எலுமிச்சை பழம் வாங்கியது முதல் காய்ந்து போன எலுமிச்சை பழம் வரை நீண்ட நாட்களுக்கு எப்படி உபயோகப்படுத்துவது? இத தெரிஞ்சிக்காம போனா வருத்தப்படுவீங்க.

lemon-dry
- Advertisement -

எலுமிச்சை பழத்தை சில சமயங்களில் நிறைய வாங்கி வந்து விடுவது உண்டு. அப்படி வாங்கி வரும் எலுமிச்சை பழங்கள் வீணாக அழுகி போவதையும் நாம் பார்த்திருப்போம். எலுமிச்சை பழத்தை முறையாக நாம் பராமரிக்காவிட்டால் இரண்டே நாட்களில் வீணாக அழுகிப் போய் நாற்றமடிக்க துவங்கிவிடும். எலுமிச்சை பழம் பூஜைகளுக்கும், சமையலுக்கும் நிறையவே பயன்பட இருப்பதால் அதனை நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்தும் முறையையும் நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். எலுமிச்சை பழத்தை கடையில் காசு கொடுத்து வாங்கி வந்தது முதல் காய்ந்து போன எலுமிச்சையை என்ன செய்வது? என்பது வரை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

elumichai-palam

முதலில் எலுமிச்சையை கடைகளிலிருந்து வாங்கி வந்ததும் அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து காய வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சிலர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் எலுமிச்சை தேவ கனியாக கருதப்படுவதால் எலுமிச்சையை வீட்டிற்கு பின்புறம் வைத்து வளர்ப்பதால் நிறையவே நன்மைகளை பெறலாம். எனவே தயங்காமல் எலுமிச்சை மரத்தை வளர்த்து இயற்கையாகவே அதனை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

காய வைத்த எலுமிச்சையை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அதில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஊற்றி எல்லா இடங்களிலும் படுமாறு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மேல் டிஷ்யூ பேப்பர் கொண்டு மூடி வைத்து விடுங்கள். 10, 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இந்த எலுமிச்சை பழங்கள் இருக்கும். தேவைப்படும் போது வெளியில் எடுத்து எண்ணெயை நன்கு துடைத்து விட்டு பயன்படுத்த வேண்டியது தான்.

elumichai lemon

இப்படி வைக்கும் எலுமிச்சை பழங்களில் சில பழங்கள் அடிபட்டது போல ஆங்காங்கே சில நாட்களுக்குப் பிறகு தெரிந்தால் அந்த அடிபட்ட இடத்தை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். பிழிந்து வைத்துள்ள சாற்றை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். ஃப்ரீஸ் செய்த எலுமிச்சை க்யூப்களை கொண்டு எலுமிச்சை சாதம் செய்வது, எலுமிச்சை ஜூஸ் போடுவது போன்றவற்றை எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் பொழுது செய்து கொள்ளலாம்.

- Advertisement -

வெளியில் நன்கு காய்ந்து போய் உள்ளே நன்கு பழுத்த பழங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக அந்த பழங்களை நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை வைத்து பாத்ரூம் டைல்ஸ், கதவுகளில் இருக்கும் அழுக்குகள், கிச்சன் மேடை, சமையல் செய்யும் அடுப்பு மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை துடைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

காயாக இருக்கும் எலுமிச்சை பழத்தை சட்டென நம்மால் பிழிந்து விட முடியாது. அந்த சமயத்தில் எலுமிச்சை பழத்தில் ஒரு கத்தியை சொருகி அடுப்பின் நெருப்பில் காண்பித்து பின்னர் ஆற வைத்து தரையில் வைத்து அழுத்தம் கொடுத்து தேய்த்து பின்னர் கைகளில் பிழிந்து எடுத்தால் அவ்வளவு சாறும் சுலபமாக வந்துவிடும். எனவே எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் வீணாக்காமல் நிறைய வாங்கி வந்தால் இது போல் செய்து அனைவரும் பயன் பெறலாமே.

- Advertisement -