சுண்டு விரல் சொல்லும் ரகசியம்

little-finger
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் பலவகையான ஜோதிடங்கள் இருந்தாலும், ஒருவரின் சுண்டு விரலைக் கொண்டு அவர்களுடைய குணாதிசயங்களை கண்டுபிடித்து விட முடியும். இப்படி சுண்டு விரலைக் கொண்டு கணிக்கும்  பலன்கள் பொதுவானது. துல்லியமான பலன்களை அறிய அவர்களது பிறந்த நேரமும் ஜாதகமும் அவசியம்.

little-finger

சுண்டு விரல் ஜோசியம்

- Advertisement -

இந்த சுண்டுவிரல் ஜோசியம் தென்கொரியாவில் பரவலாக காணப்பட்டாலும் நம் நாட்டிற்கும் இது பொருந்தும். ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் சுண்டுவிரலின் அளவை பார்க்க வேண்டும்.

முதலாவதாக மோதிர விரலின் முதல் கோட்டிற்கு, சமமானதாக சுண்டுவிரல் இருந்தால், அவர்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

 Littlefinger

1. இவர்கள் மற்றவர்களிடம் பழகும்போது மிகவும் ஜாக்கிரதையாக பழகுவார்கள்.
2. ஒருவரைப் பற்றி நன்கு அறிந்த பின் தான் அவர்களுடன் நெருக்கமாக பழக தொடங்குவர்.
3. கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பர்.
4. மிகவும் நேர்மையானவர்களாக இருப்பர்.
5. நேர்மை இல்லாதவர்களை கண்டு கோபம் அடைவார்கள்.
6. மிகவும் பொறுமைசாலியாக இருப்பார்கள்.
7. இவர்கள் நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் மிகவும் உண்மையாகவும், வெளிப்படையாகவும், பழகுவார்கள்.
8. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களை தலைகனம் கொண்டவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் இவர்களிடம் நெருக்கமாக பழகுபவர்களுக்கு தான் இவரின் உண்மையான, நேர்மையான குணாதிசயங்கள் நன்கு புரிந்திருக்கும்.

இரண்டாவதாக மோதிர விரலின் முதல் கோட்டிற்கு, சுண்டு விரல் சற்று மேலே இருக்கும். இவர்களுடைய குணாதிசயங்களை காணலாம்.

- Advertisement -

 Littlefinger

1. இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் பழகுவார்கள்
2. கடினமான உழைப்பாளி.
3. இவர்களுக்கு விசுவாசமான நண்பர்கள் இருப்பார்கள்.
4. இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
5. இவர்கள் அதிகமான கவனத்துடனும், முழுமையான மனதுடனும் தான் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவார்கள்.
6. இந்த குணத்தினால் இவர்கள் மேற்கொள்ளும் எந்த காரியத்திலும் அவர்களது குறிக்கோளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவார்கள்.
7. இவர்கள் யாரிடமும் வீண் சண்டைக்கு செல்ல மாட்டார்கள்.
8. எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்து கஷ்டத்தை சமாளித்து விடுவார்கள்.

மூன்றாவதாக மோதிர விரலின் முதல் உள்ள கோட்டிற்கு, சுண்டு விரல் கீழே இருந்தால் அவர்களுக்கு என்ன பலன் என்பதை காண்போம்.

 Littlefinger

1. இவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர்.
2. இவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் வராது.
3. மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை கொண்டவர்களாக இருப்பார்கள்.
4. இவர்கள் தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் விட்டுக்கொடுக்காமல் விவாதம் செய்வார்கள். அதே சமயம் தங்கள் பக்கம் தவறு இருந்தால் முதலில் வந்து மன்னிப்பு கேட்பவரும் இவர்கள் தான்.
5. இவர்களுக்கு கஷ்டம் ஏற்பட்டாலும், சந்தோஷம் ஏற்பட்டாலும் அதனை வெளிக்காட்டாமல் தன் மனதுக்குள்ளேயே வைத்து இருப்பார்கள்.
6. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவர்கள் மீது எப்போதும் நல்ல மதிப்பு வைத்திருப்பர்.
7. தெரிந்த விஷயத்தில் துணிச்சலுடன் ஈடுபடுபவார்கள். தெரியாத புதிய விஷயத்தில் தலையிட மாட்டார்கள்.

நான்காவதாக அரிய வகையான சுண்டுவிரல் இது. அனைவருக்கும் இருக்காது. மோதிர விரலும், சுண்டு விரலும் ஒரே அளவில் அமைந்திருக்கும்.

 Littlefinger

1. இவர்கள் தனித் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 2. அதிகாரமும், ஆளுமை சக்தியும் கொண்டவர்கள் இவர்கள்.
3. இவர்கள் பிரபலமானவர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்கலாமே:
இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have details about Secret of little finger. Sundu viral jothidam. Little finger astrology. Kai viral jothidam in Tamil.

- Advertisement -