பழைய சாதத்தோடு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அரைத்து தலைக்கு போட்டால், உங்கள் முடி புதுப்பொலிவோடு வளர தொடங்கிவிடும். புதிய முடி வளர்ச்சியை பார்த்து நீங்களே அசந்து போவீங்க.

hair18
- Advertisement -

அட முடி கொட்டுவது என்பது இயற்கை தாங்க. அதை பார்த்து நாம் எதற்காக கவலைப்பட வேண்டும். அதேபோல முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் மீண்டும் மீண்டும் வளரவதும் இயற்கை தான். ஆனால் சில பேருக்கு இந்த புதிய முடி வளர்ச்சியில் கொஞ்சம் தாமதம் இருக்கும். புதியதாக முடி வளரக்கூடிய இடங்களில் வேர் கால்கள் மூடப்பட்டிருக்கும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரவில்லை என்றால்தான் நம்முடைய முடி மெலிந்து போய், வழுக்கை விழ தொடங்கும். இந்த பிரச்சனையை சரி செய்ய பழைய சோறை வைத்து ஒரு ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த ஹேர் பேக்கை போட்டால் சீக்கிரம் புதிய முடி வளர்ச்சி இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அழகு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

புதிய முடிகளை வளரச் செய்யும் பழைய சோறு ஹேர் பேக்:
இந்த பேக்கோட ஹீரோ பழைய சாதம் அல்லவா. அதனால் பழைய சாதத்தை நீங்கள் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலை அது பழைய சாதம். இது எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் பதிவு செய்து கொள்வோம்‌.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் பழைய சாதத்தை தண்ணீரோடு இதில் ஊற்றிக் கொள்ளவும். செம்பருத்தி பூ, இலை இரண்டும் கிடைத்தால் அதிலிருந்து ஐந்து ஐந்து எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். முட்டை 1, தயிர் 2 டேபிள் ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து, முடிந்தால் ஒரு வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய இந்த பேக்கோடு விளக்கெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அல்லது நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவுதான். இப்போது நமக்கு சூப்பரான ஒரு ஹேர் பேக் கிடைத்திருக்கும்.

முந்தைய நாள் இரவே முடியில் எண்ணெய் வைத்து ஊற வைத்து விடுங்கள். ஹேர் பேக் போடுவதற்கு முன்பு தலையில் இருக்கும் சிக்கை எல்லாம் நீக்கிவிட்டு இந்த ஹேர் பேக்கை ஸ்கேல்பில் படும்படி முதலில் நன்றாக போட வேண்டும். முடியை பாகமாகப் பிரித்து வேர் கால்களில் இந்த ஹேர் பேக் படும் படி கவனத்தோடு போடுங்கள். அப்போதுதான் தடைப்பட்டு இருக்கும் முடி வளர்ச்சி சரியாகும். பிறகு முடியின் நுனி வரை இந்த ஹேர் பேக்கை போட்டு கொண்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

30 நிமிடங்கள் கழித்து மயில்டான ஷாம்பு போட்டு உங்களுடைய தலையை அலசிக் கொள்ளவும். அவ்வளவுதான் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த பேக்கை போட்டு வர முடியின் போஷாக்கு அதிகரிக்கும். தலைமுடி உதிர்வு குறையும். டிரையாக இருக்கக்கூடிய உங்களுடைய முடி சில்கியாக மாறும். புதிய முடி வளர்ச்சி தூண்டப்படும். இயற்கையான முறையில் இப்படிப்பட்ட ஹர்பைக்குகள் உங்களுடைய தலைமுடியை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: டக்குனு ஒரே வாஷில் உங்களுடைய முடி அடர்த்தியா தெரியனும்னு ஆசைப்படுறீங்களா? ஒருமுறை இந்த ஹேர் பேக்கை போட்டு தான் பாருங்களேன்.

சில பேருக்கு முட்டையின் மஞ்சள் கரு வாடை பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் வெள்ளை கருவை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். செம்பருத்தி பூ, இலை, எதுவுமே கிடைக்கவில்லை என்றால் இதையெல்லாம் பொடியாக வாங்கி வைத்துக் கொண்டும் ஹர்பக்கோடு சேர்த்து நாம் பயன்படுத்தலாம். உங்களுடைய முடியின் அளவை பொறுத்து மேல் சொன்ன பொருட்களை கூடவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம் அதிலும் தவறு கிடையாது. அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -