டக்குனு ஒரே வாஷில் உங்களுடைய முடி அடர்த்தியா தெரியனும்னு ஆசைப்படுறீங்களா? ஒருமுறை இந்த ஹேர் பேக்கை போட்டு தான் பாருங்களேன்.

hair17
- Advertisement -

சில பேருடைய முடி ரொம்பவும் மெலிசாக காணப்படும். எங்கையாவது ஃபங்ஷனுக்கு போவதாக இருந்தால் கூட, அவர்களால் ஹேர் ஸ்டைலை செட் செய்ய முடியாது. வழுக்கை தெரியும். இப்படிப்பட்டவர்கள் ஒரே வாஷில் தலைமுடியை அடர்த்தியாக, பவுசியாக, சில்கியாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த ஹேர் பேக்கை ஒரு முறை போட்டு தலையை அலசி விட்டால் போதும். தலை முடி அடர்த்தியானது போல ஒரு உணர்வு நமக்கு வரும். பார்ப்பதற்கும் முடி நிஜமாகவே அடர்த்தியாக இருப்பது போல தோன்றும்.

அப்படி ஒரு ஹேர் பேக் இருக்குதா என்று நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். இந்த அழகு குறிப்பு படித்துப் பார்த்து எளிமையான முறையில் இதை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே உங்களுடைய தலைமுடியில் என்ன வித்தியாசம் தெரியுது என்று கண்ணாடியில் பார்க்கலாம்.

- Advertisement -

முடியை உடனடியாக அடர்த்தியாக மாற்றப் போகும் ஹேர் பேக்:
முதலில் இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு பழுத்த வாழைப்பழம் தேவை. தோல் கருப்பான எந்த வாழைப்பழமாக இருந்தாலும் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். 2 மீடியம் சைஸில் இருக்கும் வாழைப்பழங்கள் தேவை. அதைத் தோலுரித்து துண்டு துண்டுகளாக வெட்டி மிக்சி ஜாரில் போடவும். இதோடு கற்றாழை கால் ஜெல் – 1/4 கப், செம்பருத்தி பூ – 10, முட்டை – 1, இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்த விழுதை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதோடு விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளவும். சூப்பரான ஒரு ஹேர் பேக் தயார். இந்த ஹேர் பேக்கை வடிகட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படியே தலையில் அப்ளை செய்யலாம்.

- Advertisement -

வழக்கம் போல ஹேர் பேக் போடுவதற்கு முன்பு தலையில் எண்ணெய் கொஞ்சம் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும். பிறகு இந்த ஹேர் பேக்கை லேசாக மசாஜ் செய்தபடி தடவி விடுங்கள். பிறகு முடியின் நுணி வரை பொறுமையாக இந்த ஹேர் பேக்கை தடவி கொண்டை கட்டிக் கொள்ளவும். 20 லிருந்து 30 நிமிடங்கள் வரை ஹேர் பேக் தலையில் வைக்கவும். பிறகு ஜென்டில் ஆன ஷாம்பு போட்டு வாஷ் செய்து முடியை காய வைத்து, காய்ந்த முடியில் சிக்கு எடுத்து சீவிப் பார்த்தால் முடி உதிர்வும் குறைந்து இருக்கும். அதே சமயம் உங்களுடைய முடி அடர்த்தியானது போல தெரியும்.

இதையும் படிக்கலாமே: ஒத்தையா இருக்கிற முடியை கத்தையா வளர வைக்கும், கருப்பு கொண்டை கடலை! ஊட்டச்சத்து இல்லாமல் உதிரும் முடியை கூட, உதிராமல் பாதுகாக்கும் ஹார்பேக்.

ஆனால் உண்மையிலேயே உங்க முடி அடர்த்தியாகது. அடுத்த நாள் மீண்டும் மெலிந்து தான் போகும். தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி வர புதிய முடிகள் வளர்ந்து நிஜமாகவே உங்களுடைய முடி சீக்கிரம் அடர்த்தியாக தொடங்கும். எங்கேயாவது ஃபங்ஷனுக்கு போவதாக இருந்தால் உடனடியாக இந்த ரெமடி உங்களுக்கு கை கொடுக்கும். தவிர நிரந்தரமாக உங்கள் முடியை அடர்த்தியாக மாற்ற வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வந்தால் நல்ல பலன் பெறலாம். அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி கொள்ளவும்.

- Advertisement -