மீந்து போன சாதத்தில் இப்படி சப்பாத்தி செய்து கொடுங்க, அப்புறம் பாருங்க வீட்டில் உள்ளவங்க போட்டி போட்டு சமைச்ச உங்களுக்கு இல்லாம இந்த சப்பாத்தியை காலி பண்ணிடுவாங்க.

- Advertisement -

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய கவலையே மீந்து போன சாதத்தை என்ன செய்வது என்பது தான். முன்பு எல்லாம் சாதம் மீந்து விட்டால் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் அதை பழைய சாதமாக சாப்பிடுவார்கள். அது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானதும் கூட. இப்போது அப்படியெல்லாம் கிடையாது ஒரு வேளை சாதம் செய்தால் அடுத்த நேரம் அதை யாரும் சாப்பிடுவது கிடையாது மீந்து போனால் அந்த சாதம் வீணாகி தான் போகிறது.

இப்படி மீந்து போன சாதத்தில் பலவகையான ரெசிபி செய்யலாம் என்றாலும், அதே மீந்த சாதத்தை வைத்து ரொம்பவே ஆரோக்கியமான அது நேரத்தில் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய சப்பாத்தியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவு இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

செய்முறை

இந்த சப்பாத்தி செய்வதற்கு நமக்கு ஒரு கப் மீந்த சாதம் இருந்தால் போதும். ஆனால் இதை செய்வதற்கு பயன்படுத்தும் சாதம் தண்ணீர் விட்டு இருக்கக் கூடாது சாதம் நன்றாக இருக்க வேண்டும். எனவே மதியம் சாதம் மீந்து விட்டால் உடனே அதை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடுங்கள். இரவு சப்பாத்தி செய்ய சிறிது நேரத்திற்கு முன்பு இதை வெளியில் எடுத்து வைத்து செய்தால் சரியாக இருக்கும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரின் உள்ளே சுற்றிலும் லேசாக எண்ணெய் தடவி விட்ட பிறகு ஒரு கப் மீந்த சாதம், அரை கப் கோதுமை மாவு, கால் டீஸ்பூன் உப்பு இவை மூன்றையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும். இடையிடையே மாவை நன்றாக கரண்டி வைத்து கலந்து அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சாதம் அனைத்தும் நன்றாக அரைப்பட்டு மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன், அதிலிருந்து எடுத்து விடுங்கள். ஏற்கனவே நாம் எண்ணெய் தேய்த்து இருப்பதால் ஜாரிலிருந்து எடுக்க சுலபமாகவே இருக்கும்.

அரைத்த மாவை ஒரு பவுலில் மாற்றி கைகளால் மாவை பிசைய தொடங்குங்கள். இப்போது மாவின் பதம் உங்களுக்கு நன்றாக தெரியும் மாவு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து இருந்தாலும் சாதம் சேர்த்து அரைத்ததால் கொஞ்சம் இளகி இருக்கும். இந்த சமயத்தில் கொஞ்சம் கோதுமை மாவை கலந்து மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்த பிறகு எண்ணெய் தடவி 20 நிமிடம் வரை மாவை அப்படியே ஊற விடுங்கள்.

- Advertisement -

இருபது நிமிடம் கழித்து மாவை உங்களுக்கு தேவையான அளவில் உருண்டைகளாக பிடித்து மிகவும் மெல்லியதாக இல்லாமல் ஓரளவிற்கு மீடியமாக சப்பாத்திகளை திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சப்பாத்தியை திரட்டும் போது கோதுமை மாவை பயன்படுத்தி திரட்டுங்கள் அப்போது தான் ஒட்டாமல் திரட்ட வரும்.

அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்து சூடான உடன் இந்த சப்பாத்தியை அதில் போட்டு அடிக்கடி திருப்பி போட்டு வேக விடுங்கள். ஒரு புறம் வேகம் வரை காத்திருக்கக் கூடாது திருப்பி திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். அப்போது தான் சப்பாத்தி மிகவும் சாப்டா இருக்கும். கடைசியில் எடுப்பதற்கு முன்பாக லேசாக நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் தேய்த்து சிவந்தவுடன் எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தேங்காய், தக்காளி எதுவும் சேர்க்காத ‘வெங்காய பொட்டுக்கடலை சட்னி’ எப்படி ருசியாக தயாரிப்பது?

இந்த சப்பாத்தியும் நாம் எப்போதும் செய்யும் சப்பாத்தியை விட மிகவும் சாப்ட் ஆகவே இருக்கும். மீந்த சாதத்தில் தான் இதை செய்தீர்கள் என்று நீங்கள் சொல்லாமல் யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு சப்பாத்தி மிகவும் ருசியாகவும் இருக்கும்.

- Advertisement -