உங்கள் வீட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணம் என்ன, என்பதை கண்டுபிடிக்க 1 எலுமிச்சை பழம் போதும்!

சில பேர் வீடுகளில் காரணமே தெரியாமல் பிரச்சினைகள் தலைவிரித்தாடும். குறிப்பாக எந்த ஒரு முயற்சியை எடுதாலும் அது தோல்வியில் போய் முடியும். வீட்டிலிருந்த நிம்மதி நிலைகுலைந்து போகும். இதற்கெல்லாம் என்னதான் காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் தோன்றுவது இயற்கைதான். வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.

elumichai lemon

வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் ஆதிக்கம் ஏதேனும் இருக்கின்றதா, இல்லை உங்களுக்கு வேண்டாத யாராவது ஒருவர் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து உங்கள் குடும்பம் நன்றாக இருக்க கூடாது என்று வேண்டிக் கொண்டு, அந்த எலுமிச்சைப் பழத்தை நசுக்கி போட்டால் கூட, போதும்! முடிந்தது. உங்கள் குடும்பத்திற்கு பிரச்சனை வந்துவிடும். ஏனென்றால், எலுமிச்சம்பழத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

ஆனால், அதே எலுமிச்சை பழத்தை வைத்து, நம் வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா? வேறு ஏதேனும் கண்ணுக்குத்தெரியாத ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளில் ஆதிக்கம் வீட்டில் இருக்கின்றதா? என்பதை கண்டுபிடித்துவிட முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

lemon

காயாக பச்சை நிறத்தில் இருக்கும் எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும். அதை மஞ்சள் துணியில் வைத்து, அந்த எலுமிச்சை பழத்தோடு, ஒரு விரலி மஞ்சள், ஒரு மூங்கில் குச்சி மட்டும் வைத்து, மஞ்சள் நூலில் முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு வாசல்படியில் மாட்டி விடுங்கள். 11 நாட்கள் வரை அது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

பதினோரு நாட்கள் கழித்த பின்பு, அந்த முடிச்சை அவிழ்த்து பார்த்தால், உள்ளே வைத்த எலுமிச்சை பழமானது வாடாமல், வதங்காமல் அப்படியே இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டிற்கு கண்ணு தெரியாத கெட்ட சக்திகளின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அர்த்தம்.

lemon1

அதுவே, அந்த எலுமிச்சை பழம் காய்ந்த நிலையிலோ அல்லது கருப்பு நிறத்தில் மாறி இருந்தாலோ, உங்கள் வீட்டில் கட்டாயம் ஏதோ ஒரு கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்? வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று விரதமிருந்து, துர்க்கை அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, எலுமிச்சை பழத்தையும், வேப்பிலையையும் சேர்த்து மாலையாக அணிவித்து, தொடர்ந்து ஐந்து வாரங்கள் வழிபட வேண்டும்.

புதியதாக வாங்கிய எலுமிச்சை பழத்தை, துர்கை அம்மன் மடியில் வைத்து எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, தொடர்ந்து பூஜை செய்து வந்தால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியின் ஆதிக்கம் உங்களை எதுவும் செய்யாது. (5 வாரமும் துர்க்கை அம்மன் மடியிலிருந்து எடுத்து வந்து, உங்கள் வீட்டில் வைத்த, அந்த எலுமிச்சை பழத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பழைய எலுமிச்சை பழத்தை கால் படாத இடங்களிலோ, ஓடும் தண்ணீரிலோ தூக்கி போட்டு விட வேண்டும்.)

durga

இப்படி செய்து வரும் பட்சத்தில், கெட்ட சக்தியானது, உங்கள் வீட்டை விட்டு, விரைவாக வெளியே சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் தீய சக்திகளின் ஆதிக்கம் இருப்பதாக சந்தேகம் இருந்தால், ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கான மரியாதை கிடைக்கவில்லையா? இதனால் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டதா? அப்ப இத நெத்தியில வச்சுட்டு போங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to remove drishti with lemon. Lemon payangal Tamil. Lemon pariharam. Lemon pariharam in Tamil. How to remove drishti in Tamil.