நம்ம வீட்டிலேயே, நம்ம கையால, சுலபமா ‘லேஸ் சிப்ஸ்’ செய்வது எப்படி? உருளைக்கிழங்கு சிப்ஸை வீட்டின் போட்டால் மட்டும் நமத்து போக காரணம் என்ன? நீங்க தெரிஞ்சுக்க ஆசை பட்றீங்களா?

chips1
- Advertisement -

கடைகளில் விற்கும் லேஸ் சிப்ஸின் சுவை, அப்படியே நாவில் ஒட்டிக்கொள்ளும். பளபளவென பாக்கெட்டை பார்த்துவிட்டால், போதும். வாங்கி சாப்பிட தோன்றும். அந்த லேஸ் சிப்ஸை, எப்படி நம்முடைய வீட்டில் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து ஆரோக்கியமாக செய்யக்கூடிய சிப்ஸ் என்று கூட இதை சொல்லலாம். கொஞ்சம் சிரமம் பார்க்கவேண்டாம். ஆரோக்கியமான இந்த சிப்ஸை உங்கள் கையால் செய்து, கொடுத்தால் குழந்தைகளுடைய வயிற்றுக்கு எந்த கேடும் இருக்காது.

potato

முதலில் உருளைக்கிழங்கு சிப்ஸ் போட வேண்டும் என்றால், அதற்காக நாம் வாங்கக்கூடிய உருளைக்கிழங்கு, ‘சிப்ஸ் போடும் உருளைக்கிழங்கா’ என்று பார்த்து வாங்க வேண்டும். வீட்டில் பொரியலுக்கு, மசாலா விற்காக பயன்படுத்தக்கூடிய உருளைக்கிழங்கு ஈரப்பதம், அதாவது தண்ணீர்பலம் அதிகமாக இருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்காக பெரிய அளவில் இருக்கக்கூடிய, ஈரப்பதம் குறைவாக இருக்கக் கூடிய உருளைக்கிழங்கு என்று கேட்டு, கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். இது நிறைய பேருக்கு தெரியவில்லை. பொரியலுக்கு பயன்படுத்தும் உருளை கிழங்கை வைத்து சிப்ஸ் போட்டால், சிப்ஸ் நமத்துப் போய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிப்ஸ் போடக்கூடிய பெரிய அளவில் உருளைக்கிழங்குகளை எடுத்து முதலில் தோல் சீவி அதன்பின்பு, சிப்ஸ் போடும் கட்டையில் வைத்து உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். சீவிய உருளைக் கிழங்கு ஸ்லைஸை தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். இந்த உருளைக்கிழங்கு ரொம்பவும் தடிமனாகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் மெலியதாகவும் இருக்கக்கூடாது. சீவும்போது பார்த்து சீவ வேண்டும். (சிப்ஸ் கட்டையில் பின்பக்கம் வரிவரியாக இருக்கும் பகுதியில் உருளைக்கிழங்கை சீவினால் அந்தப் அரிவரி அச்சு கிடைக்கும்.)

chips

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிய தக்காளி – 2, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், சர்க்கரை – 1 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், சிறிய துண்டு இஞ்சி, ஒரு பல் பூண்டு, சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி கொஞ்சமாக தண்ணீரை விட்டு ரசம் போல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் தண்ணீரில் சீவி போட்டு வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, நன்றாக தண்ணீர் வடித்து விட்டு, தயாராக இருக்கும் மசாலா ரசத்தில் உருளைக்கிழங்குகளை மூழ்க வைத்து, ஃப்ரீஸரில் 15 லிருந்து இருபது 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். மசாலா கலந்த உருளைக்கிழங்கை, ஃப்ரீசரில் வைத்தால், மசாலாவை சீக்கிரமே உருளைக்கிழங்கு உறிஞ்சிக் கொள்ளும்.

chips2

இந்த உருளைக்கிழங்கை 20 நிமிடங்கள் கழித்து ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டு, மசாலா தண்ணீரில் இருக்கும் உருளைக்கிழங்கை, ஒவ்வொன்றாக எடுத்து காட்டன் துணியின் மேல் உலர வைத்து விடுங்கள். அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து, சிப்ஸ் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உலர்ந்த உருளைக்கிழங்குகளை எடுத்து பக்குவமாக பொரித்தெடுத்தால், மொறேமொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் ஆகி இருக்கும். அதுவும் லேஸ் டேஸ்டில்.

- Advertisement -

chips4

கொஞ்சமாக சாட் மசாலா, கொஞ்சம் உப்பு இந்த இரண்டு பொருட்களையும் கலந்து எடுத்து, இந்த உருளைக்கிழங்கு சிப்ஸின் மேலே தூவி சாப்பிட்டால் இதன் சுவை சூப்பராக இருக்கும். உங்களுக்கு மசாலா எல்லாம் தேவை இல்லை என்றால், உப்பு தண்ணீரில் உருளைக்கிழங்கைப் போட்டு 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து விட்டு அதன் பின்பு தண்ணீரை நன்றாக வடிகட்டி உருளைக்கிழங்கு உலர வைத்து, நேரடியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் உப்பு சேர்த்த சுவையான மொறுமொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் உங்களுக்கு கிடைக்கும்.

chips3

ட்ரை பண்ணி பாருங்க! கட்டாயம் சிப்ஸ் போடுகின்ற உருளைக்கிழங்கை வாங்கி, சிப்ஸ் போட்டால்தான் நன்றாக வரும் என்பதை மறுபடி ஒருமுறை நினைவுகூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எந்த திசையில் எந்த செடி இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும் என்று தெரிந்து கொண்டு வையுங்கள்! யோகம் தரும் செடிகளும் அவை வைக்க வேண்டிய இடங்களும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -