நம்முடைய முன்னோர்கள் காலத்தில் 60 , 70 வயதை தொடும்பொழுது தான் லேசாக அவர்கள் முகத்தில் சுருக்கம் விழுவதை பார்க்க முடியும். ஆனால் இன்றைய காலத்தில் இளமையிலேயே பலருக்கும் முகச்சுருக்கம் என்பது ஏற்பட்டு வயதான தோற்றத்தை பெறுகிறார்கள். இதற்கு அவர்களின் வாழ்வியல் நடைமுறையே காரணம் என்றாலும் இந்த முக சுருக்கத்தை நீக்கி இளமையான தோற்றத்தை பெறுவதற்கு வெள்ளரிக்காயை வைத்து நாம் ஒரு கிரீம் தயார் செய்து பயன்படுத்தினாலேயே போதும். முகச்சுருக்கம் அற்ற இளமையான தோற்றத்தை பெற முடியும். அந்த கிரீமை எப்படி தயார் செய்வது என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முகச்சுருக்கம் ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. எதனால் முகச்சுருக்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்து கொள்வது முக சுருக்கத்தை நீக்கும். வயதானாலும் முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாகவே தென்பட வேண்டும் என்று நினைப்பவர்களும், இளமையில் ஏற்பட்ட முக சுருக்கத்தை நீக்கி பிரகாசமான சருமத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த கிரீமை பயன்படுத்தினால் போதும்.
இதற்கு நாம் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை தான் பயன்படுத்த போகிறோம். முதலில் நமக்கு தேவைப்படுவது வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயை கேரட் துருவுவது போல் துருகி அதன் சாரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளரிக்காய் சாறு மூன்று ஸ்பூன் இருந்தால் போதும். அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜல்லை சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும்.
இது செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயாக இருந்தால் தான் நல்ல பலனை தரும். கடைகளில் விற்கக்கூடிய தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம். அதே போல் கற்றாழை ஜெல்லையும் எந்தவித வாசனையற்ற இயற்கையான கற்றாழை ஜெல் விற்கப்படும். அதை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. இவை மூன்றையும் ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது ஒரு வித பேஸ்ட் பதத்திற்கு வரும். அவ்வளவுதான் கிரீன் தயாராகிவிட்டது.
இதை தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவி இதிலிருந்து சிறிதளவு மட்டும் எடுத்து முகத்தில் நன்றாக தடவி ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு அப்படியே படுத்து உறங்க வேண்டும். காலையில் எழுந்து முகத்தை கழுவிக்கொள்ளலாம். இப்படி தினமும் தொடர்ச்சியாக நாம் செய்வதன் மூலம் நம் முகத்தில் இளமையிலேயே சுருக்கம் ஏற்பட்டு இருந்தாலும் முதுமையால் சுருக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும். என்றும் இளமையுடன் திகழ்வோம்.
இதையும் படிக்கலாமே: முடி வேகமாக வளர
எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம்முடைய முகச்சுருக்கத்தை நீக்கி இளமையான தோற்றத்தை பெற முடியும். தேவையற்ற கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இப்படி இயற்கையான பொருட்களை பயன்படுத்தி என்றும் இளமையுடன் திகழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.