எதிர்ப்புகள் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்க எலுமிச்சை வழிபாடு செய்வது எப்படி?

lemon-kaali
- Advertisement -

இன்று பலருக்கும் வாழ்வில் இருக்கும் பிரச்சனை எதிரிகள் தொல்லையாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்தில் எதிரிகளின் தொல்லை தடைக் கற்களாக அமைந்து விடலாம். இன்று எவ்வளவு நெருங்கியவர்களாக இருந்தாலும் நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமை படுபவர்கள் தான் நம்மைச் சுற்றி அதிகம் இருக்கிறார்கள். ஒரு சின்ன பொருள் புதிதாக வாங்கினாலும் உடனே மற்றவர்களின் பார்வை நம்மீது வேறு மாதிரியாக இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நம்முடைய வளர்ச்சியை கண்டு மட்டும் அவர்கள் நெகிழ்ந்து விடுவார்களா? நிச்சயம் மாட்டார்கள் என்பது தான் உண்மை. இத்தகைய எதிரிகள் தொல்லை நீங்க எலுமிச்சை வழிபாடு செய்தால் அற்புதமான பலன் கிடைக்கும். அதை எப்படி செய்வது? எந்த தெய்வத்திற்கு செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

sad-man

புதிதாக ஒரு முயற்சியை நாம் கையில் எடுத்தால் அதற்குரிய எதிர்ப்புகள் பயங்கரமாக கிளம்பிவிடும். இதெல்லாம் தப்பு! அதெல்லாம் தப்பு! இதையெல்லாம் செய்யக்கூடாது! நீ என்ன இப்படி பண்ற? அப்படி பண்றேன்னு? நாலுபேரு நாலுவிதமா கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நம்முடைய கஷ்டத்தில் ஒருவரும் வந்து நிற்கப் போவது இல்லை. ஐயோ பாவம் என்று கூட யாரும் பார்க்க போவதில்லை.

- Advertisement -

அப்படி இருக்கும் பொழுது அத்தகைய எதிர்ப்புகளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பது முட்டாள் தனம் தான். எதிர்ப்புகளை தகர்த்தெறிய தன்னம்பிக்கை அவசியம். நீங்கள் செய்யும் முயற்சி உங்களுக்கு மன தைரியத்தை ஏற்படுகிறதா? என்பதை கவனியுங்கள். உங்கள் வளர்ச்சியை தடை செய்யக்கூடிய தடை கற்களை அம்மன் வழிபாடு செய்து தகர்த்தெரிவது நல்லது.

kaali

எந்த ஒரு விஷயத்திலும் நல்லது, கெட்டது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்யும். அதிலிருக்கும் கெட்டதை சொல்ல ஆயிரம் பேர் இருந்தால்! அதிலிருக்கும் நல்லதை சொல்ல லட்சம் பேர் இருப்பார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய அந்த லட்சம் பேரை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆயிரம் பேரைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டு உங்களின் உற்சாகத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள்.

- Advertisement -

இது போன்ற எதிர்ப்புகளை சமாளிக்க உக்கிர தெய்வங்கள் நமக்கு துணை புரிகின்றன. உக்ர தெய்வங்களாக இருப்பது காளி அம்மன், வனதுர்கை, பத்ரகாளி போன்ற தெய்வங்களை வக்ர தெய்வங்களாக ஆகம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இது போன்ற உக்ர தெய்வங்களுக்கு அமாவாசை, பவுர்ணமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் எலுமிச்சை மாலை சாற்றி சன்னிதியை சுற்றி வலம் வந்து எலுமிச்சை வழிபாடு செய்வது எதிரிகளையும் தன் வசமாக்கும் அற்புதத்தை நிகழ்த்தும்.

temple-lemon

உங்கள் சக்திக்கு ஏற்ப ஒற்றைப்படையில் எலுமிச்சை மாலைகளை உங்கள் கைகளால் கோர்த்து அம்மனுக்கு சாற்றுங்கள். பின்னர் ஒரே ஒரு எலுமிச்சையை கையில் வைத்துக் கொண்டு சன்னிதியை வலம் வாருங்கள். வந்து அங்கிருக்கும் சூலத்தில் அந்த எலுமிச்சையை குத்தி வையுங்கள். பின்னர் உங்கள் வளர்ச்சிக்காகவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் அம்மனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ? அப்போதெல்லாம் இது போல் செய்தால் போதும். அத்தனை எதிர்ப்புகளும், எதிரிகள் தொல்லைகளும் இன்றி தன்னம்பிக்கையுடன் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வீர்கள். அதற்காக கஷ்டப்பட்டு எந்த பரிகாரத்தையும் செய்யத் தேவையில்லை. எலுமிச்சை வழிபாடு ஒன்றே அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை உண்மையில் முறையாக இப்படித்தான் கடைபிடிக்க வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -