இந்த மிளகாய் தூள் போட்டு குழம்பு வைத்தால், குழம்போட வாசம் பக்கத்து தெரு வரைக்கும் வீசும். சைவம் அசைவம் 2 விதமான சமையலுக்கும் சேர்த்து ஒரே குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

milagai-thool
- Advertisement -

சில பேர் வீட்டில் குழம்பு கொதிக்கும் போது வாசம் அப்படியே ஆளை இழுக்கும். நம்முடைய வீட்டில் மட்டும் குழம்பு வைத்தால் இப்படி ஒரு வாசம் வரவில்லையே என்று நிறைய இல்லத்தரசிகளுக்கு வருத்தம் இருக்கும். குழம்பு மிளகாய் தூளை இப்படி அரைத்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் குழம்பு கொதித்தாலும் வாசம் அடுத்தவர்களுடைய மூக்கை துளைக்கும். சைவ குழம்பு, அசைவ குழம்பு இரண்டிற்கும் சேர்ந்தது போல குழம்பு மிளகாய்த்தூள் வீட்டிலேயே அரைப்பது எப்படி என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இந்த குழம்பு மிளகாய் தூள் அரைப்பதற்கு நமக்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். வரமிளகாய் – 1 கிலோ, காஷ்மீரி மிளகாய் – 1 கிலோ, இந்த இரண்டு மிளகாய்களையும் போட்டு தனி மிளகாய்த்தூள், தனியாக அரைக்க போகின்றோம். மல்லித்தூள் தனியாக அரைக்க வேண்டும். மல்லித்தூள் அரைக்க தேவையான பொருட்களையும் தெரிந்து கொள்வோம். வர மல்லி – 2 கிலோ, சோம்பு – 400 கிராம், சீரகம் – 400 கிராம், மிளகு – 200 கிராம், விரலி மஞ்சள் – 200 கிராம், அவ்வளவுதான்.

- Advertisement -

தேவையான பொருட்கள் இது மட்டும்தான். சில பேர் நினைக்கலாம் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு அரிசி எல்லாம் இதில் சேர்க்கவில்லையே என்று. இது சாம்பார் பொடி அல்ல. குழம்புக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய குழம்பு மிளகாய்த்தூள். இதை வைத்து சாம்பார் வைக்க கூடாது. காரணம் இதில் நாம் சோம்பு சேர்த்து இருக்கின்றோம்.

சரி, இப்போது இந்த பொருட்களை வைத்து எப்படி முறையாக குழம்பு மிளகாய் தூள் அரைப்பது என்று விரிவாக பார்க்கலாம். எடுத்து வைத்திருக்கும் எல்லா பொருட்களையும் வெயிலில் பரவலாக கொட்டி ஆற வைக்க வேண்டும். தனியாக ஒரு துணியில் வரமிளகாய் காஷ்மீரி மிளகாய் இரண்டையும் கொட்டி காய வையுங்கள். இன்னொரு துணியில் தனியாக வர மல்லி சோம்பு, சீரகம், மிளகு, மஞ்சள் இந்த ஐந்து பொருட்களையும் தனியாக கொட்டி காயவையுங்கள்.

- Advertisement -

எல்லா பொருட்களும் மொறுமொறுப்பாக காய வேண்டும். மிளகாயை எடுத்து கையில் உடைத்தால் அப்படியே சுக்குநூறாக மொள மொளவென உடைய வேண்டும். ஒரு டப்பாவில் காஷ்மீரி மிளகாய், வர மிளகாய் இரண்டையும் தனியாக போட்டு வையுங்கள். இன்னொரு டப்பாவில் வரமல்லி, சோம்பு, சீரகம், மிளகு, மஞ்சள் தனியாக போட்டுக் கொள்ளுங்கள். இப்போது வர மிளகாய் தூள் தனியாக, வர மல்லித்தூள் தனியாக கொடுத்து மிஷினில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு டப்பாவில் தனி மிளகாய் தூள், ஒரு டப்பாவில் வர மல்லித்தூள். அரைத்த பிறகு இதில் சூடு இருக்கும் அதை நன்றாக ஆற வைத்துவிட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதை சமைப்பதற்கு எப்படி பயன்படுத்தலாம். 1 – ஸ்பூன் மிளகாய்த்தூளுக்கு, 2 – ஸ்பூன் வர மல்லித்தூள் சேர்த்து சமைத்தால் குழம்பின் ருசி சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கடலைப்பருப்பு இருந்தா ரொம்பவே வித்தியாசமான சுவையில் சிம்பிளான இந்த சட்னியை செஞ்சு பாருங்க. இந்த சட்னிக்கு சுடச் சுட இட்லி இருந்தா போதும் கணக்கில்லாமல் உள்ள போயிட்டே இருக்கும்.

உங்களுக்கு வாசம் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டும் என்றால் 3 ஸ்பூன் வர மல்லி தூளை கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். காரம் ரொம்பவும் தூக்கலாக வேண்டும் என்றால் மிளகாய் தூள் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இப்படி தனித்தனியாக தூள் அரைத்து வைப்பதன் மூலம் நமக்கு இன்னொரு சௌகரியமும் இருக்கு. தனி மிளகாய் தூள் போட்டு ஏதாவது டிஷ் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்த தனி மிளகாய் தூள் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான குழம்பு மிளகாய் தூள் ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -