சம்மருக்கு ஏற்ற செம ஐடியாங்க இது. இந்த காலியான பவுச்சை இனி குப்பைத் தொட்டியில் பார்த்தால் கூட, யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்து பீரோவில் பூட்டி வச்சுக்குவீங்க.

pouch3
- Advertisement -

பெரும்பாலும் நாம் எல்லோர் வீட்டிலும் பவுச்சில் விம் லிக்விட், துணி துவைக்க கூடிய லிக்விட் என்று ரகவாரியாக, சைஸ் வாரியாக லிக்விட்களை வாங்கி பயன்படுத்துவோம். பவுச்சுக்கு உள்ளே இருக்கும் லிக்விட் தீர்ந்து போய்விட்டால், அந்த பவுச்சை தூக்கி உடனடியாக குப்பை தொட்டியில் போட்டு விடுவோம். அப்படி போடாவே மாட்டீங்க. பின்னாடி சொல்ல கூடிய இந்த டிப்ஸ் எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால். இந்த சம்மர் சீசனுக்கு ஏற்றபடி, இந்த காலியான பவுச்சை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய சின்ன சின்ன பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

முதலில் ஒரு சிறிய விம் லிக்விட் பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பவுச்சை சுத்தமாக கழுவ வேண்டும். உள்ளே இருக்கக்கூடிய அந்த விம் லிக்விடின் வாசமே தெரியக்கூடாது. இதற்கு மட்டும் அல்ல வேறு எந்த குறிப்புக்கு நீங்கள் இந்த பவுச்சை பயன்படுத்துவதாக இருந்தாலும், முதலில் அதை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கழுவிய அந்த சின்ன பவுச்சுக்கு உள்ளே கொஞ்சம் தண்ணீரைப் பிடித்து மூடி போட்டு டூ வீலர் பவுச்சில் வெச்சுக்கோங்க. குழந்தைகள் சைக்கிள் ஓட்டுபவர்களாக இருந்தால் அவர்களுடைய சைக்கிள் கூடையில் ஒன்று வச்சிடுங்க. வண்டியை எடுத்துட்டு போகும்போது அவர்களுக்கு அவசியமாக கை கழுவ முகம் கழுவ தண்ணீர் தேவைப்பட்டால் இந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு வாட்டர் கேன் வச்சுக்கலாமே என்று சில பேர் யோசிக்கலாம். வாட்டர் கேன் உருண்டையாக நீளமாக இருக்கும் அதை ஸ்டோர் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். இந்த பவுச் என்றால் ஸ்டோர் செய்வதற்கு எந்த சிரமமும் இருக்காது.

- Advertisement -

கொஞ்சம் பெரிய பவுச் ஆக உங்களுக்கு கிடைத்தால் அதாவது 3 லிட்டர், 5 லிட்டர் எல்லாம் துணி துவைக்கும் லிக்விட் கூட இப்போது இப்படிப்பட்ட பவுச்சில் நமக்கு கிடைக்கிறது. அந்த பெரிய பவுச்சை எப்படி பயன்படுத்துவது. சுத்தமாக கழுவிய பவுச்சின் வாய்ப்பகுதியில், உங்கள் வாயை வைத்து நன்றாக காற்றை நிரப்பி விடுங்கள். (அந்த பவுச்சில் லிக்விட் வாசம் வீசினால் அந்த வாய்ப்பகுதியில் ஒரு கர்சிஃப்பை போட்டுவிட்டு அதன் பின்பு காற்று ஊதுங்கள்.) சுலபமாக காற்று நிரம்பிவிடும்.

உடனடியாக அந்த பவுச்சை மூடியை போட்டு மூடிவிட்டால் ஏர் பில்லோ டக்குனு ரெடி. தேவைப்படும்போது காற்றின் நிரப்பி தலையணையாக பயன்படுத்துங்கள். தேவையில்லாத போது காற்றே வெளியே எடுத்து விட்டு, சுருட்டி ஹேண்ட் பேக்கில் ஸ்டோர் செய்யுங்கள். இந்த சம்மருக்கு டிரெயின், கார் இப்படி டிராவல் செய்யும் போது இது கட்டாயம் தேவைப்படும். இதன் மேலே அப்படியே தலை வைக்க சிரமமாக இருந்தால், ஒரு சின்ன துண்டை போட்டு கவர் செய்து தலையணையாக பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -

உங்க வீட்ல சின்ன குழந்தைகள் இருக்காங்களா. அவங்களை பைக்கில் முன்னாடி உட்கார வைத்து வண்டி ஓட்டுவீங்களா. அவங்க அடிக்கடி தூங்கி பெட்ரோல் டேங்க் மேலே விழுந்து நெத்தியை இடித்துக் கொள்வார்களா. இந்த ஏர் பில்லோவை கொண்டு போய் பெட்ரோல் டேங்குக்கு மேலே இருக்கும் பவுச்சில் வைத்து விடுங்கள். குழந்தைகள் தூங்கி விழுந்தால் கூட இனி அடிபடாது.

இதே போல காலியான சின்ன சின்ன பவுச்சில் தண்ணீரை நிரப்பி மூடி போட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். சூப்பரான ஐஸ் கட்டிகள் நமக்கு கிடைத்துவிடும். ரொம்ப தூரம் காரில் டிராவல் செய்ய போறீங்க. ஜில்லுனு குடிப்பதற்காக ஜூஸ் வாட்டர் கேனில் ரெடி பண்ணி வச்சிருக்கீங்க. ஐஸ் வாட்டர் பாட்டில் எடுத்துட்டு போறீங்க. வெளியில் கொண்டு போனதும் அந்த ஜில்னஸ் குறைந்து போகும். கொஞ்சம் அகலமான டப்பாவில் பிரீசரில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த ஐஸ் பேகுகளை போட்டு, அதன் மேலே ஜூஸ் பாட்டிலை வைத்து எடுத்து சென்றால், நீண்ட நேரத்திற்கு ஜூஸ் தண்ணீர் எல்லாமே ஜில்லுனு இருக்கும்.

ட்ராவலில் மதியம் சாப்பிட தயிர் சாதம் கட்டிக்கிட்டு போறீங்க. இந்த வெயிலுக்கு தயிர் சாதம் புளிக்காமல் இருக்க, அந்த டப்பாவுக்கு மேலேயும் அடிப்பகுதியிலும் இப்படி ஒரு ஐஸ் பேக்கை வைக்கலாம். ஆபீஸ்க்கு போறவங்க ஸ்கூலுக்கு போறவங்க, காலேஜ் போறவங்களுக்கு, தயிர் சாதம் பேக் செய்தால், அந்த லஞ்ச் பேகுக்கு உள்ளே இந்த ஐஸ் கட்டி பவுச் வைத்து அனுப்பினாலும் சாதம் சீக்கிரம் புளித்து போகாது.

இதையும் படிக்கலாமே: இந்த வெயில் காலத்தில் கூட, உங்க வீட்ல மட்டும் இட்லி மாவு, தோசை மாவு 10 நாள் ஆனாலும் புளிக்காது. இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

இவை எல்லாமே சின்ன சின்ன குறிப்புகள் தான். ஆனால் அவசர தேவைக்கு பயன்படக்கூடிய பெரிய விஷயங்கள். தேவை இருப்பவர்களுக்கு தான் இந்த குறிப்பின் முக்கியத்துவம் புரியும். உங்களுக்கும் இந்த குறிப்புகள் தேவைப்பட்டால் பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -