மீந்து போன சாதத்தை வைத்து 10 நிமிடத்தில் சூப்பராக க்ரிஸ்பியான மொறுமொறு பக்கோடா இப்படியும் செய்யலாமே

leftover-rice-pakkoda_tamil
- Advertisement -

ரைஸ் பக்கோடா | Rice pakoda recipe in Tamil

விதவிதமான பக்கோடா வகைகள் நாம் சாப்பிட்டு ருசித்து இருப்போம் ஆனால் மீந்து போன சாதம் வைத்து செய்யக்கூடிய இந்த பக்கோடா ரொம்பவே கிரிஸ்பியாக மொறு மொறுவென்று டேஸ்ட்டியாக இருக்கும். சாதாரணமாக பக்கோடா செய்வது போலவே தான் செய்யப் போகிறோம் ஆனால் இதன் சுவை மாறுபட்டதாக இருக்கும். உள்ளே மெதுவாகவும் வெளியில் மொறுவென்றும் இருக்கக் கூடிய இந்த சாத பக்கோடா ரெசிபி எப்படி செய்யலாம்? என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

வேகவைத்த சாதம் – ஒரு கப், பெரிய வெங்காயம் – இரண்டு, பூண்டு – ஆறு பற்கள், துருவிய இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடலை மாவு – நாலு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – அரை கைப்பிடி, உப்பு – தேவையான அளவிற்கு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு பெரிய கப் அளவிற்கு வடித்த சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கைகளால் நன்கு மாவு போல பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் பொடி பொடியாக நறுக்கி சேர்த்த பெரிய வெங்காயம், தோலுடன் இடித்து சேர்த்த பூண்டு பற்கள் கொஞ்சம் கறிவேப்பிலை இலைகள் பொடியாக நறுக்கிய மல்லி தழைகளை தூவி விடுங்கள்.

பிறகு துருவிய இஞ்சி, பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய எல்லா பொருட்களும் எவ்வளவு குட்டி குட்டியாக நறுக்க முடியுமோ அவ்வளவு குட்டி குட்டியாக நறுக்கி சேர்த்தால் சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும். இதனுடன் கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மிளகாய் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை இப்பொழுது சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கைகளால் எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடுங்கள். இதில் தண்ணீர் எதுவும் நீங்கள் சேர்க்க வேண்டாம். சாதம் மற்றும் வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது. கைகளில் எடுத்து உருண்டையாக உருட்டி பார்த்தால் கெட்டியாக இருக்க வேண்டும். இப்போது ரெண்டு பங்கு கடலை மாவிற்கு, ஒரு பங்கு அரிசி மாவு வீதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்கு ஒன்று போல் கலந்து பகோடா மாவு பதத்திற்கு கொண்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
பொங்கல் ஸ்பெஷல் காய் குழம்பை, நாட்டு காய்கறிகளை வைத்து அசல் கிராமத்து சுவையில் ரொம்ப சுலபமா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாமா? பொங்கலுக்கு நீங்களும் இந்த குழம்பை உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். பக்கோடா செய்வதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். கொதிக்கும் எண்ணெயில் நீங்கள் இந்த மாவில் இருந்து சிறு சிறு துண்டுகளாக எல்லா இடங்களிலும் ஒவ்வொன்றாக போட்டு வாருங்கள். ஏற்கனவே வெந்து போன சாதம் என்பதால் அதிகம் வேக வேண்டிய அவசியம் இல்லை. மூன்றில் இருந்து நான்கு நிமிடத்திற்குள் பக்கோடா பொரிந்து மேலே எழும்பி வரும். இந்த சமயத்தில் நீங்கள் எடுத்து விடலாம். அவ்வளவுதான் ரொம்பவே சுவையாக இருக்கக்கூடிய இந்த மொறுமொறு சாத பக்கோடா ரெசிபி நீங்களும் இதே போல செஞ்சு பாருங்க உங்களுக்கும் ரொம்பவே பிடித்து போய்விடும்.

- Advertisement -