உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் என்ன பலன் உண்டு தெரியுமா ?

Lord sooriyan

உலகிற்கே ஒளிதருபவராகவும், நவகிரகங்களில் அனைத்துக்கும் முதன்மையாக இருப்பவர் “சூரிய பகவான்”. ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகிய நல்ல வலுவான உடலமைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறார் சூரிய பகவான் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த ஜாதகருக்கு அவர் வாழ்வில் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு அந்த சூரிய பகவான் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் எந்தெந்த வீடுகளில் இருப்பதால் என்னென்ன பலன்கள் ஏற்படுகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

astrology

ஒரு ஜாதகருக்கு சூரியன் அவரது “லக்னம்” என்கிற 1 ஆம் வீட்டிலேயே இருந்தால் அந்த ஜாதகர் மேற்கொள்ளும் அணைத்து செயல்களிலும் வெற்றி பெரும் யோகம் உடையவராக இருப்பார். அதே நேரத்தில் மிகுந்த கோபம் கொள்ளும் குணமுடையவாறாகவும், சில சமயங்களில் பொறுமையற்ற தன்மை கொண்டவராக செயல்படுவார். மத்திம வயதுகளில் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படும்.

இந்த சூரிய பகவான் ஒரு ஜாதகருக்கு 2 ஆம் வீட்டில் ( லக்கினத்திற்கு அடுத்த கட்டத்தில்) இருந்தாலும், அந்த இரண்டாம் வீடு சூரியனுக்குரிய வீடுகளான மேஷம், சிம்மம் போன்ற ராசிகளாக இருந்தால் நன்மையான பலன்கள் ஏற்படும். அப்படியில்லாத பட்சத்தில் கல்வியில் தடையும், முரட்டு குணங்களையும் ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஜாதகரின் வாழ்க்கை துணையோடு எப்போதும் ஒரு மனவருத்தம் இருக்கும்.

astrology

சூரிய பகவான் ஜாதகத்தில் ஒருவருக்கு 3 ஆம் இடத்தில் (லக்கினத்தில் இருந்து 3 ஆம் கட்டம்) இருந்தால் அந்த நபர் எதற்கும் அஞ்சாத குணம் கொண்டவராக இருப்பார். தன்னை எதிர்ப்பவர்கள் கொட்டத்தை அடக்கும் பராக்கிரமம் கொண்டவராக இருப்பார். ஒரு சிலருக்கு அவர்களது உடன்பிறந்தவர்களோடு மனஸ்தாபம் ஏற்படலாம். வீரமிக்க செயல்களில் ஈடுபட்டு புகழ் பெறுவார். மேலும் சிறந்த பொருட் சேர்க்கையும் உண்டாகும்.

- Advertisement -

ஜாதகத்தில் 4 ஆம் வீட்டில் (லக்கினத்தில் இருந்து 4 ஆம் கட்டம்) ஒருவருக்கு சூரியன் இருந்தால் அவருக்கு அவ்வளவு சிறப்பான வாழ்க்கை அமையாது. தீய நண்பர்களின் சகவாசத்தால் பல கேடான வழிகளில் தனது முன்னோர்களின் சொத்துக்களை அழித்துக்கொண்டிருப்பார். சாதாரண பணிகள் அல்லது தொழில்களையே செய்வார்கள். மன நலக் குறைபாடுகளால் அவதியுறுவர்.

astrology

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் 5 ஆம் வீட்டிலிருந்தால் (லக்கினத்தில் இருந்து 5 ஆம் கட்டம்) அந்த நபர் மிகுந்த அறிவாற்றல் மிக்க நபராக இருப்பார். எந்த ஒரு தீமையான விஷயங்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெறக்கூடியவராவார். அதிகமான இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு பயணம் செல்லக்கூடிய யோகத்தையும் ஏற்படுத்தும். ஆனால் இவரின் பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

