100 வயது வரை சந்தோஷமா வாழணும்னு ஆசையா? அப்ப கவலைப்படாதீங்க! இத படிச்சு பாருங்க.

old-man-sivan
- Advertisement -

எல்லோருக்குமே நூறு வயது வரை வாழ ஆசை தான். ஆனால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏண்டா வாழுறோம்? என்கிற நிலைமைக்கு நம்மை தள்ளி விடுகின்றனர். உண்மையைக் கூற வேண்டுமெனில் இந்த நிலைக்கு காரணம் மற்றவர்கள் அல்ல. நீங்களே தான்.. இப்படி சொன்னால் யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். அது எப்படி நான் காரணமாக இருக்க முடியும்? இதெல்லாம் ஓவர் என்று கொந்தளிக்காதீர்கள். ஆமாங்க, ‘ஏண்டா வாழறோம்?’ இந்த வார்த்தையை நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணமாக இருப்பீர்கள். என்ன ஆச்சரியமா இருக்கா? அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் அலசி ஆராய்ந்து விடுவோம் வாருங்கள்.

sad-man

நீங்க எப்பவுமே கவலையில் இருந்தால் மற்றவர்களின் செயல்கள் உங்களை எரிச்சலூட்டுவதாக அமைந்துவிடும். முடிந்தவை முடிந்தவை தான். கடந்தகால சோகங்களையும், பிரச்சினைகளையும் மறந்தால் தான் நிகழ்காலத்தில் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும்.

- Advertisement -

அடுத்தவர்களின் வாழ்க்கையோடு நம்முடைய வாழ்க்கையை கட்டாயம் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரியாது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களை போல இருக்க ஆசைப்படாதீர்கள். ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எந்த உறவிற்காவது இருந்தால் அதிலிருந்து நீங்கள் உடனே வெளியேறுவது தான் உங்களுக்கு நல்லது.

sad

எல்லா விஷயத்திலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் உங்கள் வாழ்க்கை போராட்டக்களம் ஆகிவிடும். யாராலும் எல்லோருக்கும் உண்மையாக இருக்க முடியாது. உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள் போதும். எல்லா நேரமும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. சாதகமாகவே இருப்பது வாழ்க்கை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களின் தவறுகளை பெரிது படுத்தாதீர்கள். தவறு செய்யாத மனிதர்களே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை மிகவும் அழகானது அதில் மற்றவர்களைப் பற்றி பேசி வீணடிக்காதீர்கள்.

happy-family

தேவையற்ற ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நடக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட்டு காலத்தைத் வீணாக்க வேண்டியிருக்கும். அந்தந்த பருவத்தில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீர வேண்டும் அடக்கி ஒடுக்கி வைத்தால் வீடு ஜெயில் ஆகிவிடும். நீங்கள் அதில் கைதியாகி விடுவீர்கள்.

- Advertisement -

உங்களது துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு சரியான நபரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளேயே வைத்து புழுங்காதீர்கள். உங்களுக்கு எப்பொழுது எல்லாம் அமைதி தேவை என்று தோன்றுகிறதோ அந்த நேரத்தில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு தனியாக ஓரிடத்தில் அமர்ந்து ஆழ்ந்து சுவாசியுங்கள்.

Thiyanam

அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு தேவையற்றது. நம்மைப்பற்றி நாம் எப்போதும் உயர்வாக நினைக்க வேண்டும். ‘இதுவும் கடந்து போகும்’ என்ற வாசகத்தை பிரச்சினைகள் வரும் பொழுது அடிக்கடி உச்சரியுங்கள். எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை என்பது புரியும்.

கஷ்டங்கள் உங்களை மென்மேலும் வலுப்படுத்த வேண்டுமே தவிர அது உங்களை ஜெயித்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். உங்களுக்கு நீங்கள் தான் இறுதி வரை துணையாக இருக்க முடியும், மற்றவர்கள் வருவார்கள் போவார்கள் அவ்வளவுதான். கணக்கு பார்த்து வாழவே வாழாதீர்கள். கணக்கு பார்க்காமல் ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்.

money

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை தான். ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் தனிப்பட்ட விதத்தில் அழகு தான். பிரச்சனைகளைக் கண்டு தளர்ந்து போகாதீர்கள். எந்தப் பிரச்சினையும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கப் போவதில்லை. இப்போது பெரியதாகத் தோன்றும் விஷயம் நாளைக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பிறரை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் எதையும் மறந்துவிடாதீர்கள். உங்களிடம் இருக்கக்கூடாத குணம் பொறாமை குணம் தான் என்பதை ஆழமாக மனதில் பதியுங்கள். பொறாமை உங்களின் விலைமதிப்பில்லாத நேரத்தை விழுங்கும். உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் என்பதை எப்போதும் உறுதியாக நம்புங்கள்.

praying

எதையும் எதிர்த்துப் போராடத் துணிந்து விட்டால் உங்களை ஜெயிக்க யாருமே இருக்க முடியாது. எதற்காகவும் கவலை கொள்ள தேவையில்லை. நீங்கள் எதற்காக உலகில் படைக்கப்பட்டிருக்கிறீர்களோ அது நடந்தே தீரும். இதனால் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

Sudarshana vishnu

இப்போ சொல்லுங்க? உங்க பிரச்சனைக்கு காரணம் நீங்களா? இல்லை இன்னுமும் மற்றவர்கள் தான் என்று நினைக்கிறீர்களா? மேலே சொன்னது எல்லாம் நீங்க ஃபாலோ பண்றிங்களா? இல்லை என்றால், இனிமே ஃபாலோ பண்ணி தான் பாருங்களேன். அப்பறம் என்ன? உங்களுக்கு ஆயுசு 100 தான் போங்க.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல இருக்கிற ஒரு தக்காளியை வைத்தே, உங்க வீட்டு தொட்டியில் சுலபமாக தக்காளிச் செடியை வளர்த்து விடலாம்! ஈஸியான சின்ன சின்ன டிப்ஸ்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -