பிரியாணியே தோத்து போற அளவுக்கு சும்மா கமகமன்னு பாய் வீட்டு வெள்ளை குஸ்கா குக்கர்ல இவ்வளவு ஈஸியா செய்யலாம் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீங்க தான். வாங்களேன் ட்ரை பண்ணி தான் பாப்போம்

- Advertisement -

இப்போதெல்லாம் ஏதாவது விசேஷம் என்றாலே ஸ்பெஷல் பிரியாணி தான். அதை தினமும் செய்தால் கூட பிரியாணி எப்போதுமே ஸ்பெஷல் தான். பொதுவாகவே பிரியாணி என்றாலே அது பாய் வீட்டு பிரியாணி தான் தனி சுவையுடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே வகையில் இந்த வெள்ளை பிரியாணியும் காய்கறி, அசைவம் எதுவும் சேர்க்காமல் பிரியாணி சுவையை விடவும் சூப்பராக ஒரு வெள்ளை குஸ்காவாக பாய் வீட்டு ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஸ்பெஷல் வெள்ளை குஸ்காவை எப்படி செய்வது என்கிற செய்முறை பதிவு தான் இது.

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 300 கிராம், வெங்காயம் – 2, தக்காளி -1, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், முந்திரி -10, பட்டை -2, லவங்கம் -2 ,பிரிஞ்சி இலை -1, ஏலக்காய் -2, கிராம்பு – 2, சோம்பு – 1/2 டீஸ்பூன், தயிர் -2 டேபிள் ஸ்பூன், புதினா -1கைப்பிடி, கொத்தமல்லி- சிறிதளவு, உப்பு – ஸ்பூன் ,எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன், நெய் -1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இந்த வெள்ளை குஸ்கா செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை எடுத்து கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விட்டு பத்து நிமிடம் வரை நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து குக்கர் சூடானவுடன் எண்ணெய், நெய்யும் சேர்த்து ஊற்றி சூடாக்குங்கள். சூடான உடன் பட்டை, ஏலக்காய், லவங்கம், கிராம்பு,சோம்பு ,சேர்த்து பொரிந்த உடன் வெங்காயத்தை நீளவாக்கில் அறிந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதங்க வேண்டும் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இப்போது புதினா, கொத்தமல்லி, தயிர் மூன்றையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு அறிந்து வைத்து ஒரு தக்காளியும் இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

இவை எல்லாம் நன்றாக வதங்கியுடன் ஊற வைத்திருக்கும் அரிசியில் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு குக்கரில் சேர்த்து வெங்காயம் தக்காளி உடன் ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் 300 கிராம் அரிசியை ஒரு கப்பில் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள் எந்த கப்பில் அளந்து எடுக்கிறீர்களோ அந்த கப்பில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விடுங்கள். குக்கர் இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு விசில் இறங்கியதும் மூடியை திறந்து ஓரமாக கரண்டி வைத்து கலந்து கொள்ளுங்கள் அருமையான வெள்ளை குஸ்கா தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: 4 பொருளில் இரண்டு வகையான சட்னி ரெசிபி இப்படி அரைச்சி கொடுத்தா நாலு இட்லி சாப்பிடுற இடத்துல 10 இட்லி கூட சாப்பிடலாமே!

இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் நெய் ஊற்றி எடுத்து வைத்த முந்திரி பருப்பு அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதையும் இந்த குஸ்காவில் சேர்த்து இதற்கு காரசாரமாக என்ன சைட் டிஷ் வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

- Advertisement -