குட்டி குட்டி முடிக்குக்கூட புத்துயிர் கொடுத்து நீளமாக வளர செய்ய, ரொம்ப ஈஸியான குட்டி ஹேர் பேக் உங்களுக்காக.

hair13
- Advertisement -

குட்டி ஹேர் பேக்கா. அது என்ன என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்குமல்லவா. நம்ம வீட்ல இருக்க கூடிய சின்ன சின்ன பொருட்களை வைத்து தான் இந்த ஹேர் பேக்கை சுலபமாக தயார் செய்யப் போகின்றோம். இந்த ஹேர் பேக்கை தலையில் போடும் போது நம்முடைய தலையில் இருக்கும் குட்டி குட்டி முடி கூட நன்றாக வலுப்பெற்று உறுதியாக வளர தொடங்கும். முடி தலையிலிருந்து உதிராமல் இருக்க இந்த ஹேர் பேக் பயன்படுத்திக் கொள்ளலாம். சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த சூப்பரான ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது தெரிந்துகொள்வோமா.

சமையலறையில் இருக்கும் வெந்தயம், மிளகு, பால் இந்த மூன்று பொருட்களை வைத்து தான் பேக்கை நாம் தயார் செய்யப் போகின்றோம். ஒரு சிறிய பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் வெந்தயம், 10 மிளகு இந்த இரண்டு பொருட்களும் மூழ்கும் அளவிற்கு காய்ச்சிய பால் ஊற்றிக் கொள்ள வேண்டும். பாக்கெட் பால் இல்லாமல் மாட்டு பால் கிடைத்தால் மிகவும் நல்லது. பாக்கெட் பால் பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

இந்த வெந்தயமும் மிளகும் ஐந்து மணிநேரம் அப்படியே அந்தப் பாலில் ஊற வேண்டும். வெந்தயம் மிளகு நன்றாக ஊறிய பின்பு இந்த கலவையை அப்படியே பாலோடு மிக்ஸி ஜாரில் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் ஊற்றி கூட அரைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் கொழகொழப்பாக, கொஞ்சம் லிக்விட் போல அரைத்து இதை ஒரு காட்டன் துணியில் வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். வடிகட்டி எடுக்க கொஞ்சம் சிரமம் இருக்கும். இருப்பினும் நன்றாக கையை வைத்து பிழிந்தீர்கள் என்றால் பேக் ஃபில்டர் ஆகி நமக்கு கிடைத்துவிடும்.

இந்த பேக்கை அப்படியே உங்களுடைய தலையில் அப்ளை செய்யவேண்டும். அதற்கு முன்பாக தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து நன்றாக சிக்கு எடுத்து விட்டு ஒரு பத்து நிமிடம் கழித்து இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே பேக் தலையில் ஊறட்டும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து கொள்ளலாம்.

- Advertisement -

வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டால் போதும். மூன்று வாரம் தொடர்ந்து இந்த பேக்கை மூன்று முறை போட்ட பின்பு, நிறுத்தி விடுங்கள். பிறகு மூன்று மாதங்கள் கழித்துதான் மீண்டும் இந்த பேக்கை போட வேண்டும். காரணம் இந்த பேக்கில் நாம் மிளகு சேர்த்து இருக்கின்றோம்.

தலையில் இருக்கக்கூடிய இன்பெக்சன் எல்லாம் நீங்கிய பின்பு தொடர்ந்து மிளகை தலையில் போட கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த பேக்கில் இன்ட்ரஸ்ட் இருந்தால் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. ஒருமுறை போட்டு விட்டு தலையை சீவும் போது முடி உதிர்வதில் நல்ல வித்தியாசத்தை பார்க்க முடியும்.

- Advertisement -