மகாலட்சுமி நித்யவாசம் செய்யும் இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டால் நமது வீட்டிலலும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்

lakshmi
- Advertisement -

ஆன்மீக பரிகார முறையிலோ அல்லது வாஸ்து சாஸ்திரங்களிலோ அல்லது வீட்டின் பூஜை முறையிலோ சில பொருட்களை பயன்படுத்தும் பொழுது அவற்றை மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கிறோம். அவ்வாறு மகாலட்சுமி வாசம் செய்யும் பலவிதமான இடங்களும், பொருட்களும் இருக்கின்றன. அவற்றறை நாம் தெரிந்து கொண்டு அதனை முறையாக பயன்படுத்தி வந்தோம் என்றால் லட்சுமி தேவியின் அருளைப் பெற்று, நமது வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்கும். அவ்வாறு மகாலட்சுமி வீற்றிருக்கும் இடங்கள் என்னென்ன என்பதனை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vasthu

மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்கும் இடம் பெருமாளின்மார்பபு பகுதியாகும். எனவே பெருமாளை வணங்கும் பொழுது அவருடன் சேர்த்து லட்சுமி தேவியையும் வணங்க வேண்டும். லட்சுமிதேவியை வணங்கும் பொழுது அவரருடன் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும். இவ்வாறு இவர்கள் இருவரையும் ஒன்று சேர வணங்கவேண்டுமமே தவிர தனித்தனியாக வணங்கக்கூடாது.

- Advertisement -

அவ்வாறு முப்பெரும் தேவியரும், தேவர்களும் தொழுகின்ற ஒன்று பசுவாகும். இந்த பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே காலை எழுந்தவுடன் பசுவின் பின்புறத்தை பார்ப்பது என்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது.

lotus

அடுத்ததாக பூக்களில் சிறந்த மலர் தாமரை என்று கூறுவர். பூவிற்க்கு அருங்கலம் பொங்கு தாமரை என்று தாமரை பற்றிய சிறப்பு வரிகள் இருக்கின்றன அவ்வாறு செல்வத்தை அள்ளித் தரக்கூடியது தாமரைமலர்.

- Advertisement -

அடுத்ததாக திருவிளக்கு. விளக்கு இல்லாமல் பூஜைகள் எதுவும் கிடையாது. விளக்கின் ஒளியில் கடவுளை காணலாம் எனும் வார்த்தைகள் இந்த விளக்கின் பெருமையை உணர்த்துவதாக இருக்கின்றது. அனைத்து தெய்வங்களும் விளக்கில் அடங்கி இருந்தாலும் இந்த விளக்கினை மகாலட்சுமியின் அம்சமாக பார்ப்பதே நமது மரபாகும்.

vilakku2

அடுத்ததாக கோஜலம், கோமயம் அல்லது பஞ்சகவ்யம் இவ்வாறு சொல்லப்படும் அனைத்துமே பசுவின் உடலிலிருந்து வெளிவருபவையாகும். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் மகாலக்ஷ்மியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

- Advertisement -

அவ்வாறு வாசனை மிக்க சந்தனத்திலும் மகாலட்சுமி இருக்கிறாள். இதனை பயன்படுத்துவதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அதுபோல பூஜையில் வைக்கப்படும் தாம்பூலமும் மகாலட்சுமியின் அம்சமாகும். தாம்பூலத்தை மாற்றிக் கொண்டாலே பெண்ணிற்கும், ஆணிற்கும் திருமணம் நிச்சயமானதாக பொருள்படும்.

sandhanam

அதுபோல தூய்மையான கன்னி பெண்ணின் உருவத்திலும் மகாலட்சுமியை பார்க்கலாம். பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி போல் இருக்கிறது என்று பலரும் சொல்வதை கேட்டிருப்போம். அவ்வாறு நமது உள்ளங்கையில் மகாலட்சுமி வீற்றிருக்கிறார். காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்ப்பது ஐஸ்வர்யத்தை கொடுக்கிறது.

பூஜையின் போது செய்யப்படும் வேள்விகள், யாகங்கள் இவற்றிலிருந்து வரும் புகையிலும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கிறது. எனவே தான் இவ்வாறான பூஜைகளை அனைவரது வீட்டிலும், கோவில்களிலும் செய்து வருகின்றனர்.

homam

அடுத்ததாக வில்வ மரம், நெல்லி மரம் இவையிரண்டுமே மகாலட்சுமியின் சொரூபமாககும்.பெருமாளளின்திருக்கோவிலான ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ஒரு மரம் வில்வ மரமாகும். இது சிவபெருமானுக்கும் உரிய மரமாகும். அதுபோல நெல்லி மரம் குபேரருக்கு உரிய மரமாகும். இவ்வாறு மகாலட்சுமி தேவி பல இடங்களிலும், பல பொருட்களுக்கும் வாசம் செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -