செல்வ செழிப்பை வாரி வழங்கும் லட்சுமி குபேரர் வழிபாடு

lakshmi kuberar
- Advertisement -

செல்வம் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள். மகாலட்சுமி தாயார் தன்னுடைய மனம் இறங்கி ஒருவருக்கு செல்வத்தை வாரி வழங்க வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் குபேரரின் அனுமதி இருக்க வேண்டும். குபேரரின் அனுமதி இல்லாமல் மகாலட்சுமி தாயாரால் யாருக்கும் செல்வத்தை வாரி வழங்க முடியாது என்பதால் நாம் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதற்கு வீட்டிலேயே எப்படி லட்சுமி குபேரர் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடியவள் மகாலட்சுமி தாயார் என்றாலும் அந்த செல்வத்தை யாரிடம் தர வேண்டும் என்பதை நிர்ணயிக்க கூடியவராக திகழ்ந்தவர் தான் குபேரர். தேவர்களின் நிதி அமைச்சராக திகழக்கூடியவரும் இவர்தான். தன்னை நினைத்து வழிபாடு செய்பவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டில் மனமிரங்கி வந்து செல்வத்தை வாரி வழங்கும் ஆற்றல் மிக்கவராக மகாலட்சுமி தாயார் இருந்தாலும் அவர் நல்லவரா? கெட்டவரா? அவரின் எண்ணங்கள் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு செல்வத்தை தரலாமா? தரக் கூடாதா? என்பதை நிர்ணயிக்கக் கூடியவர் குபேர பகவான். குபேர பகவான் நினைத்தால் தான் செல்வ செழிப்பு ஏற்படும்.

- Advertisement -

லஷ்மி குபேரர் வழிபாடு

குபேரருக்கு உகந்த கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. அதுவும் மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணி என்பது குபேரருக்குரிய காலமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் அதாவது மாலை 5:30 மணிக்கு நம் வீட்டு நிலை வாசலுக்கு வெளியில் அதாவது நம் வீட்டிற்குள் செல்வதாக இருந்தால் நிலைவாசலின் இடது புறமாக இருக்கும் இடத்தில் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். அதற்கு மேல் பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும். அந்த கோலத்திற்கு மேல் இரண்டு சிறிய தாம்பாளங்களை வைத்து அதில் இரண்டு அகல்களை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அடுத்ததாக நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை சரிசமமாக நறுக்கி ஒரு பாதியில் மஞ்சளும் மற்றொரு பாதியில் குங்குமமும் வைத்து அந்த இரண்டு விளக்குகளுக்கு முன்பாக வைக்க வேண்டும். குபேரருக்கு மிகவும் உகந்த மலராக கருதப்படுவது ஊதா நிறத்தில் இருக்கக்கூடிய மலர்கள். அந்த மலர்கள் கிடைத்தால் அதை வைக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு மலரை கூட வைக்கலாம்.

- Advertisement -

வாசலின் விளக்கேற்றிவிட்டு வீட்டு பூஜை அறைக்கு வந்து குபேரருக்கு பச்சை பயறு சுண்டலை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு ஐந்து ரூபாய் நாணயங்கள் 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து வைத்து “ஓம் குபேராய நமஹ” என்னும் மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது நம்மால் இயன்ற அளவு சத்தத்துடன் செய்ய வேண்டும். 6:30 மணி வரை வாசலில் அந்த விளக்கு எரிய வேண்டும்.

பிறகு அந்த விளக்கை வீட்டு பூஜை அறையில் எடுத்து வைத்து 8:30 மணி வரை எறிய விட வேண்டும். இதுதான் குபேர பூஜை. மறுநாள் காலையில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். அதற்கு சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்களால் லட்சுமி அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். வெள்ளை மொச்சையை சுண்டலாக செய்து மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குபேரர் மற்றும் மகாலட்சுமி தாயார் இருவரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: காரியதடை விலக ஆஞ்சநேயர் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை நாமும் நம்பிக்கையுடன் பின்பற்றினால் நம் வாழ்நாள் முழுவதும் பணம் தொடர்பான எந்த பிரச்சனைகளும் ஏற்படாது.

- Advertisement -