திங்களன்று இவரை இப்படி மட்டும் வழிபட்டால்! நீங்கள் அடைந்த நஷ்டத்திற்கு ஈடாக அதிக லாபம் கண்டிப்பாக கிடைக்கும் தெரியுமா? புதிய தொழில் துவங்கும் முன் இதை செய்யுங்கள்.

vilvam-sivan

ஒருவர் அடிப்படைத் தேவைகளுக்காக தான் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டுமே என்று செய்து வருகிறோம். அப்படி நாம் செய்யும் தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலீடுகள் செய்வது உண்டு. அப்படி முதலீடுகள் செய்யும் பொழுது ஒரு சிலருக்கு செய்த முதலீட்டை எளிதாக மீட்டெடுத்து, அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். ஆனால் ஒரு சிலருக்கோ போட்ட முதலீட்டை கூட மீட்டு எடுக்க முடியாத சூழ்நிலை வந்து விடும். அடுத்தடுத்த நஷ்டம் ஏற்படும்.

runavimosana-lingam

நஷ்டத்தை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இப்படி தொழில் மூலமாக ஏற்படும் நஷ்டங்களை சரி செய்ய ஆன்மீக ரீதியான எளிய பரிகாரங்கள் உண்டு. அவற்றில் சக்தி வாய்ந்த இந்த சிவன் பரிகாரம் திங்கட் கிழமைகளில் செய்ய, ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக அதிக லாபங்களை காணலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

உத்தியோகம் செய்பவர்களுக்கு, அடுத்தவர்களுக்கு கீழ் எவ்வளவு நாள் தான் வேலை செய்ய! நாமும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆசை என்பதை விட அது ஒரு தவமாகவே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். திடீரென தொழில் செய்ய வேண்டும் என்றால் முதலீடுகள் தேவை. அப்படி பணம் இருந்தாலும் என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்கிற குழப்பமும் இருக்கும். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் செய்யப்படும் தொழில் லாபத்தை தருமா? என்கிற பயமும் இருக்கும். இப்படி பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

sunai lingam

இந்த பரிகாரத்தை திங்கட் கிழமையில் செய்ய வேண்டும். அல்லது சிவனுக்கு உகந்த பிரதோஷ நாளன்று செய்வது நல்லது. கார்த்திகை நட்சத்திரமும், திங்களும் கூடிய நாள் இன்னும் விசேஷமான பலன்களை கொடுக்கும். சிவபெருமானை நோக்கி தவம் இருப்பவர்களுக்கு, கேட்ட வரம் நிச்சயம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அவரை முறையாக எப்படி வழிபட்டால் லாபம் பெற முடியும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

முக்காலமும் உணர்ந்த முக்கண்ணனான சிவபெருமானை வீட்டில் எப்படி வழிபட வேண்டும்? நீங்கள் சிவன் படம் அல்லது லிங்கம் வைத்திருந்தால் அவற்றை சுத்தம் செய்து சந்தன, குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை லிங்கம் வைத்து செய்வது இன்னும் விசேஷமானது. உங்களிடம் இருக்கும் சிறிய லிங்கத்தை சுத்தமான தண்ணீர் ஊற்றி முதலில் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். நெய்வேத்தியம் செய்வதற்கு பால் அல்லது தயிர் படைக்க வேண்டும்.

vilvam

சிவனுக்குரிய வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். 108 என்ற எண்ணிக்கையில் வில்வ இலைகளை முன்னரே பறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இலையால் அர்ச்சிக்கும் பொழுது, சிவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தொழில், வியாபாரம், உத்தியோக நஷ்டம் ஏற்படும் பொழுது பித்ரு தோஷ நிவர்த்தி செய்வது அவசியமாகும். எனவே இப்படி 108 முறை வில்வ அர்ச்சனை செய்து முடித்த பின் பசுமாட்டிற்கு அகத்தி கீரை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய நஷ்டத்தில் இருந்த மீண்டு நல்ல ஒரு முன்னேற்றத்தை விரைவாக காணலாம் என்பது ஐதீகம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களும், குழப்பமில்லாத லாபம் தரும் வகையில் தொழிலை துவங்கலாம்.