குலதெய்வ கோவிலுக்கு போகும்போது மறக்காமல் இந்த 2 பொருளை வாங்கி சென்றால், உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு சந்தோஷமாக இருக்கும்.

- Advertisement -

நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், கட்டாயமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டு குலதெய்வம் எது என்று தெரியவில்லை என்றால் உங்கள் சொந்த ஊருக்கு சென்று கொஞ்சம் வயதான முன்னோர்களை கேட்டு குலதெய்வத்தை எப்படியாவது தெரிந்து கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாட்டை மறந்தால், குடும்பத்தில் நிச்சயம் கஷ்டம் இருக்கும். நஷ்டம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத நோய்நொடி பிரச்சனை ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும். ஆகவே குலதெய்வ வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். குலதெய்வ கோவிலுக்கு எப்போதெல்லாம் போவீர்கள்.

வெளியூரில் இருந்தால் கூட வருடத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக உங்கள் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும். சொந்த ஊருக்கு வந்து உங்கள் சொந்த ஊரில் இருக்கும் குலசாமியையும், கிராம தேவியையும் வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். என்னதான் வெளிநாட்டுக்கு போய் வேலை செய்தாலும் பிறந்த மண்ணையும், நம் தெய்வத்தையும் மறப்பது சரியான முறை அல்ல.

- Advertisement -

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது வாங்க வேண்டிய பொருட்கள்:
சரி, குலதெய்வ கோவிலுக்கு போக கிளம்பிட்டீங்க. குலதெய்வ கோவிலுக்கு என்ன பொருட்களை வாங்கிக் கொடுக்கணும். குலதெய்வ கோவிலுக்கு சென்றால் கட்டாயம் சர்க்கரை பொங்கல் நெய்வேதியமாக வைக்கணும். குலதெய்வ கோவிலில் விளக்கு அணியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வ கோவில் தீபச்சுடர் ஒளி எந்த அளவுக்கு பிரகாசமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உங்கள் குடும்பமும் பிரகாஷ்சமாக இருக்கும். (அதாவது உங்கள் வீட்டு குலதெய்வ கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் இல்லை என்ற அந்த ஒரு நிலைமை வரவே கூடாது. அதை பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கும் இருக்கு.)

சர்க்கரை பொங்கல் எந்த அளவுக்கு இனிப்பு நிறைந்த பிரசாதம். அந்த அளவுக்கு உங்களுடைய குடும்பத்தில் இனிப்பான சம்பவங்கள் நடக்கும். அதற்காகத்தான் இந்த இரண்டு விஷயங்களையும் மறக்காமல் குலதெய்வ கோவிலில் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இது தவிர சில பேர் வீட்டில் மா விளக்கு போடக்கூடிய பழக்கம் இருக்கும். சில பேர் வீட்டில் படையல் போடக்கூடிய பழக்கம் இருக்கும்.

- Advertisement -

அதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம். குலதெய்வ கோவிலுக்கு நல்லெண்ணெய், வெல்லம், பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், முந்திரி திராட்சை இந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதைத்தான் மொத்தமாக இரண்டு பொருட்கள் என்று சொல்லி இருக்கின்றோம்.

இதையும் படிக்கலாமே: எந்த கெட்ட சக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தெய்வ சக்தி தானாக தேடி வந்து வீடு சுபிட்சமாக நிலைவாசலில் இந்த மூன்று பொருளை ஒன்றாக சேர்த்து கட்டி விடுங்கள்.

சர்க்கரை பொங்கல், விளக்கு ஏற்றுவதற்கு தேவையான பொருட்கள். இந்த இரண்டு விஷயங்களை மாதம் மாதம் உங்களால் குலதெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுக்க முடிந்தாலும் கொடுக்கலாம். தவறு கிடையாது. குலதெய்வத்தை மறக்காமல் மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்யக்கூடிய குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். இருள் நிச்சயம் இருக்காது. இது பல பேரின் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. நீங்களும் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்திற்கு நன்மை மட்டுமே நடக்கும் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -