விளக்கிற்கு இப்படி பொட்டு வைப்பதால் ஐஸ்வர்யம் பெருகுமா?

Vilakku-lakshmi

விளக்கு ஏற்றுவதற்கும் வீட்டில் வளம் பெருகுவதற்கும் தொடர்பு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? முந்தைய காலத்தில் தினமும் விளக்கு ஏற்றுவார்கள். இப்போதைய அவசர யுகத்தில் விளக்கு ஏற்றுவது கடமைக்கு என்பது போல் ஆகிவிட்டது. அதையும் கூட சரியாக செய்வது இல்லை. எங்கே பழக்க வழக்கங்கள் மறந்து போகிறதோ அங்கே பிரச்சனைகளும் தலையெடுக்கின்றன. இதற்கு நேரமின்மை ஒரு காரணம் என்றாலும் முக்கிய காரணம் அலட்சியம் மட்டுமே என்று கூறினால் தவறில்லை. இறை நெறியில் இருந்து விலகி இருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல. தினமும் விளக்கு ஏற்றுவதால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமோடு வாழலாம்.

ashta-lakshmi

விளக்கு ஏற்றும் முன் திருவிளக்கை நன்கு சுத்தம் செய்து விட்டு ஆகம விதிமுறைப்படி பொட்டு வைக்க வேண்டும். பொட்டு வைக்காமல் தீபம் ஏற்றுவது தவறு. ஒரு சிலர் குங்குமம் கொண்டு பொட்டு வைப்பதால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டி வருமே என்று ஸ்டிக்கர் பொட்டு வைத்து விடுவர். இது மிகவும் தவறான ஒரு பழக்கம் ஆகும். அது போல் வெறும் குங்குமம் மட்டும் வைத்து வழிபடுவதும் கூடாது. இப்படி செய்தால் அது லக்ஷ்மி தேவியை அவமதிக்கும் ஒரு செயல் போன்றது. முறையாக எப்படி பொட்டு வைக்க வேண்டும்? எப்படி பொட்டு வைத்தால் செல்வம் பெருகும்? என்பதை பற்றிய பதிவு தான் இது.

விளக்கை தேய்த்து சுத்தம் செய்தபின் ஈரம் இருக்காதவாறு உடனே துணி கொண்டு நன்கு துடைத்து விட வேண்டும். பின்னர் முதலில் சந்தனம் இட வேண்டும். மஞ்சள் வைத்து குங்குமம் இடுவதை காட்டிலும் சந்தனம் சக்தி வாய்ந்தது. அதன் மேல் நல்ல குங்குமம் வைக்க வேண்டும். குத்து விளக்கை பொறுத்த மட்டிலும் மொத்தம் எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும் என்பது நியதி. அவை விளக்கின் மேல்பாகத்தில் ஒன்று, விளக்கின் முகங்கள் ஐந்து, விளக்கின் ஸ்தம்பத்தில் ஒன்று, விளக்கின் பாதத்தில் ஒன்று என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சிறியதாக அழகாக இட்டால் பார்ப்பதற்கே மகிழ்வாக இருக்கும். எட்டு இடங்களில் வைப்பதன் தாத்பர்யம் என்னவென்றால் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும், சூரிய, சந்திர மற்றும் உயிர் சக்தி இம்மூன்றையும் குறிக்கவல்லது. மேலும் மஹா லக்ஷ்மி, தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, ஜெய லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி ஆகிய அஷ்ட லக்ஷ்மிகளையும் குறிப்பதாகும். அஷ்ட லக்ஷ்மிகளின் ஆசியும் ஒருசேர நமக்கு கிட்டும்.

vilakku

எனவே விளக்கிற்கு நீங்கள் வைக்கும் பொட்டு மிகவும் முக்கியமானது. அதை முறையாக வைத்து வழிபட்டு வருவதன் மூலம் வீட்டில் சகல ஐஸ்‌வர்யத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் திறன் தீபத்திற்கு உண்டு. தினமும் தீபம் ஏற்றி வழிபட்டு அன்றாட வேலைகளை தொடர்வதால் செய்யும் வேலையில் கவனம் இருக்கும். மனது ஒருநிலைபடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சுபகாரிய தடைகள் இருப்பின் விலகி விடும். இல்லத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vilakku pottu vaikum murai. Kuthu vilakku pottu vaikum murai. Vilakku pottu vaipathu eppadi. Kuthu vilakku pottu vaipathu eppadi