எத்தனை பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும் அவை நீங்கி பண வரவு அதிகரிக்க இந்த பூஜையை ஒரே ஒரு முறை செய்தாலே போதும்.

Kuberan valipadu
- Advertisement -

நாம் என்னதான் உலகின் மிகச்சிறந்த கல்வி கற்றிருந்தாலும், நம்மிடம் செல்வம் இல்லை என்றால் நம் நெருங்கிய உறவுகளுக்கு கூட நம் மீது மதிப்பு ஏற்படாது. ஒருவருக்கு செல்வந்த வாழ்க்கை ஏற்பட அவரின் முன்வினை பலன்களும், அவர் முன்னோர்களின் புண்ணிய பலன்களும் பிரதான காரணமாக அமைகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதே நேரத்தில் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் பொருளாதார கஷ்டங்களால் மன வருத்தம் கொண்டிருப்பவர்களும் செல்வந்த வாழ்க்கையைப் பெற நம் முன்னோர்கள் நமக்கு அருளிய ஒரு பூஜை முறை தான் லட்சுமி குபேர ஹோமம் பூஜை. லட்சுமி குபேர ஹோமம் பூஜை குறித்த சிறப்புகளையும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

லட்சுமி குபேர ஹோமம் செய்வதற்கு அந்த ஹோமத்தை செய்து கொள்கின்ற நபரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற யோகம் மற்றும் திதி அமைந்து வரக்கூடிய சுப தினத்தில் ஹோமம் செய்ய புரோகிதர்கள் நாள் குறித்து கொடுப்பார்கள். லட்சுமி குபேர ஹோமம் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படுகின்றது. சித்திரை மாதம் வரக்கூடிய “அட்சய திருதியை” தினத்தில் இந்த ஹோமத்தை செய்தால் நல்ல பலன் உண்டு.

- Advertisement -

லட்சுமி குபேர ஹோமம் பூஜை என்பது செல்வத்தின் கடவுளான மகாலட்சுமி தேவியையும் மற்றும் உலகின் அனைத்து வகையான செல்வங்களை நிர்வகிக்கும் செல்வ அதிபதியான குபேர பகவான் ஆகிய இரண்டு தெய்வங்களின் அருட்கடாட்சம் நம் வீட்டில் நிறைந்திருக்க செய்யப்படுகின்றது. பொதுவாக நீங்கள் புதிதாக வீடு கட்டி முடித்திருக்கும் பட்சத்தில், புதுமனை புகுவிழா முடிந்த பின்பு, அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்பாக இந்த லட்சுமி குபேர ஹோமம் பூஜை செய்த பின்பு குடியேறினால் செல்வ வளமான வாழ்க்கையை பெறலாம்.

இந்த லட்சுமி குபேர ஹோமம் பூஜையை அனுபவம் வாய்ந்த புரோகிதர்களின் வழிகாட்டுதல்படி ஹோம பூஜை சடங்கினை செய்ய வேண்டும். லட்சுமி குபேர ஹோமம் பூஜை செய்து கொள்ளும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் உண்ணாமல் ஹோம பூஜை செய்கின்ற இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

லட்சுமி குபேர ஹோம பூஜை செய்யப்படுவதற்கு முன்பாக 16 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு, மகாலட்சுமி வில்வ இலைகளாலும், குபேர பகவான் உங்கள் வீட்டில் இருக்கின்ற செம்பு, வெள்ளி நாணயங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவார்கள். லட்சுமி தேவி மற்றும் குபேர பகவானுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டு, ஹோம பூஜை முடிந்ததும் அவை பூஜை செய்து கொள்பவர்களுக்கு பிரசாதமாக தரப்படுகின்றது.

திடமான நம்பிக்கையுடன் இந்த லட்சுமி குபேர ஹோம பூஜையை செய்து கொள்ளும் நபர்களின் வாழ்வில் எத்தனை பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும் அவை படிப்படியாக குறைந்து, செல்வம் பெருகி சமூகத்தில் கௌரவமான நிலையை அடைவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் பொருளாதார நஷ்டம் ஏற்படாமல் தடுக்கக் கூடிய ஆற்றல் இந்த லட்சுமி குபேர ஹோமம் பூஜைக்கு உண்டு. கடுமையான கடன் பிரச்சினைகளால் அவதிப்படும் நபர்கள் சற்று கூடுதலாக செலவு செய்து நம்பிக்கையுடன் இந்த லட்சுமி குபேர ஹோம பூஜையை செய்து கொள்வதால் லட்சுமி அருளால் வெகு சீக்கிரத்திலேயே கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள்.

- Advertisement -