அட, மீதமான சாதத்தில் இப்படி ஒரு குட்டி குட்டி சூப்பர் போண்டாவை எப்படி செய்வது? அதுவும் சட்டுனு 10 நிமிஷத்துல.

bonda
- Advertisement -

இந்த போண்டாவை உங்களுடைய வீட்டில் மதியம் மிஞ்சிய சாப்பாட்டை வைத்தும் செய்யலாம். இல்லை என்றால், இந்த போண்டா செய்வதற்காகவே தனியாக சாதத்தை, எடுத்தும் வைத்துக்கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். இரண்டு கைப்பிடி அளவு சாதம் மிஞ்சி விட்டதா. இனி கவலை வேண்டாம். சூப்பரான கிரிஸ்பியான இந்த போண்டாவை டீ போடும் போது சுட்டு கொடுத்திடுங்க. சாதமும் வீணாகாது. டீ டைம் ஸ்னாக்ஸ் கொடுத்த மாதிரியும் ஆச்சு. சரி, ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

mini-mysore-bonda1

மீதமான சாதம் 1/2 கப், அரிசி மாவு – 1 கப், சீரகம் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, ஆப்ப சோடா – 2 சிட்டிகை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1, கருவேப்பிலை கொத்தமல்லி தழை –  பொடியாக நறுக்கியது சிறிதளவு. இந்த போண்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் அவ்வளவுதான்.

- Advertisement -

முதலில் மீதமான சாதத்தை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

wheat-bonda-1

அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்து வைத்திருக்கும் சாதத்தின் விழுது, சீரகம், உப்பு, ஆப்ப சோடா, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இந்த மாவை போண்டா மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடங்கள் கரைத்த மாவை ஊற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

அதற்குள் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, போண்டா மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விட வேண்டும். பெரிய போடாவாக விட்டால் மொறுமொறுவென வராது. சிறிய சிறியதாக மாவை கிள்ளி கிள்ளி போண்டா விட்டு திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சூப்பரான ஸ்நாக்ஸ் போண்டா தயார்.

mini-mysore-bonda2

மீதமான இந்த சாதத்துடன் அரிசி மாவை மட்டும் தான் சேர்த்து இந்த போண்டாவை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அரிசி மாவு உங்கள் வீட்டில் இல்லை என்றால் ரவை சேர்த்தும் செய்யலாம். கோதுமை மாவு சேர்த்தும் செய்யலாம். மைதா மாவும் சேர்த்து செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

bonda

சிலருக்கு ஆப்ப சோடாவை சேர்த்து போண்டா செய்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போய்விடும் என்று நினைப்பார்கள். ஆப்பசோடா விரும்பாதவர்கள் 2 டேபிள் ஸ்பூன் அளவு தயிரை மாவில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு 1/2 மணிநேரம் மாவை புளிக்க வைத்து, அதன் பின்பு போண்டா சுட்டு எடுத்துக் கொள்ளலாம். சட்டுனு பத்தே நிமிஷத்தில் செய்யக்கூடிய இந்த மொறுமொறு போண்டாவை உங்க வீட்டில கட்டாயமா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -