காலையில் வடித்த சாதம் மீந்து விட்டதா? கவலை வேண்டாம். அதை வைத்து சுவையான எக் மசாலா ரைஸ் செய்யலாம் வாங்க.

egg-rice
- Advertisement -

வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, காலையில் வடித்த சாதம் மீந்து விட்டால் என்ன செய்வது என்பதே பெரும் யோசனையாகிவிடும். காலையில் வடித்த சாதத்தை அப்படியே கொடுத்தால் இரவு யாரும் அதை சாப்பிட மாட்டார்கள். அப்படி அந்த சாதம் வீணாகி விடுமோ என்கிற கவலை இனி வேண்டாம். காலை வடித்த சாதம் மீதம் இருந்தால் இப்படி ஒரு எக் மசாலா ரைஸ் செய்து கொடுங்கள். தினமும் பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததும் இந்த சாதம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே தான் வீட்டிற்குள் நுழைவார்கள்.

தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப், முட்டை – 2, வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், தனியா தூள் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், லவங்கம் – 2, பட்டை – 2, ஏலக்காய் – 2.

- Advertisement -

முதலில் அடுப்பில் சற்று அடி கனமான கடாய் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் சோம்பு, பட்டை, ஏலக்காய், லவங்கம் இந்த மசாலா பொருட்களை சேர்த்து பொரிந்ததும், ஒரு வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி போட்டு சிறிது கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

அதன் பிறகு தனி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, சீரகப்பொடி இவைகளை சேர்ந்து எண்ணெயில் நன்றாக வதக்கி கொள்ளுங்கள். பிறகு இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி நன்றாக குழைய வேக விடுங்கள். இது ஒரு புறம் வேகட்டும்.

- Advertisement -

இன்னொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி இரண்டு முட்டையை அதில் உடைத்து ஊற்றிய பிறகு சிறிதளவு உப்பு, மிளகு தூள் போட்டு (முட்டைக்கு மட்டும்) சிறிது நேரம் அப்படியே விடுங்கள், முட்டை கொஞ்சம் வெந்தவுடன் கிளறி விடுங்கள். (கொஞ்சம் பெரிய பெரிய பீசாக இருக்கட்டும். (மிகவும் பொடியாக வேண்டாம்). அதன் பிறகு முட்டையை வெந்து கொண்டு இருக்கும் மசாலாவில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து, சாதத்தையும் கொட்டி நன்றாக கிளறி விடுங்கள். அட்டகாசமான எக் மசாலா ரைஸ் ரெடி.

இதை சுட சுட அப்படியே குழந்தைகளுக்கு கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இரவு வடித்த சாதம் மிச்சம் இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் காலை கூட இப்படி முட்டை சாதமாக கிளறி சாப்பிடலாம். சுவையாக தான் இருக்கும்.

- Advertisement -