எதிர்காலம் அமோகமாக அமையவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் இந்த 4 வரிகளை படித்தால் போதுமே!

lakshmi-narasimmar-vishnu

பொதுவாகவே இன்று இருக்கும் சூழ்நிலையில் எல்லாருக்கும் எதிர்காலம் பற்றிய பயம் நிச்சயம் மனதிற்குள் இருக்கும். ஒவ்வொருவரும் பல பல கனவுகளோடு கொள்கைகள் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் திடீரென புரட்டிப் போட்ட மாதிரி திக்குத் தெரியாமல், மீண்டும் பழைய நிலைக்கே மாறுமா? இல்லை இன்னும் எவ்வளவு காலம் இப்படி இருக்கும்? என்கிற பயம் நிச்சயம் இருக்கும். எதிர்காலம் பற்றிய பயத்தையும், உங்களை சுற்றியுள்ள எதிரிகள் தொல்லைகள் நீங்கவும், ஆதிசங்கரர் அருளிய கராவலம்ப ஸ்தோத்திரத்தை படித்தாலே போதும். அதன் பொருள் என்ன? ஸ்தோத்திர வரிகள் என்ன? என்பதை பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஆதிசங்கரர் லட்சுமி நரசிம்மருக்கு பாடிய ஸ்தோத்திரம் இது. இந்த பாடலை தினமும் பாடுவதால் பகைவர்கள் தொல்லை நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும் என்பார்கள். உங்களுக்கு இருக்கும் போட்டிகளும், பொறாமைகளும் குறைந்து நீங்கள் வாழ்வில் வளம் பெற தினமும் இந்த 4 வரியை பாடினால் போதும்.

கராவலம்ப ஸ்தோத்திரம்:
மத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

vishnu-laxmi

இதன் பொருள் என்ன?
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கின்ற பெருமாளே! ஒளிரும் நிறம் கொண்ட அழகிய திருமேனி உடையவரே! ரிஷி, முனிவர்களை காத்து அருள்பவரே! உம்மை சரணாகதி அடைந்த பக்தர்களையும் காக்கின்ற அருள் வடிவானவர் நீர்தானே! இந்த வாழ்க்கை எனும் பெருங்கடலை கடக்க படகாக இருந்து பாதுகாப்பு தருமாறு அருள்புரிய வேண்டுகிறோம் நரசிம்மரே!! என் கைபிடித்து தூக்கிவிட்டு அருள்புரிய வேண்டும். என்பது தான் இந்த பாடலின் பொருளாகும்.

- Advertisement -

இந்த பாடலை இப்போது தான் பாட வேண்டும் என்கிற நேரம் காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது. எப்போதெல்லாம் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயமும், பதட்டமும் ஏற்படுகிறதோ! அப்போதெல்லாம் இந்த நான்கு வரிகளை உச்சரித்தால் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் உங்களை பாதுகாத்து அருள்வார். பக்தர்களைக் காக்க அவதாரம் எடுத்தவர் லக்ஷ்மி நரசிம்மர். கூப்பிட்ட குரலுக்கு நிச்சயம் ஓடோடி வருவார். சிறுவனாகிய பக்த பிரகலாதனை காக்க அவதாரம் எடுத்தவர், பக்தர்களாகிய நம்மை காக்கவும், கைதூக்கி விடவும் நிச்சயம் வருவார்.

Narasimmar

உங்களை சுற்றி நடக்கும் பிரச்சனைகளை பார்த்து பயப்படாமல் அதனை எதிர்கொள்ளும் தைரியம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வந்து முடிந்தவை திரும்ப வருவதில்லை. அதைப் பற்றிய சிந்தனையை தூக்கி எறிந்து விட்டு எதிர்காலத்தை பற்றிய திட்டமிடலை மேற்கொள்ளுங்கள். இனி வரும் காலம் வசந்த காலமாக மாற நரசிம்மரை வேண்டுங்கள். எதிர்காலம் பலமாக, வளமாக அமைய லட்சுமி நரசிம்மர் நிச்சயம் துணையாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுடன் இந்த நாலு வரிகளை வாசித்து எதிர்காலத்தை சிறப்பாக்கி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 மந்திரத்தை இப்படி உச்சரித்தால் ஏழேலு ஜென்மத்தில் செய்த பாவங்கள் எல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா? உங்கள் வாழ்விலும் அதிசயங்கள் நடக்க இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.