செல்வத்தை அதிகரிக்கச் செய்யும் லட்சுமி குபேர மந்திரம்

kuberanl

இந்த உலகத்தில் இன்றைய காலகட்டத்தில் இலவசம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. இன்றிருக்கும் அவசரமான யுகத்தில் நம்முடைய மற்றும் நம் எதிர்கால சந்ததியினர் நன்மைக்காக செல்வத்தை சேமிக்கின்றோம். ஆனால் பலருக்கும் சில எதிர்பாராத சூழ்நிலைகளால் பல விதமான செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்படியான நிலையிலிருப்பவர்கள் செல்வத்தை சேமிக்க கூற வேண்டிய மந்திரம் இது.

kuberan

லட்சுமி குபேர மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ரீம் ஷ்ரீம் குபேராய அஷ்ட லஷ்மி
மம க்ரிஹே தனம் புராய புராய நமஹ

குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளை பெற்று தரும் இம்மந்திரத்தை தினமும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக 108 முறை ஜெபிப்பது சிறப்பானதாகும். மேலும் லட்சுமி தேவியின் அருள் நிறைந்த வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் லட்சுமி தேவியின் படத்திற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி, பத்திகள் கொளுத்தி, வடக்கு திசையை பார்த்தவாறு நின்று இம்மந்திரத்தை 108 முறை ஜெபிக்க உங்களின் பொருளாதாரம் மற்றும் செல்வ சேமிப்பின் நிலை உயரும்.

இதையும் படிக்கலாமே:
கல்வியில் மேம்பட, உடல் மற்றும் மனம் தூய்மை பெற ஹயக்ரீவர் மந்திரம்

ஆதி கால மனிதன் வாழ்ந்த காலத்தில் இந்த பூமியில் இருந்த எதுவும் யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால் காலம் செல்ல, செல்ல மனிதன் தனது அறிவாற்றலால் தனது மனித சமூகத்தை முன்னேற்றினான். அத்துடன் அவனும் நாகரீகம் அடைய ஆரம்பித்தான். இப்போது இந்த மனிதன் எல்லா பொருட்களுக்கும் ஒரு மதிப்பை உண்டாக்கினான். ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் என்ற பண்ட மாற்று முறையில் வியாபாரம் செய்ய தொடங்கினான்.

money

ஆனால் இன்றைய காகிதத்தால் செய்யப்பட்ட பணம் தான் உலகத்தை ஆளுகிறது. இக்காலத்தில் இது இல்லாத மனிதன், அவன் துறவியாகவே இருந்தாலும் அவனை இந்த உலகம் மதிப்பதில்லை. அக்காலம் தொட்டு இந்த காலம் வரை செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை வணங்குகின்றனர் மக்கள். அந்த திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கே அவர் பத்மாவதி என்றழைக்கப்படும் லட்சுமி தேவியை மணம் புரிய மிகுந்த செல்வதை கடனாக வழங்கியதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட குபேரனை நாம் வழிபடுவதால் நமது செல்வ சேமிப்புகள் உயரும்.

English Overview:
Here we have Lakshmi kubera mantra in Tamil. By chanting this mantr aone can get grace of Kuberan and Lakshmi and get money.