கோடி ரூபாய் கேட்டாலும், கொட்டிக்கொடுக்கும் லக்ஷ்மி குபேரர் வழிபாடு! ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.

lashmikuberar

நீண்ட நாட்களாக இருந்து வரும் பண பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நீண்ட நாட்களாக விற்காமல் இருக்கும் சொத்து விற்க வேண்டும் என்றாலும், நீண்ட நாட்களாக உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நீங்க, தொழிலில் அதிக லாபம் பெற, பணம் சம்பாதிக்க நீங்கள் எடுக்கக் கூடிய எல்லா முயற்சியும் வெற்றி அடைய, லக்ஷ்மி குபேரரை, உங்கள் வசப்படுத்தி வேண்டுதலை வைக்க வேண்டும். லக்ஷ்மி குபேரரை நம் வசப்படுத்த கூடிய, நம் முன்னோர்கள் சொன்ன ஒரு எளிமையான வழிபாடு தான் இது. பலவகையான, பண பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

lakshmi kubera

பூஜை அறையில், ஒரு பாய் விரித்தோ அல்லது மரப்பலகை போட்டோ அமர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்ததாக, நம் எல்லோரது வீட்டிலும் பித்தளை சொம்பு கட்டாயம் இருக்கும். அந்த சொம்பில் நல்ல தண்ணீரை முழுமையாக நிரப்பி, சுத்தமான விபூதியை அந்த நீரில் கலந்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் எந்தப் பூவாக இருந்தாலும், அந்த சொம்பில் இருக்கும் தண்ணீரின் மேல் மிதக்க விட்டு, பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

அதன் பின்பாக, ஒரு செம்பு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். செம்பு டம்ளர் இல்லாதவர்கள், கண்ணாடி டம்ளரில் நல்ல தண்ணீரை எடுத்து, உங்கள் முன்பு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு தட்டில் கிராம்பையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கிராம்பை மட்டும் உங்கள் கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு, லக்ஷ்மி குபேரரையும், மகாலட்சுமியையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் எதுவாக இருந்தாலும், அதை மனதில் நினைத்துக்கொண்டு, தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கையில் இருக்கும் கிராம்பை உங்களது வாயின் பல் இடுக்கில் வைத்து கடித்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்பாக இருக்கும் செம்பு டம்ளர் நிறைய தண்ணீர் இருக்கின்றது! உங்களது வாயில் கிராம்பை கடித்து கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பட்சத்தில், நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்திற்கு கட்டாயம், லக்ஷ்மி குபேரர், நீங்கள் வேண்டிய வேண்டுதலுக்கு வரத்தை அளிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ!

- Advertisement -

‘ஓம் லஷ்மி குபேராய நம’!

guberan

இது ஒரு வரி மந்திரம் தான். ஆனால், மேல் குறிப்பிட்டுள்ள முறைப்படி கிராம்பை, உங்கள் வாயில் வைத்துக்கொண்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கும் பட்சத்தில், அந்த மந்திரத்திற்கான சக்தி அதிகரிக்கப்படுகிறது. நீங்கள் உச்சரிக்கக் கூடிய இந்த மந்திரத்தின் சக்தி அனைத்தும், உங்கள் முன் இருக்கும், அந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். மந்திரத்தை உச்சரித்து விட்டு அந்த தண்ணீரை நீங்கள் பறக்கிவிடலாம். சில பேருக்கு கிராம்பு சாப்பிட பிடிக்காது. உங்கள் வாயில் இருக்கும் கிராம்பை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். உங்களால் கிராம்பை வாயில் அடைத்து வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், இதேபோல் வாசனை மிகுந்த ஏலக்காய் வைத்தும், இந்த மந்திரத்தை உச்சரிப்பது தவறில்லை. வாயிலிருக்கும் ஏலக்காயாக இருந்தாலும், கிராம்பாக இருந்தாலும், அதை வெளியில் துப்பி விட்டு தண்ணீரை குடித்து விடுங்கள்.

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, தண்ணீரை பருகி விட்டு, உங்களது தகுதிக்கு ஏற்றவாறு எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை உங்களுடைய குறிக்கோளாக ஏற்று, உங்களது முயற்சிகளை தொடங்கினால், நிச்சயம் அதில் அதிகப்படியான வருமானத்தை பார்க்க முடியும்.

guberan

லட்சுமி குபேரரை உங்கள் வசப்படுத்திக் கொள்ள தினம்தோறும், காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு இந்த பூஜையை செய்யலாம். முடிந்தவரை காலை நேரத்திலேயே பூஜையை முடித்து விடுங்கள். காலை 8.00 மணிக்கு முன்பாக! தொடர்ந்து 48 நாட்கள் முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பணம் சம்பாதிக்க, எந்த ரூபத்திலாவது நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

cash

இன்று பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களா? என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். பிறப்பிலேயே யோகம் உள்ளவர்களுக்கு, பூஜை புனஸ்காரங்கள் செய்ய தேவை இல்லை. ஏனென்றால் பிறப்பிலேயே அவர்கள் யோகக்காரர்கள் ஆகத்தான் இருப்பார்கள். ஜாதக கட்டத்தில் குபேரயோகம் இல்லாதவர்கள், கட்டாயம் இப்படி ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்து தான் அதிர்ஷ்டத்தை அடைய முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வெற்றிலையை வீட்டின் முன் வளர்க்கக் கூடாது என்பார்கள். அது எதற்காக என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.