மீதமான இட்லியை வைத்து வெறும் 10 நிமிடத்தில் முறுக்கு சுடுவது எப்படி? தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா?

murukku
- Advertisement -

மீதமான இட்லியை வைத்து விதவிதமாக நிறைய பலகாரங்கள் செய்யலாம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில், வித்தியாசமான சுவையில் சூப்பரான முறுக்கு சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி முறுக்கு சுட்டு கொடுத்தால் இந்த முறுக்கை எதை வைத்து சுட்டு எடுத்தீங்க என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 10 நிமிடத்தில் மீதமான இட்லி, முறுக்காக மாறிவிடும். நேரத்தைக் கடத்தாமல் இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

மீதமான பெரிய 5 இட்லிக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியானதாக இருக்கும். காலையில் சுட்ட இட்லி மீதம் ஆகிவிட்டால் மாலை நேரத்தில் இந்த ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீதமான இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் மைய அரைத்து இந்த விழுதை தனியாக ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அறைபட்ட இந்த இட்லியுடன் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், எள்ளு – 1 ஸ்பூன், ஓமம் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு – உப்பு, அரிசி மாவு – 1/4 கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப் எண்ணெய் 2 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக பிசைய வேண்டும். பிசையும் போது தண்ணீர் ஊற்ற வேண்டாம். நன்றாக பிசைந்து விட்டு தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு இந்த மாவை பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஸ்டார் அச்சை எடுத்து முறுக்கு குழாயில் போட்டுக்கொள்ள வேண்டும். முறுக்கு குழாய்க்குள் நன்றாக எண்ணெய்யை தடவி விட்டு தயார் செய்திருக்கும் இந்த மாவிலிருந்து சிறிய பாகங்களாக உருட்டி முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து ஒரு தட்டில் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எல்லாம் முறுக்கையும் பிழிந்து தயார் செய்து வைத்துக்கொண்டு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான மொறுமொறு முறுக்கு தயார்.

- Advertisement -

ஸ்டார் அச்சில் தான் இந்த முறுக்கை போட்டு புழிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேன்குழல் முறுக்கு தேவை என்றாலும் அந்த அச்சைபோட்டு முறுக்கு பிழிந்து, முறுக்கு சுட்டு எடுத்துக்கொள்ளலாம். ஈவினிங் குழந்தைகள் பள்ளியிலிருந்து வருவதற்குள் இந்த முறுக்கை சட்டென சுட்டு முடித்து விடலாம்.

கடையில் இருந்து வாங்கக்கூடிய பச்சரிசி மாவு கொழுக்கட்டை மாவு எதை வேண்டுமென்றாலும் இந்த முறுக்கு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். பொட்டுக்கடலையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து சலித்து, அந்தப் பொட்டு கடலை மாவை முறுக்கு செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -