வரும் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்க தேவையில்லை இதை வாங்கினாலே செல்வம் குவியும்.

atchaya-thiruthiyai1

இந்த சார்வரி வருடத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி சித்திரை மாதத்தின் இறுதியில் ஞாயிற்று கிழமையில் அட்சய திருதியை நாள் வருகின்றது. அட்சய திருதியை என்றாலே கேட்டது அனைத்தும் கிடைக்கும், வாங்கிய அனைத்தும் பெருகும், எல்லா காரியங்களும் சுபமாக அமையும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. விநாயகரிடம் வேதவியாசர் மகாபாரதத்தை எழுதுமாறு சொன்னது அட்சய திருதியை அன்று தான். மகாவிஷ்ணு பரசுராம அவதாரம் எடுத்ததும் அக்ஷய திருதியை நன்னாளில் தான்..

atchayathiruthiyai

அட்சய திருதியை நாளில் மகா விஷ்ணுவிற்கு விரதமிருந்து நெல்லுடன் கூடிய அரிசியை நிவேதனம் வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்நாளில் கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். இதே நாளில் தான் அன்னபூரணி தாயாரிடம், சிவபெருமான் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று பிச்சை கேட்டதும் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. ‘அட்சய’ என்பதற்கு ”எப்போதும் குறையாது” என்பது தான் அர்த்தமாகும். இன்றைய சூழலில் வருகின்ற அட்சய திருதியை அன்று எதை வாங்கி பலன் அடைவது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.

இந்நாளில் எந்த பொருள் வாங்கினாலும், எதை வேண்டுதலாக முன்வைத்தாலும், பெருகிக் கொண்டே இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரிக்கும் பொழுது கிருஷ்ண பகவான் துகிலை வளர செய்ததும் அட்சய திருதியை நன்னாளில் தான். இப்போது புரிகிறதா பாஞ்சாலி ஆடை ஏன் உருவ உருவ வளர்ந்துகொண்டே இருந்தது என்று? செல்வத்திற்கு அதிபதியான குபேரனும் அக்ஷய திரிதியை நன்னாளில் தவறாமல் லக்ஷ்மி தேவியை வழிபாடு செய்கின்றார் என்று லட்சுமி தந்திரம் என்னும் நூல் குறிப்பிட்டு கூறியுள்ளது.

atchaya-thiruthiyai

இந்நாளை தானம் செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் தானம் அளிப்பது இரட்டிப்பு பலனை அளிக்கும் என்கிறது சாஸ்திரம். இந்நாளில் மக்கள் இயலாதவர்களுக்கு அரிசி, பருப்பு, புளி, உப்பு, சர்க்கரை, நெய், காய்கறிகள், பழங்கள், விசிறி இவற்றை தானம் அளிப்பதன் மூலம் மோட்சம் கிட்டும். தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற உடலை குளிர்விக்கும் அன்னத்தை தானம் அளித்தால் உங்கள் அடுத்த அடுத்த சந்ததியினருக்கு அன்னத்தால் பஞ்சம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த நாளில் பசிக்கும் வயிற்றுக்கு அன்னம் இட்டால் இப்பிறவியில் நீங்கள் செய்த புண்ணியம் இரண்டாக பெருகி அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கையை வாழலாம். ஸ்படிகம் ருத்ராட்சம் முதலியவற்றை அணிவதற்கு இந்நாள் உகந்த நாளாக இருக்கும். முறையான வழிபாடுகள் செய்து இவற்றை இந்நாளில் அணிவதால் சகல உஷ்ண ரோகங்களும் நீங்கி, ஆரோக்கியம் விருத்தியாகும்.

- Advertisement -

அட்சய திரிதியை என்றாலே தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் தங்கம் வாங்கும் நிலையில் நாம் இல்லை. தங்கத்தை விட பல மடங்கு உயர்ந்த சக்தியை பெற்று பெற்றிருப்பது மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு. மிகவும் சாதாரண ஒரு பொருள் தான் என்றாலும், இதற்குரிய மதிப்பு பலருக்கு புரிவதில்லை. அக்ஷய திருதியை நாளில் நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை மளிகைக் கடைக்கு சென்று கல் உப்பை, காசு கொடுத்து வாங்கி வந்து வீட்டில் அந்த உப்பை வைத்து சமையல் செய்தாலே போதுமானது. இந்நாளில் காசு கொடுத்து வாங்கப்படும் கல்லுபிற்கு மிகுந்த சக்தி உள்ளது. உங்கள் செல்வ வளம் மென்மேலும் பெருகி கொள்ள இந்த பரிகாரம் துணை புரியும்.

Atchaya thiruthiyai

கல் உப்பை வாங்கி வந்ததும் அதை எவர் சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாக்களிலோ போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கல் உப்புற்கு மகாலட்சுமிக்கு இணையான மரியாதை செலுத்த வேண்டும். பீங்கான் ஜாடியில் அல்லது மட்பாண்டத்தில் போட்டு வைக்கலாம். நீங்கள் தெய்வங்களுக்கு பூஜை செய்யும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை இந்த ஜாடியில் போட்டு கொண்டே வரவேண்டும். அக்ஷய திரிதியை நாளில் இருந்து தொடர்ந்து 108 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நூற்றி எட்டு நாட்களில் சேகரித்த 108 ரூபாயை முடிந்து கோவில்களுக்கு செல்லும் பொழுது உண்டியலில் சேர்த்து விடலாம்.

இதையும் படிக்கலாமே
வெற்றியையும், செல்வதையும் அடைய இதை விட சிறந்த நேரம் இல்லை என்கிறது சாஸ்திரம். அப்படி எந்த நேரம் அது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Akshaya tritiya enna seiya vendum. Akshaya tritiya 2020. Akshaya tritiya benefits. Atchaya tritiya in Tamil. Akshaya tritiya 2020 in Tamil.