Dal Chutney : இதுவரைக்கும் யாரும் செய்திடாத வித்தியாசமான பருப்பு சட்னி

paruppu chutney idly
- Advertisement -

இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு எண்ணற்ற சைட் டிஷ் இருந்தாலும் முதலில் தேர்ந்தெடுப்பது என்னவோ சட்னி தான். சட்னி பொறுத்த வரையில் சுலபமாக செய்து விடலாம். அதே நேரத்தில் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று கூட. அனைவருக்கும் பிடித்த ஒரு உணவை ரொம்பவே வித்தியாசமான சுவையில் சுலபமாக எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

தனியா – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
வெந்தியம் – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 1/2
பூண்டு – 5 பல்
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் ஒரு சில பொருட்களை நாம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் தனியா , ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் இவை அனைத்தையும் சேர்த்து இந்த பருப்புகள் நிறம் மாறும் வரை வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் சில பொருட்களை வதக்க வேண்டும். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பெரிய வெங்காயம் சேர்த்த பிறகு பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலை, புளி, தேங்காய் சேர்த்த பிறகு இவை அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது வதக்கிய அனைத்தையும் ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஒரு முறை அரைத்த பிறகு கடைசியாக நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவையும் இத்துடன் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்து அதை ஒரு பவுலில் மாற்றி ஊற்றி விடுங்கள். அடுத்து கடைசியாக இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பை தயார் செய்து விடுவோம்.

இதையும் படிக்கலாமே: மரவள்ளி கிழங்கை வைத்து இப்படி ஒரு முறை வடை செய்து பாருங்கள். அருமையாக இருக்கும்.

அதற்கு மீண்டும் அதே கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் உளுந்து இவை அனைத்தையும் சேர்த்த பிறகு பொரிய விட்டு, அந்த தாளிப்பை எடுத்து சட்னியில் ஊற்றி கலந்து விட்டால் அருமையான சுவையில் சட்னி வித்தியாசமான தயார். இந்த சட்னி ரெசிபியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -