நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் இந்த பொருளை மொத்தமாக யார் கண்ணுக்கும் காட்டாதீங்க. உங்க வீட்டு அதிர்ஷ்டம் வெளியே சென்றுவிடும்.

pickle
- Advertisement -

நமக்கு நல்லது நடக்கக்கூடிய, நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் நாம் அடுத்தவர்களிடம் முழுமையாக பகிர்ந்து கொள்ளக்கூடாது. சொல்வதற்கு இது கஷ்டமாகத்தான் இருக்கும். இருப்பினும் சில விஷயங்களில் சில நெளிவு சுளிவு, சில ஒளிவு மறைவு கட்டாயம் தேவை. எல்லா விஷயத்தையும் எல்லாரிடத்திலும் நாம் பகிர்ந்து கொண்டால் அதன்மூலம் நமக்கு சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகள் உண்டாகிவிடும். அந்த வரிசையில் உங்கள் வீட்டில் உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து தரும் சில பொருட்களை அனாவசியமாக எல்லோரிடத்திலும் காட்டக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

oorugaai-pickles

வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடியது ஊறுகாய். அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் நிறைய ஊறுகாயை போட்டு சமையல் அறையில் வைத்து இருப்பார்கள். ஆனால் அந்த ஊறுகாயை யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு சமையலறையில் கொஞ்சம் உயரமான இடத்தில் அல்லது தாழ்வான இடத்திலும் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அனாவசியமாக அந்த ஊறுகாய் யார் கண்ணுக்கும் தெரியாது.

- Advertisement -

ஊறுகாயை வெயிலில் உலர வைக்கும் போதும் கூட அதன் மேலே வெள்ளை துணியை கட்டி தான் உலர வைப்பார்கள். வாஸ்தவம் தான், ஊறுகாய்க்கு உள்ளே தூசு படக்கூடாது என்பதற்காக வெள்ளை துணியை கட்டுவது வழக்கம். இருப்பினும் அனாவசியமாக ஊறுகாயின் மீது அடுத்தவர்களுடைய கண்கள் பட்டால் அந்த ஊறுகாய் கெட்டுப் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

onion-vadagam

எல்லோராலும் அவ்வளவு சுலபமாக ஊறுகாயைப் போட்டு விட முடியாது. ஊறுகாய் போடுவதிலும் ஒரு லட்சுமி கடாட்சம் உண்டு. சில பேர் ஊறுகாய் போட்டால் அந்த ஊறுகாயில் பூசணம் பிடித்துவிடும். நீண்ட நாட்கள் நன்றாக இருக்காது. நம் வீட்டில் ஊறுகாய் நன்றாக இருக்கும்போது அடுத்தவர்களுடைய கண்கள் அந்த ஊறுகாயின் மீது படும்போது நிச்சயமாக நம் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் குறையும். அதன் மூலம் நம் வீட்டில் ஏதாவது ஒரு கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேபோல் சில பேர் வீடுகளில் திருமணம் காதுகுத்து சீமந்தம் என்று வைத்துக்கொண்டால் வெங்காய வடகம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த வெங்காய வடகம் லட்சுமிகடாட்சம் என்று சொல்லப்பட்டுள்ளது. வெங்காய வடகத்தை உருண்டை பிடித்து வைத்த பின்பு அதில் முதல் மூன்று வடகத்திற்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து இறைவனை வேண்டிக் கொண்டு அதன் பின்பு அதை வெயிலில் உலர வைப்பார்கள். இதுவும் அப்படித்தான். வடகத்தின் மீது கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக செய்யப்படும் ஒரு சாங்கியம்.

இதேபோல் நம் சமையலறையில் மொத்தமாக வாங்கி வைக்கும் பருப்பு வகைகள், தானிய வகைகள், அரிசி மூட்டை இவைகளை அப்படியே முழுமையாக அடுத்தவர்கள் கண்களில் படும்படி நிச்சயமாக வைக்கவே கூடாது. ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது. வருபவர்களுடைய கண் எப்படி எல்லாம் இருக்குமோ. மொத்தமாக நம் வீட்டில் இருக்கும் செல்வ கடாட்சம் நிறைந்த பொருட்களை எல்லாம் பார்க்கும்போது, ‘அட இவங்க வீட்டில் மட்டும் எல்லாம் இவ்வளவு நன்றாக நிறைவாக உள்ளதே’ என்று பெருமூச்சு விட்டு கண் வைத்துவிட்டால் அவ்வளவுதான். அதன் பின்பு உங்களுடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

mahalakshmi1

முடிந்தவரை மொத்தமாக இருக்கும் ஊறுகாய், மொத்தமாக இருக்கும் வடகம், மொத்தமாக இருக்கக்கூடிய தானியம் இவைகளை அடுத்தவர்கள் கண்ணிற்கு சுலபமாக தென்படும் படி வைக்காமல் இருப்பது நல்லது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -