காரியதடை விலக ஆஞ்சநேயர் பரிகாரம்

hanuman
- Advertisement -

எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில், நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம் உழைப்பின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை பேர் போட்டிக்கு வந்தாலும் சரி அவர்களை எதிர்த்து போராடி, வெற்றி காண வேண்டும் என்ற எண்ணம் நம் ஆழ்மனதில் உருவாக வேண்டும்.

அப்படி இருக்கும்போது தான் நம் கையில் எடுக்கும் காரியம் வெற்றியில் முடியும். ஒரு காரியத்தை தொடங்கும் போதே, இது நம்மால் முடியுமா முடியாதா. இந்த காரியத்தை தொடங்கலாமா வேண்டாமா, என்ற மன சஞ்சலத்தோடு, ஒரு விஷயத்தை தொடங்கும் போது தடுமாற்றம் இருந்தால், அந்த முயற்சி உங்களுக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்காது.

- Advertisement -

ஆகவே நம்பிக்கையோடு ஒரு காரியத்தை கையில் எடுங்கள். நிச்சயம் அந்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கூடவே சேர்த்து நம்பிக்கையோடு, இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்கு பல மடங்கு பலத்தைத் தரும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து வெளிவந்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். தோல்வியிலிருந்து மீண்டு வர செய்ய வேண்டிய பரிகாரம்.

வெற்றி தரும் அனுமன் வழிபாடு

வெற்றிக்கு உண்டான இரண்டு பொருட்கள். வெற்றிலை, வெட்டி வேர். இந்த இரண்டு பொருட்களும் இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவைப்படும். ஒரு வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். வெற்றிலை சுத்தமாக இருக்க வேண்டும். நடுவில் ஓட்டை, பூச்சி கடித்தது அப்படியெல்லாம் எதுவும் இருக்கக்கூடாது.

- Advertisement -

சுத்தமான வெற்றிலைக்கு நடுவே ஒரு வெட்டிவேரை மடித்து வைத்து, அந்த வெற்றிலையை சுருட்டி சின்னதாக மஞ்சள் நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். வீட்டிலேயே இதை தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் அனுமனின் சன்னிதானம் இருக்கிறதா என்று பாருங்கள். அந்த அனுமனின் பாதங்களில் இந்த வெற்றிலையை கொண்டு போய் வைத்துவிட்டு, மனமார வேண்டிக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு நான் எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றிக்கான வேண்டும். காரியத்தடை வரக் கூடாது. என்னுடைய மனம் பலவீனம் அடையக் கூடாது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து போராட பலத்தை எனக்கு கொடு ஆஞ்சநேயா என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயருடைய பலம் நமக்கு தெரியாதா. நிச்சயமாக அவர் உங்களுக்கு வெற்றிக்கான ஆசீர்வாதத்தை கொடுப்பார்.

- Advertisement -

தைரியத்தையும் கொடுப்பார். ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்த அந்த வெற்றிலையை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் பர்ஸில் கூட இதை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். பிறகு உங்களுடைய முயற்சிகளை தொடருங்கள். ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஏதாவது ஒரு முக்கியமான வேலை இன்னைக்கு இன்டர்வியூக்கு போறீங்க அல்லது தொழிலில் மிகப்பெரிய மீட்டிங் இருக்கு. நீங்க தான் தைரியமா பேச போறீங்க. நீங்க பேசும் பேச்சை வைத்து தான் உங்க கம்பெனிக்கு பெரிய காண்ட்ராக்ட் கிடைக்கணும். அப்படின்னு ஒரு சூழ்நிலை வருது எனும்போது இந்த பரிகாரத்தை  செய்யலாம்.

பத்து பொண்ணு பாத்தாச்சு, ஒரு பொண்ணு கூட செட் ஆகல என்பவர்களும் இந்த இரண்டு பொருட்களை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வரன் பார்க்க செல்லலாம். இப்படி உங்களுக்கு காரியத்தடை எந்த விஷயத்தில் இருக்கிறதோ, அந்த விஷயம் சக்ஸஸ் ஆக இப்படி செஞ்சுக்கோங்க. கோர்ட் கேஸ் வழக்குகள் இழுப்படியாக இருக்கு. ஒரு முறை கோர்ட்டுக்கு போகும்போது, இந்த 2 பொருளையும் அனுமன் பாதத்தில் வைத்து உங்க கூடவே எடுத்துச் செல்லுங்க.

கோர்ட் கேஸ் வழக்கு ஒரு முடிவுக்கு வரும். பல வருட பிரச்சனை ஒரே நாளில் தீரும். ரொம்ப நாளா குழந்தை வேண்டும் என்று மருத்துவமனைக்கு போகின்றோம். குழந்தை வரம் கிடைக்க இந்த பரிகாரம் செய்யலாம். நீண்ட நாள் வியாதி சரியாக வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: டென்ஷனை குறைக்க பரிகாரம்

மாலை வீடு திரும்பும் போது, இந்த வெற்றிலியையும் வெட்டிவேரையும் உங்க வீட்டு வெளி பக்கத்தில் செடி கொடிகள் கீழே போட்டு விடுங்கள். ஹனுமன் பாதங்களை பற்றியவர்கள் தோற்றதாக சரித்திரமே கிடையாது. அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனை வணங்கி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -