். சுறுசுறுப்பு இருக்காது, சோர்வுடன் இருப்பது போல் தோன்றும். இதனை சரி செய்யும் சக்தி குப்பைமேனிக்கு உண்டு.

- Advertisement -

இவ்வாறு நாள் பார்த்து முறையாக வேருடன் பிடுங்கிய செடிகளில் ஒன்று இரண்டுடன், ஏழு மிளகுகளை சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். அதிலிருந்து நெல்லிக்காய் அளவு ஒரு உருண்டையை எடுத்து தினமும் உட்கொண்டு வருவதனால் மாசடைந்த ரத்தம் தூய்மை பெறும்.

kuppaimeni 1-compressed

ஆன்மீக ரீதியாக குப்பைமேனி மகாலட்சுமியின் அம்சம் கொண்டு இருப்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் இது தெய்வீக மூலிகை என்று போற்றப்படுகின்றது. இதேபோல் வியாழக்கிழமை அன்று குப்பைமேனி செடியை பிடுங்கி எடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் இந்தச் செடியை நீர் நிரப்பிய பாத்திரத்தில் வைக்க வேண்டும். தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டுவது போல் குப்பைமேனி செடிக்கும் தீபாராதனை காட்டி, தூபம் போட வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதுபோல் செய்து வருவதால் குடும்பத்தில் மஹாலக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். துஷ்ட சக்திகள் அண்டாது. தொழில் வளம் பெருகும் இதன்மூலம் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
வரும் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்க தேவையில்லை இதை வாங்கினாலே செல்வம் குவியும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kuppaimeni benefits in Tamil. Kuppaimeni Tamil. Kuppaimeni payangal Tamil. Kuppaimeni maruthuvam Tamil. Kuppaimeni chedi maruthuvam.