- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட, லெமன் சாதம் இப்படிக்கூட செய்யலாமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே!

அட, லெமன் சாதம் இப்படிக்கூட செய்யலாமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே!

- Advertisement -

ஒரே மாதிரி லெமன் சாதம் சாப்பிட்டு போரடிக்குது. இந்த லெமன் சாதத்தை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஸ்பெஷல் எலுமிச்சை பழ சாதத்தை எப்படி செய்வது. நேரடியாக குறிப்புக்கு செல்லலாமா. 4 பேர் அளவு சாப்பிடக்கூடிய சாப்பாட்டை குழையாமல் உப்பு போட்டு வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். லெமன் சாதம் செய்ய வடித்து வைத்திருக்கும் சாதம் சூடாக இருக்கக் கூடாது. ஆறிய இந்த சாதம் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக பச்சை மிளகாய் – 3, தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு தோல் உரித்தது – 5 பல், இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

மீடியம் சைஸ் 2 எலுமிச்சம் பழங்களை சாறு பிழிந்து, அதில் இருக்கும் விதைகளை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழச்சாறும் அப்படியே இருக்கட்டும்.

இப்போது எலுமிச்சை பழ சாதத்தை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், முந்திரிபருப்பு – 10 சேர்த்து, இந்த பருப்பு வகைகளை நன்றாக பொன் நிறம் வரும் வரை சிவக்க வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக கறிவேப்பிலை 1 கொத்து சேர்த்து, 1/2 – ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து உடனடியாக, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை கடாயில் கொட்டவிட வேண்டும்.

- Advertisement -

இந்த விழுதானது எண்ணெயில் சிடசிடப்பு அடங்கும் வரை வதக்க வேண்டும். விழுதில் இருக்கும் ஈரப்பதம் எண்ணெயில் சுத்தமாக தெரியவே கூடாது. அந்த அளவிற்கு பச்சைமிளகாய் விழுதை எண்ணெயில் வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும். கடாய் சூட்டிலேயே பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும். (சாதத்தில் உப்பு போட்டு வடித்து இருக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.)

lemon-rice1

அடுத்தபடியாக வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை, இந்த கடாயில் எலுமிச்சை தாளிப்புடன் போட்டு அப்படியே கிளறி, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாறினால் சூப்பரான எலுமிச்சை பழ சாதம் தயார். இதை லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்துப் பாருங்கள். சுவை சூப்பராக இருக்கும். பச்சை மிளகாய் இஞ்சியை எடுத்துப் போடக் கூடிய கஷ்டம் கூட இருக்காது. அதேசமயம் இதனுடைய சுவை சாதாரணமாக செய்யும் எலுமிச்சை சாதத்தை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்