உங்கள் வீட்டு குழாயில் உப்பு கறை படிந்து பார்பதற்க்கே மிகவும் அசிங்கமாக உள்ளதா? இந்த இரண்டு பொருட்கள் போதும் வெறும் 15 நிமிடத்தில் குழாயை புதிது போல மாற்றிவிடலாம்.

kuzhayai sutham seivathu eppadi
- Advertisement -

சமையலறை மற்றும் கழிவறை இவை இரண்டும் ஒரு வீட்டில் சுத்தமாக இருப்பது என்பது மிக மிக அவசியமான ஒன்று. இந்த இரண்டு அறைகளும் சுத்தமாக இருந்தாலும் இவற்றில் உள்ள குழாய்களில் பல நேரங்களில் உப்பு கரை படிந்த பார்க்கவே ரொம்ப பழையது போல தெரியும். இந்த உப்புக்கரையை மிகவும் எளிதாக போக்குவது எப்படி என்பதை இந்த வீட்டு குறிப்புகள் பதிவில் பார்ப்போம்.

குழாயை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன், வினிகர் – 1 டேபிள் ஸ்பூன். சில நாட்கள் படிந்த கரைய போக்க இந்த இரண்டே பொருட்கள்மட்டுமே போதுமானது.

- Advertisement -

குழாயை சுத்தம் செய்வது எப்படி:
முதலில் ஒரு சின்ன பௌலில் பேக்கிங் சோடாவை கொட்ட வேண்டும். பிறகு அதில் வினிகரை ஊற்றவேண்டும். வினிகர் பேக்கிங் சோடாவுடன் சேரும்போது நுரை வரும். அதை கண்டு அஞ்சவேண்டாம். அடுத்ததாக நம்முடைய பழைய பல் துலக்கும் பிரஷை எடுத்து அதைக்கொண்டு இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.

பிறகு இந்த கலவையை, குழாயில் எங்கெல்லாம் அழுக்கு உள்ளதா அங்கெல்லாம் படும்படி பூசிவிட்டு ஒரு 15 நிமிடங்கள் அப்படியே ஊறவிட வேண்டும். அதன் பிறகு சற்று அழுத்தம் கொடுத்து தேய்த்தால் கறைகள் முழுமையாக வந்துவிடும். ஒரு வேலை நாள்பட்ட கறையாக இருந்தால் அவை வருவது சற்று கடினம். அவற்றை போக்குவதற்கு கீழே உள்ள முறையை பின்பற்றுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: அயன் பாக்சில் கருப்பாக கறை படிந்து நீண்ட நாட்களாக அப்படியே உள்ளதா? இப்படி செய்தால் போதும் 5 நிமிடத்தில் மொத்த கறையும் நீங்கி அயன் பாக்ஸ் புதிது போல மாறி விடும்.

நாள்பட்ட கறை நீங்க செய்யவேண்டியது:
மினெரல் வாட்டர் – 400 மில்லி, வினிகர் – 50 மில்லி, டிஷ் வாஷ் ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் இவை மூன்றையும் நன்கு கலந்து அதை கரை இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்து 3 நிமிடங்கள் ஊறவிட்டு துடைத்தால் நாள் பட்ட கறைக்கூட குழாயில் இருந்து நீங்கும். இந்த கலவையை நாம் மல்டி பர்பஸ் கிளீனர் போல பயன்படுத்திக் கொள்ளலாம். இது பிசுபிசுப்பை போக்கும் தன்மை கொண்டது.

- Advertisement -