6 ஆம் வீட்டில்(லக்கினத்தில் இருந்து 6 ஆம் கட்டம்) ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருந்தால் அவருக்கு அவரது எதிரிகளால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படும். அதே நேரத்தில் தனது மதி நுட்பத்தால் அவர்களை வெற்றிகொள்ளக்கூடிய திறமையும் இருக்கும். ஆரோக்கியமான உடலையும், சிறந்த செரிமான சக்தியையும் இது ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு அரசாங்கத்தால் கவுரவிக்கப்படக்கூடிய அமைப்பையும் ஏற்படுத்தும்.

astrology

ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியன் 7 ஆம் வீட்டிலிருந்தால்(லக்கினத்தில் இருந்து 7 ஆம் கட்டம்) பெண்கள் மீது அதிக மோகங்கொண்டவராகவும், அதன் காரணமாக பல பிரச்சனைகளை அவர் சந்திக்கக்கூடிய நிலை ஏற்படும். வாழ்க்கை சாதாரண நிலையிலேயே எவ்வித முன்னேற்றமின்றி இருக்கும். அதே நேரத்தில் அந்த நபருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்புகள் அடிக்கடி வரும்.

சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் 8 ஆம் வீட்டிலிருந்தால்(லக்கினத்தில் இருந்து 8 ஆம் கட்டம்) அவரின் சந்ததிகளுக்கு அடிக்கடி ஏதேனும் ஒரு உடல் நலக் குறைபாடு ஏற்படும். ஜாதகரின் ஒரு கண் அல்லது இரு கண்களின் பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கையை ஒரு விதமான விரக்தியான நிலையிலேயே வாழ்வார்கள். பொதுவாக சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் 8 ஆம் இடத்தில் இருப்பது அதிக நன்மையை ஏற்படுத்தாது.

astrology

9 ஆம் வீட்டில்(லக்கினத்தில் இருந்து 9 ஆம் கட்டம்) சூரியன் இருக்க பிறந்த ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம் உண்டாகும். அதே நேரத்தில் அவருக்கும் அவரின் தந்தைக்கும் இருக்கும் உறவில் ஒரு இடைவெளியை உண்டாகும். பிற உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் அவ்வளவு நெருக்கமாக இருக்க மாட்டார். அதே வேளையில் ஜாதகர் சிறந்த செல்வம் ஈட்டக்கூடியவராகவும், அடிக்கடி பயணம் மேற்கொள்பவராகவும் இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் 10 ஆம் இடத்தில் இருந்தால்(லக்கினத்தில் இருந்து 10 ஆம் கட்டம்) அந்த ஜாதகர் உடல் மற்றும் மனோ பலமிக்கவராக இருப்பார். வீரக்கலைகளில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருக்கக்கூடும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரங்களில் கொடிகட்டி பறப்பார். ஆடம்பரமான வீடு, வாகனம் போன்றவை அமையும். வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய ராசி உண்டாகும்.

astrology

11 ஆம் வீட்டில் உள்ள சூரியன் ஒருவருக்கு எளிதில் நோய் பிடிக்காத உடலையும், நீண்ட காலம் வாழக்கூடிய வரத்தை தருவார். இவர்களுக்கு கீழ் வேலை செய்கிறவர்களின் திறனால் இவருக்கு பேரும், புகழும் கிட்டும். ஒரே நேரத்தில் பல விதமான தொழில்களில் ஈடுபட்டு அதில் மிகுந்த செல்வத்தை ஈட்டுவார். சமூகத்தால் மதிக்கப்படக்கூடிய நிலைக்கு உயர்வார்கள்.

ஜாதகத்தில் 12 ஆம் வீட்டில் (லக்கினத்தில் இருந்து 12 ஆம் கட்டம்) இருக்கும் சூரியனால் இந்த நபர் எடுக்கும் எத்தகைய முயற்சிகளிலும் சிறு தடங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவரின் வாழ்க்கை அவ்வளவு சிறப்பான நிலையிலிருக்காது அதே நேரத்தில் கோவில், மதம் சம்பந்தமான காரியங்களை முன்னின்று செய்யக்கூடிய யோகத்தை உடையவர்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சராசரியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிப்படி எந்த பரிகாரம் செய்தால் தொழிலில் பணம் குவியும் தெரியுமா ?

இந்து போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.