- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalலட்சுமி கடாட்சம் மற்றும் குபேர அருளை பெற உதவும் தீபம்

லட்சுமி கடாட்சம் மற்றும் குபேர அருளை பெற உதவும் தீபம்

- Advertisement -

நாம் வழிபடும் ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் ஒவ்வொரு வேண்டுதலுக்காக வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யக்கூடிய சில முக்கியமான தெய்வங்களின் ஒருவராக திகழ்ந்தவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபட்டால் செல்வநிலை பெருகும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பணவரவை அதிகரிப்பதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

குபேர அருளை பெற உதவும் தீபம்

மகாலட்சுமி தாயார் பல பொருட்களில் நீக்குமற நிறைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அரச மரமும் மகாலட்சுமி தாயார் மற்றும் மகாவிஷ்ணு வீற்றிருக்கும் மரமாக திகழ்கிறது. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மரங்களுக்கும் அரசனாக திகழ்கிறது தான் அரசமரம். மகாவிஷ்ணு இந்த மரத்தில் நித்திய வாசம் செய்கிறார் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை அன்று மகாலட்சுமியும் இந்த மரத்தில் குடியிருக்கிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றது. இதனால் தான் அரசமரத்தை சனிக்கிழமை அன்று வளம் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதனால் இந்த வழிபாட்டை நாம் சனிக்கிழமை தோறும் செய்யலாம் அல்லது சனிக்கிழமை ஆரம்பித்து தொடர்ச்சியாக 48 நாட்களும் செய்யலாம். அரசமரத்தடியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது ஒருவகையான பரிகாரமாக இருந்தாலும், அதே போல் நம்முடைய வீட்டிலும் அரசமர இலையில் பயன்படுத்தி நாம் தீபம் ஏற்று வழிபாடு செய்தாலும் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அரச மரத்தில் இருக்கக்கூடிய இலைகளை பறிக்க வேண்டும். இந்த இலைகளை சனிக்கிழமை மட்டும் தான் பறிக்க வேண்டும். மற்ற தினங்களில் பறிக்கக்கூடாது. மற்ற தினங்களில் இலை வேண்டும் என்னும் பட்சத்தில் தானாக உதிர்ந்து கிடக்கும் இலைகளை தான் பயன்படுத்த வேண்டும்.

இரண்டு இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இலைகளை சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து அதன் நான்கு பக்கங்களிலும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இலைக்கு நடுவிலும் ஒரு சந்தனம் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த இலையை ஒரு தாம்பாள தட்டில் வைத்து இந்த இலைக்கு மேல் இரண்டு அகல் விளக்குகளை வைக்க வேண்டும். பிறகு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதே முறையில் தான் சனிக்கிழமை தோறும் அரச மரத்தடியில் நாம் தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றுவதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவது நமக்கு மகாலட்சுமி மற்றும் குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறும் மேலும் கடன் என்ற பிரச்சினையே இல்லாத சூழ்நிலை உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:அவசர பணத் தேவை பூர்த்தி அடைய பரிகாரம்

இந்த அரச இலை தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி மற்றும் குபேரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்