வீட்டில் இந்த விளக்கை மட்டும் இப்படி வைக்கவே கூடாது. குடும்பத்தில் சந்தோஷம் நிலைகுலைய இதுவும் ஒரு காரணம்.

vilakku-deepam
- Advertisement -

வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அத்தனையும் விலக, வீட்டில் இருக்கும் வறுமை விலக, வீட்டில் இருக்கும் துரதிர்ஷ்டம் விலக, வீட்டிலிருக்கும் தரித்திரம் விலக, வீடு சந்தோஷமாக கோவில் போல இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டில் தீபம் ஏற்றப்படுகின்றது. அத்தனை கஷ்டங்களையும் விளக்கக் கூடிய சக்தி, விளக்கில் எரியும் தீப ஒளிக்கு உண்டு. ஒரு குடும்பத்திற்கு வாழப்போகும் பெண்ணிடம் குத்துவிளக்கை சீதனமாக கொடுப்பது நம்முடைய இந்து பாரம்பரியத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

kuthu-vilakku

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு ஒரு பெண் செல்லும்போது, அந்த பெண் செல்லக்கூடிய வீடு, அந்த குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த பெண்ணின் கையால் தினமும், அவள் சீதனமாக எடுத்து வந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்பதற்காக, அந்த தீப ஒளியின் மூலம் அவர்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் குத்துவிளக்கை சீதனமாகக் கொடுக்கும் வழக்கமே நம்மிடத்தில் வந்தது.

- Advertisement -

ஆனால் நாம் என்ன செய்கின்றோம். சீதனமாக வந்த குத்துவிளக்காக இருந்தாலும் சரி, பரிசுப் பொருளாக பெற்ற குத்துவிளக்காக இருந்தாலும் சரி, நாமே காசு கொடுத்து வாங்கிய குத்துவிளக்காக இருந்தாலும் சரி, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை வருடத்தில் ஒரு சில நாட்களிலேயே அந்த குத்துவிளக்கை ஏற்றி வீட்டில் வைக்கின்றோம்.

perumal-vilakku

மற்ற நாட்களில் அந்த குத்துவிளக்கை வெறுமனே படுக்கப்போட்டு ஏதாவது ஒரு மூலையில் போட்டு வைத்து விடுகின்றோம். நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய குத்துவிளக்கை பயன்படுத்தாமல் ஒருபோதும் கிடப்பில் போட்டு வைக்கக்கூடாது. முடிந்தால் தினம் தோறும் குத்துவிளக்கினை நல்லெண்ணை ஊற்றி ஒரு முகமாவது ஏற்றி வைத்து பூஜை அறையில் இறைவழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இல்லையென்றால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது குத்து விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து முகத்திலும் திரி போட்டு பூஜை அறைக்கு இரண்டு பக்கத்திலும் வைத்து தீபம் ஏற்றி அதன் பின்பு வெள்ளிக்கிழமை பூஜை செய்து பாருங்கள். உங்களுடைய மனதை எவ்வளவு நிறைவாக இருக்கும் என்பதை உங்களால் வார்த்தைகளில் சொல்ல முடியாது.  நமக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும்.

poojai arai

கடந்த வாரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்திருப்போம். வியாழக்கிழமை வரை மனதே சரி இருந்திருக்காது. சஞ்சலங்கள் நிறைந்த மனதை சரி செய்ய, வெள்ளிக்கிழமை அன்று குத்துவிளக்கு ஏற்றி இறைவனை மனதார வழிபட்டு, இரண்டு கண்களால், கண் குளிர தரிசனம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வியாழக்கிழமை வரை இருந்த சஞ்சலங்கள் நிறைந்த மன நிலைக்கும், வெள்ளிக்கிழமை பூஜைக்கு பின்பு உங்கள் மனதில் இருக்கும் நிலைமைக்கும் நிறைய வித்தியாசம் தெரியும்.

poojai

குத்து விளக்கை படுக்கப்போட்டு ஒரு ஓரமாக பயன்படுத்தாமல் வைத்துவிட்டால் நம்முடைய குடும்பத்தில் சந்தோஷமும் படுத்து போகும் என்பதும் ஒருவகையில் உண்மையான ஒரு விஷயம் தான். உங்க வீட்ல குத்துவிளக்கு இருக்கா அதை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கீங்கன்னா, எடுத்து பயன்படுத்தி தான் பாருங்களேன். உங்கள் வீட்டில் நிகழும் மாற்றத்தை.

- Advertisement -