வெற்றிலையை வீட்டின் முன் வளர்க்கக் கூடாது என்பார்கள். அது எதற்காக என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

vetrilai-mahalakshmi

வெற்றிலையை வீட்டிற்கு முன் ஏன் வளர்க்கக் கூடாது என்று கூறுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. வெற்றிலை மங்கலப் பொருளாக இருந்தாலும் அதை வீட்டிற்கு முன்னால் வளர்ப்பதை அபசகுனமாக கருதுகிறார்கள். வெற்றிலை கொடி கட்டாயம் வீட்டில் இருப்பது நல்லது தான். ஆனால் அது வீட்டிற்கு முன்னால் வளர்க்கக் கூடாது என்று தான் சொல்கிறார்கள். வீட்டிற்கு பின்னால் தாராளமாக நீங்கள் வளர்க்கலாம். வீட்டிற்கு இருபுறங்களிலும் இடம் இருக்குமாயின் அங்கெல்லாம் நீங்கள் வெற்றிலை கொடியை நன்றாக படர விடலாம். வீட்டிற்கு முன் பகுதியில் மட்டும் வெற்றிலை செடியை நிச்சயம் வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் என்கிறார்கள். அதன் ஆன்மீக காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vetrilai-kodi

வெற்றிலை கார்ப்பு தன்மை கொண்டுள்ளதால் ஆரோக்கியம் சார்ந்த பல நல்ல விஷயங்களுக்கு இது பயன்பட்டு வருகிறது. அசைவ உணவுகளை சாப்பிடும் பொழுது உண்டாகும் அஜீரண கோளாறுகளை சரி செய்ய வெற்றிலை பாக்கை சாதாரணமாக வெறும் வாயில் மென்று விட்டால் போதும் உடனே தீர்வு கிடைத்து விடும்.

இதன் கார்ப்பு தன்மையால் விஷம் முறிப்பு ஆற்றல் பெற்றுள்ளது. தேள் கடிக்கு வெற்றிலையை மென்று தின்றால் நிவாரணம் கிடைக்கும் என்பார்கள். வெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பதால் விஷப்பூச்சிகள் மற்றும் இன்னபிற ஜந்துக்களும் வீட்டை நெருங்காது என்பார்கள். அதே போல் வெற்றிலை வளரும் வீடுகளில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளை செய்ய முடியாது என்றும் கூற்றுகள் உள்ளன.

vetrilai-kodi

வெற்றிலையை வீட்டின் முன் வளர்த்தால் வம்சம் தழைக்காது என்பார்கள். அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு திருமணத்தடை நிகழும் என்றும், குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்காது என்றும் கூறுவார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது. வெற்றிலையை வளர்த்தால் அந்த வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும் என்பார்கள். மகாலட்சுமியின் அம்சமாக வெற்றிலை பார்க்கப்படுவதால் வெற்றிலை வளர்ப்பது செல்வ வளத்தை தரும். ஆனால் அதை வெறும் வெற்றிலையாக நீங்கள் வளர்க்காமல் அதனுடன் சேர்த்து மற்ற செடி வகைகளையும் வளர்ப்பது நல்லது.

- Advertisement -

வெறும் வெற்றிலை ஆகாது என்பார்கள். ஒரு தாம்பூலம் கொடுக்கும் பொழுது வெறும் வெற்றிலையை யாரும் கொடுப்பதில்லை. பாக்கு, பழம், பூ சேர்த்து வைத்து தான் கொடுப்பார்கள். தானம் செய்வதானாலும் சரி, மங்கல விஷயங்கள் குறித்த செயல்பாடுகளிலும் சரி, வெற்றிலையை தனியாக யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அதே போல தான் வெற்றிலை கொடியை தனியாக வளர்ப்பது தவறு. அதனுடன் வாழைமரம், பூச்செடிகள் போன்றவற்றை சேர்த்து வளர்ப்பது நன்மைகளை அளிக்கும்.

vetrilai-pakku-pazham

வெற்றிலையில் பூ பூக்காது, காய் காய்க்காது என்ற காரணத்தினால் இதை ஆண் தன்மையுடைய இலையாக பார்க்கிறார்கள். தனித்து இருக்கும் ஆண் மங்கல நிகழ்வாக இருப்பதில்லை. ஆணுடன் கூடிய பெண்ணுக்கு மங்களம் உண்டு என்பதால். வெற்றிலையை தனியாக தாம்பூலம் கொடுப்பதோ, தோட்டத்தில் வளர்ப்பதோ செய்யக்கூடாது என்கிறார்கள். இந்த காரணத்தினால் தான் வீட்டிற்கு முன் அனைவரும் பார்க்கும் வண்ணம் வெற்றிலை கொடியை வளர்ப்பதை விட மற்ற செடி கொடிகளோடு வீட்டிற்கு பின்னால் வளர்ப்பது சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் என்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே
பல்லியை விரட்டினால் பணப் பிரச்சனை வருமா? மயிலிறகு வீட்டில் எப்படி வைத்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.