மீதமான சாப்பாட்டை வைத்து இப்படி ஒரு வடையா? நம்பவே மாட்டீங்க! உளுந்த வடையை மிஞ்சும் சுவையில், 10 நிமிடத்தில் சாதத்தில் மெதுவடை.

மீதமான சாப்பாட்டை வைத்து பலவகையில், பலவிதமான பலகாரங்களை செய்யலாம். அதில் மிகவும் வித்தியாசமான ஒரு வடை ரெசிபி தான், இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மீதமான சாப்பாட்டை அப்படியே வீணாக்காமல் வடாம் வைத்த காலம் போய், இட்லி தோசை வடை என்று விதவிதமாக செய்யும் காலம் வந்துவிட்டது. இந்த வடையை உளுந்தம் பருப்பை அரைத்து செய்கிறீர்களா, மீதமான சாப்பாட்டை வைத்து செய்தீர்களா என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு சுவை. இருக்கும் சூப்பர் வடையை எப்படி செய்வது இப்பவே பார்க்கலாமா?

rice

Step 1:
முதலில் 1 சிறிய கப் அளவு சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சாதம் கண்ணுக்கே தெரியக்கூடாது. கொழகொழவென்று அரைச்சு வச்சுக்கோங்க. ரொம்ப தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Step 2:
மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சாதத்தை ஒரு அகலமான கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். கையில் கொஞ்சம் பிசுபிசுவென்று தான் ஒட்ட செய்யும். பரவாயில்லை. இந்த அரைத்த சாதத்தோடு பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை கொத்தமல்லி – தழை பொடியாக நறுக்கியது, இஞ்சி சிறிய துண்டு பொடியாக நறுக்கியது, மிளகு சீரகம் சேர்த்து – 1/2 ஸ்பூன் அளவு போட்டுக் கொள்ளுங்கள். இறுதியாக தேவையான அளவு உப்பு.

இப்போது இந்தக் கலவையை உங்கள் கைகளால் நன்றாக பிசைந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அரிசிமாவு சேர்த்து இந்த விழுதை, வடை மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த மாவை ரொம்ப கெட்டியாகவும் பிரிந்து விடக்கூடாது. ரொம்ப பிஸி பிஸின்னும் பிசையக்கூடாது.

- Advertisement -

உளுந்து மாவு ஆடினால், எப்படி ஆடுவோமோ அந்த அளவிற்கு அரிசி மாவு சேர்த்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இந்த வடைக்கு வெங்காயத்திற்கு பதிலாக பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து சுட முடியும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு காயும் குழந்தைகள் சாப்பிட்ட கணக்கில் வந்துவிடும்.

methu-vadai1

Step 3:
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைத்த பின்பு, உளுந்து வடை போடுவது போலவே நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மாவையும் உருண்டை பிடித்து, தட்டி ஓட்டை போட்டு எண்ணெயில் விட்டு, மிதமான தீயில் சிவக்க வைத்து எடுத்தால் மொறு மொறு மெதுவடை தயார் ஆகி இருக்கும். எண்ணெய் கூட நிறைய உறிஞ்சாது. உங்க வீட்டில சாதம் மிஞ்சிப்போனால் ஒருநாள் ட்ரை பண்ணி பாருங்க. ஈவ்னிங் டீ குடிக்கும்போது இந்த ரெசிப்பி சூப்பரா செட் ஆகும்.

இதையும் படிக்கலாமே
இதுவரை யாருக்கும் தெரிந்திராத சில சமையல் ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.