வீட்டில் எலுமிச்சை வைத்தால் அழுகி போகிறதா? அல்லது காய்ந்து போகிறதா? எது நன்மையை தரும் தெரியுமா?

lemon-temple
- Advertisement -

தேவ கனி என்று அழைக்கப்படும் இந்த எலுமிச்சை கனி நல்ல விஷயங்களுக்கு நிறையவே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சுப காரியங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் இந்த எலுமிச்சை ஆன்மீக ரீதியாக பல்வேறு சக்திகளை தன்னுள் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. எலுமிச்சை கனி நல்லது மட்டும் அல்ல, கெட்டதும் செய்யக்கூடியது ஆகும். எனவே எலுமிச்சையில் எப்படி நாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளுக்கு கூட எலுமிச்சை கனியை பயன்படுத்துகிறார்கள். கெட்ட விஷயங்களையும் கிரகித்துக் கொள்ளக்கூடிய இந்த எலுமிச்சைக் கனியிடம் இருந்து சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். தேவ கனி என்று எலுமிச்சையை குறிப்பிட்டாலும், அது அசுர கனியாகவும் சில சமயங்களில் செயல்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

- Advertisement -

அதனால் தான் எலுமிச்சையை தலையை சுற்றி திருஷ்டி கழிக்கிறார்கள். இதனால் நம்மை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் அதனுள் சென்று நமக்கு வர இருக்கும் ஆபத்தை அது எடுத்துக் கொள்கிறது. வீட்டில் துர் சம்பவங்கள் அல்லது ஒரு விதமான கெட்ட உணர்வு மனதில் இருந்தால் உடனே ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி தலைவாசலுக்கு இரண்டு புறங்களிலும் வைத்து விடுங்கள். அது எந்த அளவிற்கு காய்ந்து போகிறதோ, அந்த அளவிற்கு உங்களுக்கு மிகுந்த நன்மைகள் கொடுக்கும்.

எலுமிச்சை கனியை கோவிலில் இருந்து வாங்கி வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த எலுமிச்சை பழம் எவ்வளவு சீக்கிரம் அழுகி போகிறதோ, அந்த அளவிற்கு உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளும் அழுகி போகும் என்கிற ஐதீகம் உண்டு. கோவிலில் இருந்து வாங்கி வரும் எலுமிச்சை பழம் அழுகினால் வீட்டில் இருக்கும் கெட்டது உங்களை விட்டு விலகி விட்டது என்று அர்த்தம், இதனால் பயம் கொள்ள வேண்டிய அவசியம்.

- Advertisement -

அதுவே எலுமிச்சை கனி காய்ந்து போகிறது என்றால் வீட்டில் எந்த விதமான அதீத சக்தி படைத்துள்ள கெட்ட சக்திகளும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். தரித்திரங்கள், பீடைகள் ஒழிந்து குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க எலுமிச்சை பழம் காய்ந்து போக வேண்டும். எனவே எழுமிச்சை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் இது போல பூஜைகளுக்கு அதிகம் பயன்படுத்துங்கள். இதனால் வீட்டில் இருக்கக் கூடிய கெட்ட அதிர்வலைகள் நீங்கி, உங்களை அது பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.

திருஷ்டி சுற்றி கழித்து போட்டிருக்கும் எலுமிச்சை பழத்தை கால்களால் மிதிக்க கூடாது எனவே தெருவில் நடக்கும் பொழுது கவனமாக பார்த்து நடக்க வேண்டும். திருஷ்டி சுற்றி போடுபவர்கள் அதை நடுரோட்டில் போடாமல் சற்று ஓரமாக போடுவது அடுத்தவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும். கோவிலில் இருந்து எலுமிச்சை பழத்தை வாங்கி வரலாம் அல்லது நீங்கள் காசு கொடுத்து கடையிலிருந்து எலுமிச்சை பழத்தை வாங்கி வரலாம் இதை விடுத்து வேறு ஒருவருடைய கைகளிலிருந்து எலுமிச்சை பழத்தை வாங்க கூடாது. குறிப்பாக உங்களுக்கு கெட்டது நினைப்பவர்கள், உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கைகளிலிருந்து நீங்கள் எலுமிச்சை பழத்தை கட்டாயம் வாங்கவே கூடாது. இது உங்களுக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்துமே தவிர, நன்மைகள் எதுவும் செய்யாது எனவே எலுமிச்சையிடம் இருந்து சற்று எச்சரிக்கையாக இருங்கள். அதிகம் எலுமிச்சையை வீட்டில் திருஷ்டிக்கு பயன்படுத்தி காய விடுங்கள்.

- Advertisement -